பெண் விஏஓ வயிற்றில் உதை.. சிக்கலில் திமுக நிர்வாகி! தட்டித் தூக்கிய போலீஸ்..அண்ணாமலைக்கு வந்த கோபம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 19ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவின்போது விழுப்புரத்தில் பெண் கிராம நிர்வாக அலுவலரின் தலைமுறையை பிடித்து இழுத்து தாக்கி வயிற்றிலேயே எட்டி உதைத்ததாக திமுக மாவட்ட கவுன்சிலரை காவல்துறையினர் கைது செய்திருக்கும் நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

18ஆவது மக்களவைக்கான தேர்தல் இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் நடைபெற்றது.

BJP leader Annamalai condemns attack on female VAO in Villupuram

இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின்போது விழுப்புரம் மாவட்டத்தில் பெண் கிராம நிர்வாக அலுவலர் சாந்தியை திமுக மாவட்ட கவுன்சிலர் ராஜீவ் காந்தி தாக்கியதாக பரபரப்பு புகார் எழுந்தது.


பெண் விஏஓ: ஆ.கூடலூர் கிராமத்தில் வாக்குச்சாவடியில் பணியில் இருந்த போது கிராம நிர்வாக அலுவலர் சாந்தி அங்கிருந்த அதிகாரிகளுக்கு உணவு வழங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த திமுக மாவட்ட கவுன்சிலர் ராஜீவ் காந்தி தான் கட்சிக்காரர்களுக்காக வாங்கிய உணவை எப்படி அதிகாரிகளுக்கு வழங்கலாம் எனக் கூறி அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில் அவர் பெண் விஏஓ சாந்தியின் தலைமுடியை இழுத்தும் வயிற்றில் எட்டி உதைத்ததாக கிராம மக்களும் கூறினர்.

திமுக மாவட்ட கவுன்சிலர்: இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட முன் விரோதத்தின் காரணமாகவே சாந்தியை ராஜீவ் காந்தி தாக்கியதாக கூறப்பட்டது. இதை எடுத்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடும் கண்டனங்கள் எழுந்தது. இந்நிலையில் ஒரு வழியாக கடந்த ஒரு வாரமாக தலைமறைவாக இருந்த ராஜீவ் காந்தியை காவல்துறையினர் நேற்று இரவு கைது செய்தனர்.

அண்ணாமலை:
இதற்கிடையே பெண் கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய ராஜீவ் காந்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,”விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த ஏப்ரல் 19 நாடாளுமன்றத் தேர்தல் நாளன்று, திமுக நிர்வாகி ராஜீவ் காந்தி என்ற நபர், பெண் கிராம நிர்வாக அலுவலர், சகோதரி திருமதி சாந்தி அவர்களை, கன்னத்தில் அறைந்தும், வயிற்றில் எட்டி உதைத்தும் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளது மிருகத்தனமானது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

BJP leader Annamalai condemns attack on female VAO in Villupuram

முதலமைச்சர் ஸ்டாலின்: நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, பாட்டாளி மக்கள் கட்சி சகோதரர்கள், தேர்தல் பிரச்சார விதிகளை மீறியதாகப் பொய்ப் புகார் அளிக்க மறுத்ததால், அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நாளன்று, இந்தக் கொடூரமான தாக்குதலை நடத்தியிருக்கிறார் திமுக நிர்வாகி ராஜீவ் காந்தி. ஆட்சிக்கு வரும் முன்னர், தெருத் தெருவாகச் சென்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த பிறகு, தனது கட்சியினரைச் சிறிய அளவில் கூட கண்டிக்காதது தான், அரசு அதிகாரிகளுக்கு, குறிப்பாக, பெண் அதிகாரிகளுக்கு எதிரான திமுகவினரின் தொடர் அராஜகத்திற்குக் காரணம்.

உரிய நடவடிக்கை: பெண் கிராம அலுவலரை எட்டி உதைத்துத் தாக்கிய திமுக நிர்வாகி ராஜீவ் காந்தியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாகத் தெரிகிறது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என கூறியுள்ளார். இந்நிலையில் சாந்தி, தேர்தல் நாளன்று ராஜிவ் காந்தியை சாதி பெயர் சொல்லி திட்டியதாகவும், அவருக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக விழுப்புரத்தின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+