மார்ச் 15, 16-ல் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்... விழிப்பாக இருங்க... 4 நாட்கள் சேவை பாதிக்கும் அபாயம்!
சென்னை: நாடு முழுவதும் மார்ச் 15 மற்றும் 16-ம் தேதியில் 2 நாள் வேலை நிறுத்தத்தை முன்னெடுக்க வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருவதால் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் பங்கு விலக்கல் திட்டத்தில் இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்று அறிவித்தார். மத்திய அரசின் இந்த முயற்சிக்கு பொதுத்துறை வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதனை கண்டித்து நாடு முழுவதும் மார்ச் 15 மற்றும் 16-ம் தேதியில் 2 நாள் வேலை நிறுத்தத்தை முன்னெடுக்க வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்தது. இந்த வேலை நிறுத்தத்தில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் கலந்துகொள் வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருவதால் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
"லிஸ்ட்டில்".. மொத்தம் 21 பேராம்.. ஸ்டாலின் இப்படி செய்யலாமா.. வெடித்து கிளம்பியது பிரச்சனை..!
இந்த நிலையில் வங்கிகள் வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று வங்கி கூட்டமைப்பு இன்று மீண்டும் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வங்கிகள் தொழிற்சங்க கூட்டமைப்பினர் கூறியதாவது:- வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும். மத்திய அரசின் அறிவிப்பால் வங்கிகளுக்கு மட்டும் பாதிப்பில்லை.
பொதுமக்களுக்கும் பாதிப்பு இருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாதிப்பு இருக்கிறது. எனவே அனைத்து பொதுமக்களும் எங்களின் போராட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து எங்களின் போராட்டம் வெற்றியடைய செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று அவர்கள் கூறினார்கள்.