சீனிவாசன் கையெழுத்தா ஓகே ஓகே! 300 கோடிக்கு க்ரீன் சிக்னல்! செக் மூலம் ஓபிஎஸ்க்கு செக் வைத்த இபிஎஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதாக எடப்பாடி பழனிச்சாமி வங்கிகளுக்கு கடிதம் எழுதிய நிலையில் பொருளாளராக நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன் கையெழுத்திட்ட காசோலைகளை வங்கி பரிவர்த்தனைக்கு வங்கிகள் ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

சென்னையை அடுத்த வானகரத்தில் கடந்த 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்த பொருளாளர் பதவி பறிக்கப்பட்டது. மேலும் திண்டுக்கல் சீனிவாசன் புதிய அதிமுக பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

தான் பொருளாளராக தொடர்வதாக ஓ.பன்னீர் செல்வம் கூறிய நிலையில், அதிமுக வங்கி கணக்குகள் உள்ள கரூர் வைஸ்யா, இந்தியன் வங்கி மேலாளர்களுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

 திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் சீனிவாசன்

அதில், 'அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதிமுகவின் வரவு-செலவு கணக்குகளை இனி திண்டுக்கல் சீனிவாசன் மேற்கொள்வார்' என கடிதத்தில் எடப்பாடி கூறி இருந்தார். இதற்கு ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக வங்கிகளுக்கு பதில் கடிதம் அனுப்பினார். அதன்படி கரூர் வைஸ்யா மற்றும் இந்தியன் வங்கி மேலாளர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில், 'அதிமுக வரவு-செலவு கணக்கை தன்னை கேட்காமல் மேற்கொள்ளக் கூடாது.

 ஓபிஎஸ்

ஓபிஎஸ்

இந்திய தேர்தல் ஆணைய சட்டப்படி இன்று வரை நானே அதிமுக பொருளாளராக உள்ளேன். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் தன்னை கேட்காமல் எந்த வரவு-செலவு கணக்கையும் மேற்கொள்ளக் கூடாது. இதையும் மீறி, என்னை கேட்காமல் வரவு-செலவு கணக்கை மேற்கொண்டால் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கடிதத்தில் கூறியுள்ளார். அதிமுக பொருளாளர் பதவி தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி ஆகியோர் தனித்தனியாக வங்கிகளுக்கு எழுதிய போட்டி கடிதத்தால் பரபரப்பு மற்றும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ரூ.300 கோடி வரை இருப்பு

ரூ.300 கோடி வரை இருப்பு

காரணம், அதிமுக சார்பில் இந்த இரண்டு வங்கிகளிலும் சுமார் ரூ.300 கோடி வரை இருப்பு உள்ளது. கரூர் வைஸ்யா வங்கியில் மட்டும் சுமார் ரூ.200 கோடிக்கு மேல் நிரந்தர வைப்பு தொகை உள்ளது. இவ்வளவு பெரிய தொகையை கையாளுவதில்தான் தற்போது, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இரண்டு பேருக்கும் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டுள்ளதால் வங்கிகள் குழப்பம் அடைந்தன. இரு தரப்பும் அதிமுக வங்கி கணக்குக்கு உரிமை கொண்டாடுவதால் யாரை அனுமதிப்பது என வங்கி அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினர். தற்போது ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால், அதிமுக கட்சி சார்பில் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள சுமார் ரூ.300 கோடி பணமும் முடங்கும் அபாயம் ஏற்பட்டது.

 எடப்பாடி தரப்புக்கு நிம்மதி

எடப்பாடி தரப்புக்கு நிம்மதி

வங்கி கணக்கை முடக்குவது குறித்தும் வங்கி அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிச்சாமி வங்கிகளுக்கு கடிதம் எழுதிய கடித்தத்தை ஏற்று, பொருளாளராக நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன் கையெழுத்திட்ட காசோலைகளை வங்கி பரிவர்த்தனைக்கு வங்கிகள் ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை ஏற்கப்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக திண்டுக்கல் கையொப்பமிட்ட காசோலைகளை வங்கிகள் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், இது எடப்பாடி தரப்புக்கு நிம்மதியை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் இந்த தகவல் ஓபிஎஸ் தரப்புக்கு கடும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+