ஆருத்ரா.. அடுத்து யாரு? வளையத்தில் விஐபி ‘பி.ஏக்கள்’.. பாஜக புள்ளிகளை நெருங்கிய போலீஸ்.. பரபர தகவல்!
சென்னை : ஆருத்ரா நிதி மோசடி விவகாரத்தில் பாஜக நிர்வாகிகள் பலர் மீதான பிடி இறுகுவதால், முக்கிய புள்ளிகள் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. மாநில பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகள் பலர் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதால், அவர்களின் உதவியாளர்கள் போலீசாரின் தீவிர கண்காணிப்பு வளையத்தில் வந்திருக்கிறார்களாம்.
பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டால், அவர்களின் உதவியாளர்களும் விசாரணையில் நெருக்கப்படுவார்கள் என்பதால், நிர்வாகிகளின் பி.ஏக்களிடம் போலீசார் ப்ரெய்ன் வாஷ் செய்து ரகசியமாக ஆதாரங்களைத் திரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. பாஜக நிர்வாகிகள் மீதான பிடி இறுகுவதன் காரணமாகவே பலர் கட்சியில் இருந்து வெளியேறுவதாகவும் கூறப்படுகிறது.

ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் தங்களிடம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் வட்டியாக வழங்கப்படும் என விளம்பரம் செய்தது. இதை உண்மை என நம்பி அந்த நிறுவனத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் ரூ.2,438 கோடி வரை முதலீடு செய்துள்ளனர். ஆனால், உறுதியளித்தபடி ஆருத்ரா நிறுவனம் வட்டி வழங்காமல் மோசடியில் ஈடுபட்டதாக தமிழக காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, போலீசார் வழக்குப் பதிந்து 11 பேரை கைது செய்தனர்.
பாஜக நிர்வாகி : இந்த வழக்கில் ஆருந்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தின் முக்கியமான இயக்குநர்கள் பலர் வெளிநாடுகளுக்குத் தப்பியோடிய நிலையில் இயக்குநர்களில் ஒருவரான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஹரீஷ் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ஹரீஷ் பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவில் மாநில செயலாளராக இருந்துள்ளார்.

பாஜகவில் விளையாட்டு பிரிவில் மாநிலப் பொறுப்பை பெறுவதற்காக, ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு தான் திருப்பித் தர வேண்டிய பணத்திலிருந்து பாஜகவை சேர்ந்த சில நபர்களுக்கு பணம் கொடுத்ததாகவும் ஹரீஷ் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
ஒப்புக்கொண்ட ஹரீஷ் : அதன்படி ஹரீஷ் பணம் கொடுத்ததாகக் கூறப்பட்ட பல்லாவரத்தைச் சேர்ந்த பாஜக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த அலெக்ஸ், ராணிப்பேட்டை பாஜக மாவட்ட பொறுப்பில் உள்ள டாக்டர் சுதாகர் ஆகிய இருவருக்கும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். அவர்கள் இருவரும் நேற்று நேரில் ஆஜராகி பதில் அளித்துள்ளனர்.
ஏற்கனவே நடிகரும் தயாரிப்பாளருமான பாஜகவை சேர்ந்த ஆர்.கே.சுரேஷ் 15 கோடி ரூபாய் பெற்றதாக புகார் எழுந்த நிலையில் அவரையும் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், அவர் தலைமறைவாகியுள்ளார். ஆருத்ரா விசாரணை தற்போது தீவிரமடைந்துள்ளதால் மோசடியில் தொடர்புடைய மேலும் சில முக்கியப் புள்ளிகள் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

கண்காணிப்பு வளையத்தில் உதவியாளர்கள் : பாஜக விளையாட்டு பிரிவின் மாநில நிர்வாகி ஹரீஷிடம் நடத்திய விசாரணையில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும், அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் சில பாஜகவின் முன்னணி நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பதும் அம்பலமாகியுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
ஆருத்ரா வழக்கில் தொடர்புடைய பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் போலீஸ் கண்காணிப்பு வளையத்தில் இருப்பதாகவும், அவர்களின் உதவியாளர்களை போலீசார் வளைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆருத்ரா மோசடியில் பாஜக நிர்வாகிக்கு இருக்கும் தொடர்புகளுக்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன, அவர்கள் சிக்கினால் பி.ஏக்களான நீங்களும் விசாரணையின் பிடியில் வருவீர்கள் என பிரெய்ன் வாஷ் செய்து கூடுதல் தகவல்களை போலீசார் திரட்டி வருகின்றனராம்.
பாஜக முக்கிய புள்ளிகளின் மீதான போலீசாரின் பிடி இறுகுவது, பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் போலீஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டு வருவதால், பல நிர்வாகிகள், கட்சியினரை சந்திப்பதையே சமீப சில நாட்களாகத் தவிர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.
வெகு விரைவில் : சமீப காலமாக, பாஜகவில் இருந்து முக்கிய பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகள் விலகுவதற்கும், இந்த ஆருத்ரா வழக்கின் பிடி சிலர் மீது இறுகுவதே காரணம் என்றும் கூறப்படுகிறது. இன்று கூட பாஜகவில் இருந்து விலகியுள்ள பொருளாதார பிரிவு மாநில செயலாளர் கிருஷ்ண பிரபு, ஆருத்ரா மோசடியில் பாஜகவினர் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
விரைவில் பாஜகவின் முக்கியமான புள்ளிகள் ஆருத்ரா வழக்கில் அதிரடியாக கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இப்போது கைது நடவடிக்கை மேற்கொண்டால், சட்டப்பேரவையில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும் என்பதால், பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்த பிறகு இந்த கைது நடவடிக்கை இருக்கலாம் என்கிறார்கள்.
-
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications