ரூ.5 லட்சம் பெறும் மோடியின் காப்பீட்டு திட்டம்.. ஆயுஷ்மான் பிரதான் மந்திரி இன்சூரன்ஸ்.. இதான் ரூல்ஸ்
சென்னை: மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டு திட்டம் (Ayushman Bharat Health Insurance Scheme) என்றால் என்ன தெரியுமா? இந்த திட்டத்தை அரசு கொண்டுவந்திருப்பதன் நோக்கம் என்ன? மோடி காப்பீடு திட்டத்தின் நன்மைகள் என்னென்ன? பிரதம மந்திரி மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான தகுதி வரம்புகள் என்னென்ன? ரேஷன் கார்டு இருந்தாலே இந்த திட்டத்தின், அட்டையை எளிதாக பெற முடியுமா? இவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
இந்தியாவிலுள்ள அனைத்து குடிமக்களுக்கும் மருத்துவ சேவைகள் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகவே கொண்டுவரப்பட்ட திட்டம் இதுவாகும்.

கடந்த 2018ல் பிரதமர் மோடி துவக்கி வைத்திருந்த இந்த திட்டத்தில், ஒரு குடும்பத்துக்கு, வருடத்துக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சேவை வழங்கப்படுகிறது.. நோயில் தாக்கப்பட்டு, போதிய பணம் இல்லாததால், எத்தனையோ உயிர்கள் சிகிச்சையின்றி இறக்க நேரிடுகின்றன.. பலரும் கடன் வாங்கி சிகிச்சையை செய்யும் நிலைமை உள்ளது.
இதுபோன்ற நெருக்கடியை தவிர்த்து உதவிடும் வகையில் கொண்டுவரப்பட்டதுதான் இந்த ஆயுஷ்மான் பாரத் பிரதார் ஜன் ஆரோக்கியா என்கிற மருத்துவ காப்பீடு திட்டம்...
மருத்துவ காப்பீட்டு திட்டம்
உலகிலேயே மிகப்பெரிய, அரசால் முழுவதுமாக மருத்துவக் காப்பீடு அளிக்கும் திட்டம் இதுவென்பதால் பொதுமக்களின் ஆதரவை அபரிமிதமாக பெற்று வருகிறது. ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு உள்ளதால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.
இதற்கு எந்த வரம்புகளும் இல்லை.. குடும்பத்தின் அளவு, வயது, பாலினம் கிடையாது.. மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு (inpatients) இந்த சலுகை வழங்கப்படுகிறது.. முக்கியமாக கேன்சர், சர்க்கரை நோய், நீரிழிவு, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் உட்பட 26 பிரிவுகளில் 1669 மருத்துவ முறைகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய பிரிவுகளில் உள்ளவர்கள், மோடி காப்பீடு திட்டத்தின் சலுகையை பெறமுடியும்..
யார் யாருக்கு செல்லுபடியாகும்
கிராமப்பற பகுதிகள் என்றால், ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர், மண் சுவர், கூரையுடன் ஒரே ஒரு அறை கொண்ட வீடுகளில் வசிக்கும் குடும்பம், 16 முதல் 59 வயதுக்குட்பட்ட உறுப்பினர் யாரும் இல்லாத குடும்பம், 16 முதல் 59 வயதுக்குட்பட்ட ஆண் உறுப்பினர் யாருமற்ற குடும்பம், உடல் ஊனமுற்றோர், நிலமற்ற குடும்பங்கள் மற்றும் தினக்கூலி செய்பவர்கள் இதன் பலனை பெற முடியும்.
இதுவே நகர்ப்புற பகுதிகள் என்றால் பிச்சை எடுப்பவர், குப்பை சேகரிப்பாளர், வீட்டு வேலை செய்பவர், செருப்பு தைப்பவர், பிளம்பர், கட்டுமானத் தொழிலாளர், கொத்தனார், வெல்டர், பாதுகாப்பு காவலர், துப்புரவு பணியாளர், சுகாதார பணியாளர், கைவினைத் தொழிலாளர், தையல்காரர், ஓட்டுநர், போக்குவரத்து பணியாளர், நடத்துனர், வண்டி இழுப்பவர்கள், டிரைவர்களுக்கு உதவியாளர், சிறு நிறுவனங்களில் பணி புரிபவர்கள், மெக்கானிக், எலக்ட்ரீஷியன் போன்றோர் அடக்கம்.
யாருக்கெல்லாம் கிடைக்காது
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, இந்த திட்டத்தில் சலுகைகள் உண்டு.. ஆனால், டூ வீலர்கள், 3 சக்கர வாகனம் அல்லது கார் போன்ற வாகனங்களை சொந்தமாக வைத்திருப்பவர்கள், அரசு ஊழியர்கள், மாத வருமானம் ரூ.10,000க்கு மேல் உள்ளவர்கள், விவசாய இயந்திரங்கள், உபகரணங்கள், சொந்த வீடு, கிசான் அட்டை வைத்திருப்பவர்கள், 5 ஏக்கருக்கு மேல் நிலமுள்ள விவசாயிகள், வீடுகளில் ஏசி, லேண்ட்லைன் போன் வைத்திருப்பவர்கள் இந்த அட்டைக்கு விண்ணப்பிக்க முடியாது.
ரேஷன் கார்டு இருந்தால் போதும்
ரேஷன் கார்டு இருந்தாலே போதும், ஆன்லைனிலேயே இந்த ஆயுஷ்மான் கார்டை பெறமுடியும்.. இதற்கு உங்களது செல்போன் நம்பருடன் ஆதார் கார்டையும் இணைத்திருக்க வேண்டும்.. ஆயுஷ்மான் லிஸ்ட்டில் உங்களது பெயரும் இடம்பெற்றிருக்க வேண்டும்.. ஒருவேளை, உங்களது பெயர் இல்லையானால், ரேஷன் கார்டு அல்லது தொழிலாளர் அட்டை கொண்டு பெயரை சேர்த்து கொள்ளலாம்.
தமிழகத்தில், https://cmchistn.com/covid_empanlled_hospital.php என்ற அரசின் வெப்சைட்டில், இந்த திட்டத்தின் கீழ் வரும் மருத்துவமனைகளை அறிந்து கொள்ளலாம்.. அதில் பதிவாகியிருக்கும் மருத்துவமனையை தவிர மற்ற மருத்துவமனைகளில் காப்பீடு அட்டை செல்லாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications