நன்றாக இருக்கும் உயர் கல்வி துறையில் அரசியலை புகுத்துகிறது திமுக.. சங்கடமா இருக்கு! அண்ணாமலை வேதனை.!
சென்னை : துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் சட்ட மசோதாவை திமுக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நிறைவேற்றி உள்ளது சங்கடமாக உள்ளது என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
Recommended Video

தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி இன்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் போது அறிமுகம் செய்தார்.
அப்போது ஆரம்ப நிலையிலேயே அந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அதிமுக உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் தெரிவித்தார். இதை தொடர்ந்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதாக அறிவித்தனர்.

துணை வேந்தர் மசோதா
பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை மாநில அரசே நியமிப்பது தொடர்பாக சட்டதிருத்த மசோதா காரசார விவாதங்களுடன் சட்டப்பேரவையில் நிறைவேறியது. முன்னதாக இது குறித்து பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தராக ஆளுநரும், இணை வேந்தராக உயர்கல்வி துறை அமைச்சரும் இருப்பதால், கொள்கை முடிவு எடுக்ககூடிய அரசுக்கு பல்கலைக்கழக துணை வேந்தரை நியமிப்பதில் அதிகாரம் இல்லாமல் இருப்பது உயர்கல்வி துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி
இந்நிலையில், துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் சட்ட மசோதாவை திமுக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நிறைவேற்றி உள்ளது சங்கடமாக உள்ளது என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நம்முடைய தமிழக சட்டப்பேரவையில் துணை வேந்தர்களை நேரடியாக மாநில அரசே நியமனம் செய்வதற்காக ஒரு சட்ட மசோதாவை கொண்டு வந்திருக்கின்றார்கள். இதனை எதிர்த்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து இருக்கிறார்கள்.

நேராக நியமனம் செய்யவில்லை
அப்போது பேசிய முதலமைச்சர் அவர்கள் நிறைய காரணங்கள் சொல்லி இருக்கின்றார்கள். குறிப்பாக 1949ல் இருந்து பாஜக ஆளுகின்ற மாநிலமான இருக்கு குஜராத்தில் இந்த நடைமுறை உள்ளது. அருகிலுள்ள ஆந்திராவில் உள்ளது. சமீப காலகட்டத்தில் கேரளாவில் கொண்டு வருவதாக சொல்லி இருக்கிறார். சட்டப்பேரவையில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் சட்ட மசோதாவைவை பாஜக எதிர்த்தது. ஆளுநரே எந்த துணைவேந்தர்களையும் நேராக நியமனம் செய்யவில்லை. தேர்வுக் குழுவின் பரிசீலனையிலும் இது நடைபெறுகிறது.

சங்கடமாக உள்ளது
துணை வேந்தர் நியமனத்தில் மாநில அரசின் தலையீடும் உள்ளது. திமுக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இந்த மசோதாவை நிறைவேற்றி உள்ளது. மாநிலத்தில் ஆளுகின்ற ஆட்சியைக் கலைக்க ஆரம்பித்தார்களோ அப்பொழுது இருந்து ஆளுநர் என்ற பதிவுக்கு முக்கியத்துவம் கூடியிருக்கிறது. தமிழகத்திலும் அப்பொழுதெல்லாம் அரசியல் தலையீடு அதிகமாக இருந்து. துணைவேந்தரை நாம்தான் நியமிக்க வேண்டும் என சொல்லும் பொழுது பலர் துணைவேந்தர்கள் மீது லஞ்ச ஊழல் போன்ற புகார்கள் உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் திமுக துணை வேந்தர்கள் என்ற பதவியை ஒரு வியாபாரப் பொருளாக ஆளும் கட்சியை சார்ந்த, ஆளும் கட்சியை ஆதரிக்க கூடிய மனிதனுக்கு கொடுக்கக்கூடிய பதவியாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது மிகவும் சங்கடமாக உள்ளது என தெரிவித்தார்
-
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு












Click it and Unblock the Notifications