சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அந்தரங்க" போட்டோக்கள்.. இங்கே நிர்மலா தேவி.. பாஜக ஆளுநர்களே இப்படித்தானாம்.. வெடிக்கும் விவாதங்கள்

தமிழக ஆளுநரை திரும்ப பெற திமுக ஏன் அழுத்தம் தருகிறது என பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், அரசியல் ஆலோசகர்களும் அதற்கான காரணங்களை சொல்லி, அந்த கோரிக்கைக்கு அழுத்தங்கள் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

தமிழக அரசுக்கும், ஆளுநர் ரவிக்கும் சுமூக உறவு ஆரம்பத்தில் இருந்தே இல்லை... மசோதாக்களை கிடப்பில் போடுவதாக பகிரங்கமாகவே ஆளுநர் மீது தமிழக அரசு குற்றம் சுமத்தியது.

இந்த விரிசல் அதிகமாகி உள்ள நிலையில், அரசியல் அமைப்புக்கு எதிராக செயல்படும் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று ஓபனாகவே, திமுக குரல் கொடுக்க துவங்கி உள்ளது.

லைஃப் லைன் வேணும்.. சட்டென கேட்ட உதயநிதி.. 10 வருஷமா எதுவும் மாறவில்லை.. கலகலத்த கிருத்திகா! லைஃப் லைன் வேணும்.. சட்டென கேட்ட உதயநிதி.. 10 வருஷமா எதுவும் மாறவில்லை.. கலகலத்த கிருத்திகா!

டிஆர் பாலு

டிஆர் பாலு

எம்பியும், திமுக எம்.பிக்கள் குழுவின் தலைவருமான டி.ஆர் பாலு, ஆளுநரை திரும்ப பெறக்கோரி ஜனாதிபதியிடம் கடிதம் வழங்க உள்ளதாகவும், இதற்கு உடன்படும் கட்சிகள், அந்த கடிதத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.. அதன்படியே திமுக கூட்டணி கட்சித்தலைவர்கள், அந்த கடிதத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில் பாஜக ஆளும் பெரும்பாலான மாநிலங்களில், அந்தந்த மாநில அரசுகளுடன் ஆளுநர்களின் உறவு சுமூகமாக இல்லை என்ற கருத்தும் சோஷியல் மீடியாவில் அலசப்பட்டு வருகிறது..

அஜெண்டா

அஜெண்டா

இதனிடையே ஒரு பிரபல சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் மணி பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், பாஜக ஆட்சியில், சில ஆளுநர்கள் மீது எழுந்த புகார்களையும் விரிவாக கூறியுள்ளார்.. அதன் சுருக்கம்தான் இது: "பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் மட்டும், மாநில அரசுகளிடம் பிரச்சனைகள் வெடிக்கிறதே ஏன்? மாநில அரசை தொந்தரவு செய்யுங்கள் என்றே அஜெண்டாவில் சொல்லி அனுப்புகிறார்கள்.. மோடி அரசு வந்தபிறகு, சில ஆளுநர்கள் கேவலமான காரியங்களை செய்திருக்கிறார்கள்..

லேடீஸ் கிளப்

லேடீஸ் கிளப்

அருணாசல பிரதேசத்தில் ஜோதி பிரசாத் என்ற ஒருவர் கவர்னர் இருந்தபோது, மெஜாரிட்டியாக இருந்த அரசை டிஸ்மிஸ் செய்தார்.. சண்முகநாதன் என்ற ஒரு மேகாலயாவில் கவர்னர் இருந்தார்.. தமிழ்நாட்டை சேர்ந்தவர்.. ஆர்எஸ்எஸ்காரர்.. இவர் பெண்கள் விஷயத்தில் சிக்கியவர்.. கிளப் நடத்துகிறார் என்று இவர்மீது புகார் சொல்லப்பட்டது.. கடைசியில் துண்டை காணோம், துணியை காணோம் என்று இங்கே வந்துட்டார் இந்த சண்முகநாதன்..

அட்டகாசம்

அட்டகாசம்

செக்ஸ் ராக்கெட்டில் இவர் சிக்கியது எவ்வளவு கேவலமானது? கேகே பால் என்று ஒரு கோவா ஆளுநர்.. இவரும் அட்டகாசம்தான்.. எத்தனையோ எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களில் இவர்கள் ஏகப்பட்ட தொந்தரவுகளை அங்கு தந்து வருகிறார்கள்.

மேகாலயாவில் சண்முகநாதன் விஷயத்தில், மத்திய அரசோ, பாஜகவோ, சுயஒழுக்கத்துக்கு ஒட்டுமொத்த காவலர்கள் என்று சொல்லி கொள்ளும் ஆர்எஸ்எஸ், இதை பற்றி எதுவுமே பேசவில்லை.. இதுதான் இவர்கள் லட்சணம்..

நிர்மலா தேவி

நிர்மலா தேவி

இங்கே பன்வாரிலால் இருந்தபோது என்ன செய்தார்? நிர்மலா தேவி என்ற பெண் பேராசிரியை விஷயத்தில் என்ன ஆச்சு? 4 வருஷம் புண்ணியவான் இங்கே இருந்துட்டு, இப்போ பஞ்சாப்பில் அதிமுக 40 கோடி வாங்கிக்கொண்டு துணை ஆளுநர் பதவியை விற்றதாக குற்றஞ்சாட்டுகிறார்.. அரசியல் அமைப்பு சாசனத்தின்பால் உறுதிமொழியை எடுத்துக் கொண்ட இவர்கள், அந்த சாசனத்தின் விழுமியங்கள் எதையுமே கடைப்பிடிக்க மறுக்கிறார்கள்.. காங்கிரஸ் ஆட்சியிலும் இப்படி நடந்தது.. மறுக்கவில்லை.. ஆனால், மறுசீரமைப்பு இருந்தது.. அது இப்போது எங்கே?

அயோக்கியத்தனம்

அயோக்கியத்தனம்

இந்தியா உலகின் மற்ற நாடுகளைப் போல் ஒரு மதத்தை சார்ந்துள்ளது என்று ஆளுநர் சொல்கிறாரே.. இதெல்லாம் அரசியல் சாசனத்தையே குழிதோண்டி புதைக்கும் பேச்சு.. இப்படி பேசியவர், அதற்கு பிறகு ஒரு நொடியாவது அந்த பதவியில் நீடிக்கலாமா? அதனால்தான், திமுகவும் தோழமை கட்சிகளும் இந்த கோரிக்கையை அழுத்தமாக முன்னெடுத்துள்ளன.. அதேபோல ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அனைவருமே, இந்த கோரிக்கைக்கு அழுத்தம் தர வேண்டும்" என்று பேட்டியின்போது கேட்டுக் கொண்டார்.

3 வருடங்கள்

3 வருடங்கள்

தெலுங்கானா மாநில ஆளுநராக 2019 தேர்தலில் தோற்றுப்போன உடனேயே, தமிழிசையை ஆளுநராக நியமிக்கிறார்கள்.. கொஞ்ச நாள் கழித்து புதுவை மாநில துணைநிலை ஆளுநராகவும், தெலுங்கானாவுக்கு பொறுப்பு ஆளுநர்களாகவும் நியமிக்கிறார்கள்..

இந்த பொறுப்பு ஆளுநர் என்ற பதவி எப்போது செயல்படுத்தப்படும் என்றால், ஒரு மாநில ஆளுநர் இறந்துவிட்டால், இன்னொரு ஆளுநரை நியமிக்கும்வரை, இப்படி பொறுப்பு ஆளுநர்கள் நியமிப்பார்கள்.. இவர்கள் அண்டை மாநிலத்தை சேர்ந்த ஆளுநர்களாகவும் இருப்பார்கள்.. குறைந்தபட்சம் ஒரு மாத காலம் இவர்கள் பொறுப்பில் இருப்பார்கள்.. அதற்குள் புது ஆளுநர் நியமிக்கப்பட்டு விடுவார்..

லிஸ்ட்

லிஸ்ட்

ஆனால், இங்கே என்ன நடக்குது என்றால், பொறுப்பு ஆளுநர் பதவி என்பதே 3 வருடமாக ஓடிக் கொண்டிருக்கிறது.. எதுவெல்லாம் அரசியல் சாசனத்தில் எழுதப்படாத விதியோ, அதெல்லாம் மோடி அரசு தகர்த்தெறிந்து கொண்டிருக்கிறது.. வித்யாசாகர் ராவையும் இந்த லிஸ்ட்லில் சேர்த்து கொள்ளலாம்.. அண்டை மாநில ஆளுநரை தான் பொறுப்பு ஆளுநராக போட வேண்டும்.. 1000 கிமீ தூரத்துக்கு அப்பால் இருப்பவர்களை ஆளுநர்களாக நியமிக்க மாட்டார்கள்.. அன்னைக்கு தமிழ்நாட்டில் பாத்திமா பீதிக்கு பிறகு, ஆந்திர ஆளுநர் ராம்மோகன் ராவை நியமித்தார்கள்.. எங்கோ வடகிழக்கில் இருப்பவர்களை, தென்கிழக்கில் நியமிக்கிறார்கள்.. இங்கே தமிழிசை, பொறுப்பு ஆளுநராகவே 3 வருடமாக இருக்கிறார்.. ஆக மொத்தம், எழுதப்படாத விஷயங்களை தலைகீழாக புரட்டி போடுவதுதான் நடந்து கொண்டிருக்கிறது" என்றார்.

English summary
BJP Governors illegal affairs & indecent activities, says Sr Journalist Mani
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X