கருகுதா தாமரை? குல்லா போட்டுப்பாரா ஆளுநர் ரவி? அவர் மனைவி பர்தா ஏற்பாரா? பாஜகவை கேட்பது யார் பாருங்க
சென்னை: திருவள்ளுவருக்கு காவி நிறம் பூசப்பட்ட விவகாரத்தில், தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு, தன்னுடைய கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.
கடந்த ஜனவரி மாதம் தமிழக ஆளுநர் ரவி, காவி உடையில் இருக்கும் திருவள்ளுவரின் போட்டோவை வெளியிட்டு திருவள்ளுவர் தின வாழ்த்துக்களை கூறியிருந்தார்.. இது மிகப்பெரிய சர்ச்சையை தந்திருந்த நிலையில், இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்தன.. இந்நிலையில், மீண்டும் இதுபோன்ற சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

நேற்று மாலை 5 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் "திருவள்ளுவர் திருநாள் விழா" நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை அறிவித்திருந்தது.. ஆளுநரின் செயலாளர் கிர்லோஷ்குமார் பெயரில் இந்த அழைப்பிதழ் வெளியிடப்பட்டிருந்தது.. இதில், திருவள்ளுவருக்கு காவி உடையும், நெற்றியில் விபூதி, கைகளில் விபூதி, கழுத்தில் ருத்திராட்சையும் அணிவிக்கப்பட்டிருந்தது.
திருவள்ளுவர்: வழக்கமாக, அரசு சார்பில், பிற அமைப்புகள் சார்பில் பயன்படுத்தும் படங்களில், திருவள்ளுவர் வெள்ளுடை அணிந்திருப்பதே வழக்கமாகும்.. ஆனால், பாஜக மற்றும் இந்து அமைப்புகள் காவி நிற உடையோடு திருவள்ளுவர் படத்தை தொடர்ந்து அச்சிட்டு வருவது, மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளது. இதற்கு தமிழக காங்கிரஸ் தன்னுடைய வலிய எதிர்ப்பையும் பதிவு செய்திருந்தது.
அந்தவகையில், தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இன்ஸ்டாகிராமில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், ஆளுநருக்கு குல்லா அணிவித்தால் ஏற்பாரா? அவரது மனைவிக்கு பர்தா அணிவித்தால் ஏற்பாரா என்று கேட்டிருக்கிறார். அதுமட்டுமல்ல, மத்திய பாஜகவையும் சரமாரியாக விமர்சித்து அப்பாவு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.
கொள்ளை: திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அப்பாவு, "ஒடிசா தேர்தல் பிரச்சாரத்தில் தமிழர்கள் குறித்து அப்படி பிரதமர் மோடி பேசியிருக்கக் கூடாது. தமிழ்நாடோ, தமிழ்நாட்டு மக்களோ வேறு இடங்களிலிருந்து கொள்ளையடிக்க வேண்டும் என்றோ, கொள்ளையடித்துக் கொண்டு வர வேண்டும் என்றோ, அதை பாதுகாக்கின்ற அரசாகவோ தமிழ்நாடு இல்லை. தமிழகத்தில் உள்ள தொழில்கள், முதலீடுகள்தான் கொள்ளை அடிக்கப்பட்டு குஜராத்திற்கு சென்றிருக்கிறது.
தூத்துக்குடி துறைமுகத்தில் பருப்பு இறக்குமதி செய்யப்பட்டு பல்லாயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள்.. இப்போது பருப்பு இறக்குமதி செய்யும் வாய்ப்பை, குஜராத் மாநிலம் அதானி துறைமுகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
முதலாளிகள்: கோயம்புத்தூரிலிருந்து தொழிற்சாலைகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு குஜராத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மத்திய அரசு 22 முதலாளிகளுக்கு 16 லட்சம் கோடி கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கு கூட ஒரு ரூபாய் கூட கடன் தள்ளுபடி செய்யவில்லை.
கடன் தள்ளுபடி செய்து பயன்பெற்ற 22 பேரும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். வங்கிகள், தொழில்கள் கொள்ளையடித்து குஜராத்திற்குச் சென்றுள்ளது. தமிழ்நாட்டு மக்கள் படிப்பில் சிறந்தவர்கள். சமூக நீதியில் சிறப்பான அரசு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மக்கள் கொள்ளை அடிப்பவர்கள் கிடையாது.. இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசுவதை பிரதமர் தவிர்க்க வேண்டும்.
குல்லா: ஆளுநர் மாளிகை வெளியிட்ட அழைப்பிதழில் காவி உடையில் திருவள்ளுவர் போட்டோ இடம்பெற்றுள்ளது. ஆளுநருக்கு, அவரை முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஒருவராக, அவருக்கு குல்லா அணிவித்து அவரது துணைவியாருக்கு பர்தா அணிவித்து அதை ஏற்றுக் கொள்வார் என்றால், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பதையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், இதையும் அவர் செய்யக்கூடாது" என்றார் அப்பாவு.
-
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய்.. எந்த வகையிலும் நியாயமற்ற அணுகுமுறை.. ஏன்? -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
அப்போ உரிமை தொகை நிறுத்தப்படுமா? "தமிழக நிதி நிலைமை மோசம்! ஆனால்.." நிதியமைச்சர் கொடுத்த விளக்கம் -
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
எகிறும் எதிர்பார்ப்பு! ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை! -
முதலில் சங்கர் ஜிவால்.. இப்போது சுனில் குமார்.. தமிழக மாஜி டிஜிபிக்கள் அடுத்தடுத்து விலகல்! பின்னணி -
தமிழக அரசால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ள துறைகள்.. விவரம் -
பதவியே வேண்டாம்.. தீயணைப்பு ஆணைய தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்த மாஜி டிஜிபி சங்கர் ஜிவால்! -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
தமிழ்நாட்டு தலைக்கு மேல் கத்தி.. ஏடாகூடமான எல் நினோ! கொஞ்சம் பிசகினாலும் போச்சு! பறந்த வார்னிங்! -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான்











Click it and Unblock the Notifications