ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. அதிமுக காத்திருக்கட்டுமே.. எங்களுக்கு கவலையில்லை.. நாராயணன் திருப்பதி
பாஜகவின் முடிவுக்காக அதிமுக காத்திருப்பது குறித்து எங்களுக்கு எந்த கவலையும் இல்லை- நாராயணன் திருப்பதி
சென்னை: பாஜகவின் முடிவுக்காக அதிமுக காத்திருப்பது பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை என தமிழ்நாடு பாஜக செய்தித் தொடர்பாளரும் துணைத் தலைவருமான நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்த தேர்தலில் காங்கிரஸ், நாம் தமிழர், அமமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். இந்த நிலையில் நேற்றைய தினம் வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்டது.

அதிமுக வேட்பாளர்
எனினும் அதிமுக சார்பில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கெனவே கூறியிருந்தார். அப்படியிருக்கும் போது கூட்டணி தலைமையான அதிமுகவுக்கு ஈரோடு கிழக்கு தொகுதியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி விட்டுக் கொடுத்துவிட்டது.

அதிமுகவுக்கு ஆதரவு
ஆனால் கூட்டணியில் இருப்பதாக சொல்லப்படும் பாஜக, அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து எந்த விஷயத்தையும் சொல்லமுடியவில்லை. இதனிடையே பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிப்போம் என ஓபிஎஸ் கூறியிருந்தார். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் குறித்து பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பதற்கான ஆலோசனை நேற்றைய தினம் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்தது.

பாஜக தனித்து போட்டியா
இந்த கூட்டத்தில் பாஜக தனித்து போட்டியா அல்லது எடப்பாடி அல்லது ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்றைய தினம் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி செய்தியாளர்களை சந்தித்தார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
அப்போது அவர் கூறுகையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தேர்தலில் போட்டியிடுவதற்கு பாஜவில் இருந்தே நிறைய நபர்கள் வாய்ப்பு கேட்கிறார்கள். ஆனாலும் அனைத்து கட்சி நிர்வாகிகளும் ஆலோசித்துதான் முடிவு எடுக்க முடியும். மேலும் ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி என பலரும் கலந்தாலோசித்துள்ளனர் என்றார்.

வேட்புமனு தாக்கல்
அப்போது நிருபர்கள், வேட்புமனு தாக்கல் முடிவு அடைய இன்னும் சில நாட்களே உள்ளதாக கேள்வி எழுப்பினர். அதற்கு நாராயணன், ஓரிரு நாளில் முடிவை அறிவிப்போம் என்றார். மேலும் சில நிருபர்கள், உங்களின் முடிவுக்காக அதிமுக இன்னும் வேட்பாளரை அறிவிக்காமல் காத்திருக்கிறதே என கேள்வி எழுப்பினார். இதற்கு அவர் எங்கள் முடிவுக்காக அதிமுக காத்திருக்கட்டும். அது குறித்து எங்களுக்கு கவலையில்லை.

இரட்டை இலை
இரட்டை இலை தொடர்பான வழக்கிற்கும் பாஜகவிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக பாஜகவின் நிலைப்பாடு இன்னும் 2 நாட்களில் அறிவிக்கப்படும் என நாராயணன் திருப்பதி தெரிவித்தார். அதிமுக காத்திருக்கட்டும் என பாஜக கூறியிருப்பதால் இனி அதிமுக என்ன செய்யும் என்ற கேள்வி எழுந்துள்ளது. நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில் நாளை (இன்று) மகிழ்ச்சிகரமான செய்தி வெளியாகும் என்றார். அந்த செய்தி வேட்பாளர் அறிவிப்பாக இருக்கும் என்றே தெரிகிறது. எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே 3 பேரில் ஒருவரை வேட்பாளராக அறிவிப்பது என முடிவு செய்துள்ளார். ஒரு வேளை பாஜக தனித்து போட்டி என்றால், ஓபிஎஸ் பாஜக வேட்பாளரை ஆதரிப்பார் என்றே தெரிகிறது.
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications