"அவர்" போனை போட்டும் கூட.. இறங்கி வராத எடப்பாடி.. கடைசியில் ஓபிஎஸ்ஸை பிடித்த தாமரை.. எல்லாம் மாறுதே

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி வைக்க வேண்டும் என்று முக்கியமான "புள்ளி" ஒருவர் எடப்பாடி பழனிசாமிக்கு போன் செய்து கோரிக்கை விடுத்து வருகிறாராம். ஆனால் எடப்பாடி பழனிசாமி இதற்கு இறங்கி வராத காரணத்தால் தற்போது ஓ பன்னீர்செல்வம் பக்கம் பாஜக திரும்ப தொடங்கி உள்ளதாம். .

கர்நாடகா உட்பட தென்னிந்தியாவில் பாஜக அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வருகிறது. இந்த தொடர் தோல்விகளால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சுமுகமாக போக டெல்லி பாஜக ஆலோசனை செய்து வருகிறதாம்.

BJP is trying hard to make alliance with O Panneerselvam as EPS is not ready for teaming up in Lok Sabha 2024

2024ல் தமிழ்நாட்டில் கூடுதல் எம்பி இடங்களை வெல்லும் விதமாகவும்.. 2026ல் கூடுதல் சட்டசபை இடங்களை வெல்லும் விதமாகவும் பாஜக எடப்பாடி உடன் சமாதானமாகி செல்ல இருக்கிறதாம். அதிமுகவிற்கான கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது என்று பாஜக மூத்த தலைவர் அமித் ஷா பேட்டி அளித்துள்ளார். அவரின் இந்த பேச்சுக்கு பின் முக்கியமான காரணம் இருப்பதாக பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

என்ன காரணம்?: 1. தேசிய அளவில் பாஜக லோக்சபா தேர்தலில் வெல்ல வாய்ப்பு இருக்கிறது என்றே பாஜக கருதுகிறது, இருந்தாலும் தென்னிந்தியாவில் வலுவாக கால் பதிக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. 2, தமிழ்நாட்டில் இருந்து அமைச்சர்கள் வேண்டும் என்பதில் பாஜக தீர்க்கமாக இருக்கிறது. அதற்கு அதிமுக தயவு தேவை. 3. 2024ல் கூட்டணி இருந்தால்தான் , 2026 சட்டசபை தேர்தலில் கூட்டணியை தொடர முடியும். 4. தென்னிந்தியாவில் பாஜக வலுவாக இல்லை என்ற விமர்சனத்தை சரி செய்ய அதிமுகவின் தேவை இருக்கும் என்பதால் பாஜக இறங்கி வருவதாக கூறப்படுகிறது.

சாமியார்: கூட்டணி பேச்சுவார்த்தைகளை தொடங்கி ஒரு மாதம் ஆகியும் இதுவரை பாஜக கூட்டணிக்கு வர யாரும் தயாராக இல்லை. பாமக, தேமுதிக என்று யாரும் அதிமுக கூட்டணிக்கு செல்ல தயாராக இல்லை. இந்த நிலையில் அதிமுகவை சமாதானம் செய்து பாஜக சார்பாக கோவையை சேர்ந்த ஆன்மீக குரு ஒருவர் களமிறக்கப்பட்டு உள்ளாராம்.

இரண்டு கட்சிக்கும் நெருக்கமாக இருக்கும் அந்த சாமியார் மூலம் மீண்டும் அதிமுகவை பாஜகவிற்குள் இழுக்கும் பணிகள் நடந்து வருகிறதாம். திரைமறைவில் இந்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறதாம்.

பேச்சுவார்த்தை: இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடையும் வாய்ப்பு உள்ளதால்.. கடந்த வாரம் பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி வைக்க வேண்டும் என்று முக்கியமான "புள்ளி" ஒருவர் எடப்பாடி பழனிசாமிக்கு போன் செய்து கோரிக்கை விடுத்துள்ளாராம்.

எங்க கூட வந்துவிடுங்கள்.. விரைவில் முடிவை அறிவியுங்கள். நாம் சேர்ந்தால் 8 இடங்களில் வெற்றி உறுதி என்று அந்த நபர் பேசி இருக்கிறாராம். ஆனால் எடப்பாடி பாஜகவுடன் செல்லும் முடிவை எடுக்க மாட்டார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜக வேண்டாம். தனியாகவே தேர்தலை சந்திக்கலாம் என்ற முடிவில் அவர் இருக்கிறாராம்.

முக்கியமான நபர் போன் செய்தும் கூட எடப்பாடி பழனிசாமி இதற்கு இறங்கி வராத காரணத்தால் தற்போது ஓ பன்னீர்செல்வம் பக்கம் பாஜக திரும்ப தொடங்கி உள்ளதாம். எடப்பாடி இறங்கி வராத காரணத்தால் ஓ பன்னீர்செல்வத்தை வைத்து அதிமுகவிற்கு பிரஷர் கொடுக்க டெல்லி முடிவு செய்துள்ளதாம். விரைவில் மோடி - ஓபிஎஸ் மீட்டிங் நடக்கும் என்றும் கூறுகின்றனர் பாஜகவினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+