என் தாய் மாமா “எம்எல்ஏ”.. அவர் கட்சில விக்ரமன் உறுப்பினர்! பிக்பாஸில் அரசியல் செய்யும் அஜீம்
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அஜீம், விக்ரமன் இருக்கும் கட்சியின் தன்னுடைய தாயின் உடன்பிறந்த சகோதரர் எம்.எல்.ஏவாக இருப்பதாக பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணியில் இருந்து வருகிறது விஜய் டிவி. இதில், ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றன. இதில் பணிபுரிந்த பலர் தமிழ் சினிமாவில் உச்சம் தொட்டிருக்கிறார்கள்.
குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன், நீயா நானா, கேபிஒய் சாம்பியன்ஸ், பிக்பாஸ், பிபி ஜோடிகள் என விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து இழுத்து வருகின்றன.

பிக் பாஸ்
இதில் குறிப்பாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆண்டுக்கு 106 நாட்கள் ஒளிபரப்பாகி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்க்கும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் ராஜு வெற்றிபெற்றார்.

பிக் பாஸ் 6
இந்த நிலையில் பிக் பாஸ் 6 வது சீசன் கடந்த 2 வாரம் முன் தொடங்கி வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. இதில் விஜய் டிவி பிரபலங்கள், சீரியல் நடிகர்கள், நடன இயக்குநர்கள், மாடல்கள், இசையமைப்பாளர்கள், நகைச்சுவை கலைஞர்கள், யூடியூப், டிக்டாக் பிரபலங்கள், பொதுமக்களின் பிரதிநிதிகள் என இருவர் என 20 பேர் கலந்துகொண்டுள்ளனர்.

விக்ரமன்
இதில் கலந்துகொண்டு இருக்கும் பத்திரிகையாளரும், நடிகருமான விக்ரமனை அரசியல் பிரமுகர் என்றே கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார். விக்ரமன் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் அங்கம் வகித்து தொலைக்காட்சி விவாதங்களில் பேசி வந்ததுடன் பல்வேறு போராட்டக் களங்களிலும் பங்கெடுத்து வந்துள்ளார்.

பிக் பாஸ் அரசியல்
இந்த போட்டி தொடங்கியதில் இருந்தே விக்ரமன், சக போட்டியாளர்கள் பிற்போக்குத் தனமான, பெண்கள் அல்லது குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிரான கருத்துக்களை யாராவது பேசினால் அதை வெளிப்படையாகவே கண்டித்து வந்தார். ஆனால், விக்ரமனை சக போட்டியாளர்களில் பெரும்பாலானவர்கள் ஒதுக்கி வந்தது வெளிப்படையாக தெரிந்தது.

விக்ரமனுக்கு குவியும் ஆதரவு
இதன் காரணமாகவே விக்ரமனுக்கு வெளியிலிருந்து மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. குறிப்பாக அஜீம், ஜிபி முத்து, அசல், கதிரவன், ஜனனி போன்ற போட்டியாளர்கள் விக்ரமனை அதிகம் எதிர்த்து வந்தனர். நேற்று முந்தினம், விக்ரமன் தனது கதை சொல்வதற்கு தொடங்கியவுடனே பசர் அழுத்தி அவரை வெளியேற்றினர் போட்டியாளர்கள்.

கடும் மோதல்
குறிப்பாக கடந்த 2 நாட்களாகவே அஜீமுக்கும் விக்ரமனுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி வருகிறது. அஜீம் விக்ரமனை அவமதிக்கும் வகையில் ஒருமையில் பேசுவதும் அரசியல்வாதி என்று இழிவுபடுத்தும் விதத்தில் சொல்வது, பேசவிடாமல் தடுப்பது என பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

எம்.எல்.ஏ என் மாமா
இந்த நிலையில் சக போட்டியாளர்களுடன் அமர்ந்து விக்ரமன் பற்றி புரணி பேசிய அஜீம், "விக்ரமன் ஏன் என்னிடம் சரியாக பேசவில்லை என்றால், அவன் உறுப்பினராக உள்ள கட்சியில் என் அம்மாவின் உடன் பிறந்த சகோதரர் எம்.எல்.ஏவாக உள்ளார். அவர் கட்சியின் துணை பொதுச்செயலாளர்." என்று கூறினார்.

லீக்கான காட்சி
கன்னியாகுமரி மாவட்டம் ஆளூரை சொந்த ஊராக கொண்ட அஜீமின் தாயுடைய சகோதரர் என ஒரு எம்.எல்.ஏவை குறிப்பிட்டு நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகாத இந்த காட்சி, 24x7 ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications