சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உயரும் வேக்சின் தேவை.. உற்பத்தியை அதிகரிக்கும் சீரம் மற்றும் பாரத் பயோடெக்.. புதிய டார்கெட் நிர்ணயம்

Google Oneindia Tamil News

சென்னை: பாரத் பயோடெக் நிறுவனம்மற்றும் சீரம் இன்ஸ்டியூட் இரண்டும் வேக்சின் உற்பத்தியை வரும் மாதங்களில் உயர்த்த போவதாக மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா வேக்சின்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. மாநிலங்கள் அனைத்திற்கும் சரியான அளவில் வேக்சின்களை ஒதுக்க முடியாமல் மத்திய அரசு கடுமையாக திணறி வருகிறது.

மொரிஷியஸ் தீவில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.7 ஆக பதிவு.. சுனாமி எச்சரிக்கை இல்லை மொரிஷியஸ் தீவில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.7 ஆக பதிவு.. சுனாமி எச்சரிக்கை இல்லை

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவேக்சின் மற்றும் சீரம் இன்ஸ்டியூட் உற்பத்தி செய்யும் ஆக்ஸ்போர்ட் - ஆஸ்டர்செனகாவின் கோவிட்ஷீல்ட் இரண்டும் பயன்பாட்டில் உள்ளது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் மாநில அரசுகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு இந்த வேக்சின் உற்பத்தி வேகமாக நடக்கவில்லை. இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறையும், மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகமும் இது தொடர்பாக இரண்டு நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு இருந்தது. வரும் மாதங்களில் வேக்சின் உற்பத்தி எப்படி நடக்கும் என்று இந்த 2 நிறுவனங்களிடமும் மத்திய அரசு பிளான் கேட்டு இருந்தது.

பதில்

பதில்

இதற்கு பாரத் பயோடெக் இயக்குனர் கிருஷ்ணா மோகன் அளித்த பதிலில், கோவேக்சின் உற்பத்தி வேகப்படுத்தப்பட்டு வருகிறது. ஜூலை மாதம் இதன் உற்பத்தி 3.32 கோடியாக உயர்த்தப்படும். ஆகஸ்ட் மாதம் இதன் உற்பத்தி 7.82 கோடி ரூபாயாக உயர்த்தப்படும். செப்டம்பரில் இதே அளவு உற்பத்தி செய்யப்படும் என்று விளக்கம் அளித்துள்ளார்.

சீரம்

சீரம்

சீரம் நிறுவனத்தின் இயக்குனர் பிரகாஷ் குமார் சிங் அளித்த பதிலில், ஆகஸ்ட் மாதம் 10 கோடி வேக்சினை உற்பத்தி செய்யும் வகையில் உற்பத்தி உயர்த்தப்படும். ஜூன், ஜூலை மாதங்களிலும் அதற்கு ஏற்றபடி உற்பத்தி உயர்த்தப்படும். கண்டிப்பாக மாத உற்பத்தியை ஆகஸ்டில் 10 கோடி கொண்டு செல்லும் வகையில் உற்பத்தியை பெருக்குவோம் என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உற்பத்தி

உற்பத்தி

இந்தியாவில் வேக்சின் தேவை அதிகரித்துள்ள நிலையில் இரண்டு நிறுவனங்களும் உற்பத்தியை பெருக்க முடிவு செய்துள்ளன. மத்திய அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க உற்பத்தியை இந்த நிறுவனங்கள் அதிகரிக்கும். அதே சமயம் இதில் சில டோஸ்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Bharath Biotech and Serum will increase its production in August month by 7.82 Crore and 10 Crore respectively.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X