சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செக் வைக்கும் பாஜக.. அதிருப்தியில் பாமக.. கூட்டணிக்குள் அதிகரிக்கும் உரசல்.. சிக்கலில் அதிமுக!

சீட் ஒதுக்கீட்டில் அதிமுக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டு வருவதாக தெரிகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆடிப் போன கூட்டணி கட்சிகள்.. அதிர வைத்த அதிமுக

    சென்னை: அதிமுக கூட்டணிக்குள் உரசல் போக்கு நாளுக்கு நாள் அதிகமாகி வருவதாக கூறப்படுகிறது.. ஒரு பக்கம் பாஜகவும், இன்னொரு பக்கம் பாமகவும் ஏகப்பட்ட அதிருப்தியில் அதிமுக மீது உள்ளதாக தெரிகிறது.

    மறைமுக தேர்தல் என்பதில் தொடங்கி, வார்டுகள் ஒதுக்கீடு வரை அதிமுகவின் எந்த அறிவிப்பையும் கூட்டணி கட்சிகள் ரசிக்கவில்லை என்றே தெரிகிறது.

    தங்களுக்கு முக்கிய தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பாஜகவும், பாமகவும் அதிமுகவிடம் விடுத்து வருகின்றன.

    ரஜினிக்கு 70 வயசாயிருச்சு.. ஒரு தேர்தலைதான் தெம்பாக சந்திக்க முடியும்.. ரங்கராஜ் பாண்டே பரபர பேச்சு ரஜினிக்கு 70 வயசாயிருச்சு.. ஒரு தேர்தலைதான் தெம்பாக சந்திக்க முடியும்.. ரங்கராஜ் பாண்டே பரபர பேச்சு

    ஆதரவாளர்கள்

    ஆதரவாளர்கள்

    ஆனால், வரும் சட்டமன்ற தேர்தலின் வெற்றிக்கு இந்த உள்ளாட்சி தேர்தல் வெற்றியானது அடிகோலும் என்பதாலும், தனக்கு ஆதரவாளர்களை பக்கத்தில் வைத்து கொண்டால், அதிமுக செல்வாக்கு கூடும் என்பதால் கிட்டத்தட்ட 80 சதவீத இடங்களை நாமே நின்று போட்டியிடலாம் என்பதே அதிமுகவின் கணக்காக உள்ளதாக கூறப்படுகிறது. மீதமுள்ளதை கூட்டணி கட்சிகளுக்கு பரவலாக பிரித்து தரலாம் என்றும் கேட்டுக் கொள்ள அக்கட்சி திட்டமிட்டுள்ளதாம்.

    உள்ளாட்சி

    உள்ளாட்சி

    ஆனால் கூட்டணி கட்சிகள் உள்ளாட்சி தேர்தல் விஷயத்தில் அதிமுகவை எப்படி எதிர்கொள்ள போகின்றன என்று தெரியவில்லை. ஏனெனில், இதில், உள்ளாட்சி தேர்தல் குறித்த பேச்சு உறுதியாவதற்கு முன்பிருந்தே பாஜக சில இடங்களை வாய்விட்டு கேட்க தொடங்கிவிட்டதாம். குறிப்பாக செல்வாக்குள்ள குமரி மாவட்டத்திலும் தென் மாவட்டங்களிலும் தங்களுக்கு நிறைய சீட் வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது.

    கோவை

    கோவை

    நாகர்கோவில், கோவை உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே பாஜகவுக்கு செல்வாக்கு உள்ளதால், அந்த மாவட்டங்களில் மட்டும் அவர்களுக்கு சீட் வழங்க அதிமுக முடிவு செய்துள்ளது. அதனால், அதிமுக தலைமையுடன் நடந்த பேச்சுவார்த்தையில் அவர்களுக்கு திருப்தி ஏற்படவில்லை போலும். பெரும்பாலான மாவட்டங்களில் போட்டியிட பாஜகவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றால், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை பாஜக தனித்து சந்திக்கும் என்ற ஒரு பேச்சும் எழுந்துள்ளது.

    சிக்கல்?

    சிக்கல்?

    இன்னொரு பக்கம் பாமகவும் அதி முக்கிய தொகுதிகள் வேண்டும் என்று கேட்டு வருகிறது. ஆனால், வட மாவட்டத்தில் பாமகவுக்கு அதிக சீட்டை தந்துவிட்டால், பின்னாளில் தமக்கு சிக்கலாகும் என்பதுடன், பாமகவை பலமானவர்களாக வட மாவட்டங்களில் உருவாக்கிவிட கூடாது என்பதிலும் அதிமுக கவனமாக உள்ளது.

    தேமுதிக

    தேமுதிக

    ஒருவேளை நாளை பாமக இதே கூட்டணியில் தொடராமல் என்னாகும் என்ற சந்தேகமும் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் கூட்டி கழித்து பார்த்துதான், அதிமுக தலைமை தெளிவாக தொகுதி பங்கீடு குறித்து யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. பாமகவுக்கு செக் வைக்கும் வகையில்தான் தேமுதிகவை அது தாஜா செய்யத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு முகமாகவே விஜயகாந்த் மீதான அதிருப்தி வழக்குகளை அதிரடியாக தள்ளுபடி செய்ததை அரசியல் நோக்கர்கள் பார்க்கிறார்கள்.

    எடப்பாடியார்

    எடப்பாடியார்

    தங்களது கோரிக்கை நிராகரிக்கப்படும் பட்சத்தில், ஏற்கனவே அதிருப்தியில் உள்ள பாமகவும், பாஜகவும், இணைந்து அதிமுகவுக்கு எதிராக செக் வைக்க வியூகங்களை எடுத்து வருவதாகவும் சலசலப்புகள் வந்த வண்ணமே உள்ளன. ஆனால், எப்படியும் எடப்பாடியார் கூட்டணி கட்சிகளை விட்டு தர மாட்டார் என்ற நம்பிக்கையும் இந்த சலசலப்புகளுக்கு நடுவிலேயும் வட்டமடித்து வருகிறது!

    English summary
    The coalition parties seem to have been urging the AIADMK to allocate more seats to contest the local elections
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X