சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிபிசி ஆவணப்பட தடை.. மத்திய அரசுக்கு எதிராக வள்ளுவர் கோட்டத்தில் சமூக செயல்பாட்டாளர்கள் போராட்டம்

இன்று மாலை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு சென்னை போலீசாரிடம் இந்த அமைப்பு அனுமதி கோரியது.

Google Oneindia Tamil News

சென்னை: பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் India: the Modi question ஆவண படத்தை தடை செய்திருக்கும் மத்திய அரசை கண்டித்து சமூக செயல்பாட்டாளர்களின் கூட்டியக்கம் சார்பாக இன்று மாலை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு சென்னை போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

குஜராத் கலவரம் குறித்து பிபிசி இயக்கியுள்ள ஆவணப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் அதுவும் புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தின் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தையொட்டி நடந்த கலவரத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதே அளவில் மக்கள் படுகாயமடைந்தனர். ஏராளமான கூட்டு பாலியல் பலாத்கார சம்பவங்கள் அரங்கேறியது.

உத்திரமேரூர் கல்வெட்டு, சிறுதானியங்கள், பத்ம விருதுகள்.. பிரதமர் மோடியின் மன்கிபாத் உரை முழுமையாக! உத்திரமேரூர் கல்வெட்டு, சிறுதானியங்கள், பத்ம விருதுகள்.. பிரதமர் மோடியின் மன்கிபாத் உரை முழுமையாக!

பிபிசி

பிபிசி

இந்நிலையில், இந்த கலவரத்தில் இங்கிலாந்தை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். இதனையடுத்து பிரிட்டிஷ் விசாரணை கமிஷன் விசாரணை நடத்தியது.இந்த விசாரணை அறிக்கையை அடிப்படையாக கொண்டு பிபிசி செய்தி ஊடகம் சமீபத்தில் 'India: The Modi Question' எனும் ஆவணப்படத்தை இயக்கியது. இந்த ஆவணப்படத்தில் உண்மைக்கு மாறான தகவல்கள் சித்தரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் கடும் அமளியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத்

குஜராத்

இதையடுத்து BBC செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் India: the Modi question ஆவண படத்தை தடை செய்திருக்கும் மத்திய அரசை கண்டித்து சமூக செயல்பாட்டாளர்களின் கூட்டியக்கம் சார்பாக போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இன்று மாலை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு சென்னை போலீசாரிடம் இந்த அமைப்பு அனுமதி கோரியது.

பரிசீலனைக்குப் பின், மனுதாரர் இன்று மாலை 4 மணியளவில் சென்னை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகில் - காவல் உதவி ஆணையாளர் குறிப்பிடும் இடத்தில் குழுமி சுமார் 100 (நூறு) நபர்கள் மிகாமல் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் எவ்வித இடையூறும் செய்யாமல் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடாமல், கீழே குறிப்பிடப்பட்டுள்ள வரையறைகளின்படி அமைதியான - முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. .

ஆவணப்படம்

ஆவணப்படம்

மேலும், ஆர்ப்பாட்டம் மாலை 5 மணிக்குள் முடிக்கப்படவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் நீடித்தல் கூடாது. ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் கலந்து கொண்டவர்கள் அமைதியாக கலைந்து செல்லவேண்டும். காவல்துறையின் வரையறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் நடத்தப்படவேண்டும். எக்காரணத்தைக்கொண்டும் வாகனங்களை ஆர்ப்பாட்டம் நடத்தும் இடத்தில்/பகுதியில் கொண்டுவரக் கூடாது. ஆர்ப்பாட்டம் மாலை 4 மணிக்கு ஆரம்பித்து மாலை 5 மணிக்குள் முடிக்கப்படவேண்டும்.

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும். போக்குவரத்திற்கு எவ்விதத்திலும் இடையூறு இல்லாமல், வாகனங்கள் ஒழுங்காகச் செல்ல பொதுமக்கள் ஒழுங்காக சென்று வர ஒத்துழைக்கவேண்டும். பொதுமக்கள் தங்களது அன்றாட அலுவல்களைச் செய்வதில் எவ்வித இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். காவல் அதிகாரிகள் குறிப்பிடும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவேண்டும். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்பவர்கள் சாலை முழுவதும் ஆக்கிரமிப்பு செய்திடல் கூடாது. பிற மதத்தினர் / இனத்தினர் / தனிப்பட்ட நபர்கள் / அரசியல் தலைவர்கள் / அதிகாரிகள் மீது தாக்கிப் பேசுவதோ, மனம் புண்படும்படியான ஆட்சேபகரமான சட்டப்புறம்பான பேச்சுக்கள் பேசவோ, முழக்கங்கள் எழுப்பவோ, பதாகைகள் மூலமாக வெளிப்படுத்தவோ கூடாது.

விதிமுறை

விதிமுறை

ஆர்ப்பாட்டம் தொடர்பாக அமைக்கப்படும் பேனர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெற வேண்டும். அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்கள் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கூம்புவடிவ ஒலிபெருக்கி உபயோகப்படுத்தக்கூடாது. மீறினால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்பவர்கள் உருவ பொம்மைகளை கொண்டு வரவோ / எரிக்கவோகூடாது, போன்ற அக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

English summary
BBC documentary ban: Social activist group to protest against Union Government decision.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X