சிக்னல் கொடுத்த மேலிடம்? பச்சை கொடி காட்டிய அண்ணாமலை! ‘கமலாலயம்’ செல்லுமா தேனி எக்ஸ்பிரஸ்? பரபர மூவ்
சென்னை : அதிமுகவில் அதிகார மோதல் ஆரம்பித்த காலத்தில் இருந்தே ஓ.பன்னீர்செல்வம் பாஜகவில் இணைய இருக்கிறார் என்ற தகவல்கள் உலா வந்த நிலையில், பாஜகவின் கதவு எல்லோருக்கும் திறந்தே உள்ளது என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நேற்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
மேலும், ஓபிஎஸ் மற்றும் வைத்திலிங்கம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இருந்தாலும் அதிமுக தான் நீடிப்பதாகவும், இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை தான் கட்சியிலிருந்து நீக்குவதாக அதிரடியாக அறிவித்தார்.

அண்ணாமலை பாஜக
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,"அதிமுக பொதுக்குழு முறைப்படி நடந்துள்ளது. அதனால் அந்த தலைவரோடு அந்த கட்சியோடு பாஜக கூட்டணியில் இருக்கும். எங்களுக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு கிடையாது. அதனால் தான் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்றதும், வாழ்த்து தெரிவித்தோம். மற்றபடி ஒன்றும் கிடையாது என கூறியிருந்தார்.

அதிமுக பொதுக்குழு
அண்ணாமலை பேசிக்கொண்டிருக்கும் போதே செய்தியாளர் ஒருவர் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் பாஜகவில் இணைந்தால் சேர்த்துக் கொள்வீர்களா என கேள்வி எழுப்பினார். அதற்கு கூட்டணி தர்மம் என்று ஒன்று இருக்கிறது.. அதே நேரத்தில் "பாஜகவின் கதவு எல்லோருக்கும் திறந்தே உள்ளது" என பதிலளித்தார். இது பன்னீர்செல்வத்தை பாஜகவுக்கு இழுக்கும் மறைமுக அழைப்பாகவே பார்க்கப்படுகிறது.

பாஜகவில் ஓ.பன்னீர்செல்வம்
அதிமுகவில் அதிகார மோதல் ஆரம்பித்த காலத்தில் இருந்தே ஓ.பன்னீர்செல்வம் பாஜகவில் இணைய இருக்கிறார் என்ற தகவல்கள் உலா வருகின்றன. குறிப்பாக கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சரான கோகுல இந்திரா பன்னீர்செல்வம் பாஜகவில் இணைய திட்டமிடுகிறார் எனக் கூறியிருந்தார். ஆனால் இது குறித்து ஓ பன்னீர்செல்வம் தரப்போ பாஜக திறப்பு எழுத விளக்கமும் அளிக்காத நிலையில் அதிமுகவில் நடக்கும் நிகழ்வுகளை மட்டும் உன்னிப்பாக கவனித்து வந்தனர்.

அரசியலில் எதிர்பார்ப்பு
எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற நிலையில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுத்தவுடன் வாழ்த்துக்களை தெரிவித்தார் அண்ணாமலை இதனால் எடப்பாடிக்கு பாஜக ஆதரவாக இருக்கிறதா என்ற பிம்பம் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பாஜகவுக்கு யார் வந்தாலும் வரவேற்போம் என அண்ணாமலை கூறி இருப்பது அவரது பாஜக வருகைக்கான கிரீன் சிக்னலாகவே பார்க்கப்படுகிறது. அந்த சிக்னலை வைத்து கமலாலயம் செல்லுமா தேனி எக்ஸ்பிரஸ் என்பதை அரசியல் நிபுணர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications