எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. கண்ணசைத்த ‘மேலிடம்’! உற்சாக ஓபிஎஸ்! கையை பிசையும் ’சேலம்’
சென்னை : அதிமுகவில் நடைபெற்று வரும் அதிகார மோதல்களுக்கு இடையே எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்டு வரும் நிலையில் "மேலிடம்" சில முக்கிய வாக்குறுதிகளை அளித்து இருப்பதாகவும் இதனால் அவரது தரப்பு உற்சாகம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த ஜுலை மாதம் 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் உள்ளிட்டோரை நீக்குவதாக நிறைவேற்றப்பட்டது.
மேலும் அதிமுகவின் பொருளாளர், அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்தும் ஓபிஎஸ், அவரது மகன்கள் ரவீந்திரநாத்குமார், ஜெயபிரதீப், அவரது ஆதவாளர்கள் என அடுத்தடுத்து நீக்கப்பட்டனர்.

ஓ.பன்னீர்செல்வம்
இதனையடுத்து கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தற்போது அதிரடி அரசியலை கையில் எடுத்திருக்கிறார் குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து தான் நீக்குவதாகவும் அறிக்கை வெளியிட்டு வருவதோடு தொடர்ந்து புதிய நிர்வாகிகள் நியமனமும் நடைபெற்று வருகிறது. தலைமைக்காக நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி ஒன்றிய வட்ட அளவிலான செயலாளர்களையும் நியமிப்பதற்கான ஏற்பாடுகள் வெகு விரைவாக நடைபெற்று வருகிறது.

புதிய பட்டியல்
இதற்கான பட்டியல் ஏற்கனவே தயாராக ஓ.பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தடுத்து புதிய பட்டியல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதற்காக இப்படி பன்னீர்செல்வம் செய்கிறார் என்ற காரண புரியாமல் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு குழப்பத்தில் உள்ளது. சட்ட ஆலோசகர்கள் அளித்த தகவலின் படி ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் தலைமை தாங்கள்தான் என தேர்தல் ஆணையத்திற்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி
இந்நிலையில் தற்போது தலைமை கழக நிர்வாகிகள் அவை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகளை நியமனம் செய்து, தாங்கள் தான் உண்மையான அதிமுக என கூட்டம் நடத்தம் இருப்பதாக கூறப்படுகிறது. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பிறகு அவருக்கு அடுத்தடுத்து நெருக்கடிகள் தான் உருவாகி வருகிறது. உதாரணமாக ஆதரவாளர்கள் இல்லங்களில் வருமான வரி சோதனை டெண்டர் முறைகேடு வழக்கு, முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது குட்கா வழக்கு, டெல்லி சென்ற எடப்பாடி பிரதமர் சந்திக்க மறுத்தது உள்ளிட்டு அடுத்தடுத்த சிக்கல்கள் உருவாகி வருகிறது,

பின்னணியில் யார்?
இதற்கு பின்னணியில் யார் இருப்பது என புரியவில்லை என்றாலும் இதன் காரணமாக ஓபிஎஸ் தரப்பு உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளது என்கின்றனர் அவரது தரப்பு ஆதரவாளர்கள். இந்நிலையில் சென்னை செஸ் ஒலிம்பியாட் மற்றும் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி ஓ பன்னீர்செல்வம் சந்திக்கவில்லை விமான நிலையம் செல்லும் பிரதமரை ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சந்திப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி
இந்த நிலையில் நேரடியாக ஓ.பன்னீர் செல்வத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவினர் ஆதரவு தெரிவிக்காவிட்டாலும் மறைமுகமாக அவருக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக தேர்தல் ஆணையம் ரிசர்வ் வங்கி உள்ளிட்ட விவகாரங்களில் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும் இதன் காரணமாக மீண்டும் தனது பழைய செல்வாக்கை மீட்டெடுத்து விடலாம் என்ற நம்பிக்கையில் ஓ பன்னீர்செல்வம் உற்சாகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
-
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
எல்லாமே வேஸ்ட்.. பல லட்சம் போச்சே.. புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர்












Click it and Unblock the Notifications