இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி.. 3வது நாளாக தொடரும் சிகிச்சை.. என்ன நடந்தது?
சென்னை: இயக்குநர் பாரதிராஜாவுக்கு 3வது நாளாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகன் மனோஜ் மறைவுக்கு பின் இயக்குநர் பாரதிராஜா கடுமையான மன உளைச்சலில் இருந்த நிலையில், அவர் மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் ஓய்வில் இருந்தார். அண்மையில் சென்னை திரும்பிய அவர், தற்போது சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.
16 வயதினிலே படத்தின் மூலமாக இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த பாரதிராஜா, சிவப்பு ரோஜாக்கள், கிழக்கு சீமையிலே, முதல் மரியாதை, வேதம் புதிது என்று இந்திய சினிமாவுக்கே அடையாளமாகினார். தற்போது நடிகராக பல்வேறு படங்களில் பாரதிராஜா அசத்தி வந்த நிலையில், திடீரென அவரின் மகன் மனோஜ் பாரதிராஜா மார்ச் மாதத்தின் போது மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தமிழ் சினிமாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மகன் மனோஜின் மறைவால் இயக்குநர் பாரதிராஜா கடுமையான மன உளைச்சலில் இருந்தார். பெரிதாக சினிமாவில் கவனம் செலுத்தாமல் குடும்பத்தினருடன் இருந்து வந்தார். இதன்பின் மலேசியாவில் உள்ள தன்னுடைய மகளின் வீட்டில் சில காலம் பாரதிராஜா ஓய்வில் இருந்தார்.
மகன் மனோஜின் இறப்பில் இருந்து பாரதிராஜாவால் மீண்டு வர முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் பாரதிராஜாவின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இயக்குநர் பாரதிராஜா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
3 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் பாரதிராஜா, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக அவரது குடும்பத்தினரிடம் விசாரிக்கையில், வழக்கமான பரிசோதனைக்காக பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறி இருக்கின்றனர். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தேனி மண்ணில் பாரதிராஜா உடல் .. கை குழந்தைகளுடன் காத்திருக்கும் பெண்கள்.. பிரபலங்களின் நெகிழ்ச்சி செயல் -
"இந்த உலகத்தை விட்டு போக பயமாக இருக்கிறது..." ஏனென்றால்! மறைவுக்கு முன் பாரதிராஜா சொன்ன வார்த்தை -
"இனி யாரோடு பாடுவேன்? பாரதிராஜாவை சிரிக்க வைத்த வீடியோவை பகிர்ந்து உருகிய வைரமுத்து!" ரசிகர்கள் ஆறுதல் -
பாரதிராஜா இறுதி சடங்கிற்கு பிறகு மனைவி வெளியிட்ட உருக்கமான அறிக்கை.. ஆறுதல் சொல்லும் ரசிகர்கள் -
பாக்ஸுக்குள் இருந்த வைரக்கல்... பாரதிராஜாவின் அந்த ஒரு முடிவால் ராதாரவிக்கு ஏற்பட்ட வருத்தம் என்ன? -
"என் குருநாதர்.. என்னால வர முடியாம போச்சு.." பாரதிராஜா மறைவு.. கண் கலங்கிய நெப்போலியன்.. அஞ்சலி! -
அது நடக்காமலேயே போயிடுச்சு.. பாரதிராஜாவிற்கு தேனியில் அஞ்சலி செலுத்திய கருணாஸ் உருக்கமான பேட்டி -
பாரதிராஜா உடலுக்கு சொந்த ஊரில் இறுதி சடங்கு.. அரசு மரியாதையுடன் நல்லடக்கம்! அமைச்சர் ராஜ்மோகன் தகவல் -
சொந்த மண்ணில் சாய்ந்தார் இயக்குனர் இமயம்.. 72 குண்டு முழங்க அரசு மரியாதையுடன் பாரதிராஜா உடல் அடக்கம் -
சொந்த மண்ணை நோக்கி தொடங்கியது பாரதி ராஜாவின் இறுதி பயணம்! நாளை முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி












Click it and Unblock the Notifications