சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டாலினிடம் "கிறிஸ்துவ" புத்தகத்தை தந்த கவிதா ஐஏஎஸ்! சீறிய பாஜக.. அர்த்தமுள்ள இந்துமதம் தந்து பதிலடி

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஸ்டாலினிடம் புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு IAS கிறிஸ்துவ ரீதியான புத்தகம் ஒன்றை வழங்கியதற்கு பாஜக கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றதும் தனக்கு பொன்னாடைகள், பூக்கள் கொடுக்க வேண்டாம் என்று குறிப்பிட்டார். மாறாக புத்தங்கங்கள் மட்டுமே கொடுங்கள் என்று அவர் தெரிவித்தார்.

சார்பெழுத்துகள் யாவை?.. 10ம் வகுப்பு லாஸ்ட் பெஞ்சில் அன்பில் மகேஷ்! கைகட்டி பவ்யமாக கவனித்த அமைச்சர்சார்பெழுத்துகள் யாவை?.. 10ம் வகுப்பு லாஸ்ட் பெஞ்சில் அன்பில் மகேஷ்! கைகட்டி பவ்யமாக கவனித்த அமைச்சர்

இதையடுத்து முதல்வர் ஸ்டாலினை சந்திக்கும் அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள், தலைவர்கள் அவருக்கு புத்தகங்களே வழங்குகிறார்கள்.

ஸ்டாலின் புத்தகம்

ஸ்டாலின் புத்தகம்

முதல்வர் ஸ்டாலினும் பெரிய தலைவர்களை சந்திக்கும் போதெல்லாம் அவர்களுக்கு புத்தகம் வழங்குகிறார். சமீபத்தில் பிரதமர் மோடிக்கு கூட முதல்வர் ஸ்டாலின் சிலப்பதிகாரம் புத்தகத்தை வழங்கினார். இந்த நிலையில்தான் புதுக்கோட்டை சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு அம்மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கிறிஸ்துவம் தொடர்பான புத்தகம் ஒன்றை அளித்துள்ளார் . கடந்த 8ம் தேதி புதுக்கோட்டையில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க முதல்வர் அங்கு சென்று இருந்தார்.

கவிதா ராமு

கவிதா ராமு

அப்போது மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, முதல்வர் ஸ்டாலினுக்கு "அறியப்படாத கிறிஸ்தவம்" என்ற புத்தகத்தை வழங்கினார். அதோடு இது தொடர்பாக விளக்கம் அளித்து, புத்தகத்தின் சிறப்பை கூறி, பேஸ்புக் போஸ்ட் ஒன்றையும் வெளியிட்டார். இதையடுத்து கவிதா ராமு IAS கிறிஸ்துவ ரீதியான புத்தகம் ஒன்றை வழங்கியதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆட்சியர் ஒருவர் இப்படி செய்திருக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கவிதா ராமு தனது பேஸ்புக் போஸ்ட்டை நீக்கினார்.

 அறியப்படாத கிறிஸ்துவம்

அறியப்படாத கிறிஸ்துவம்

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்ட பாஜக சார்பாக இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது பற்றி புதுக்கோட்டை மாவட்ட பா.ஜ.க. தலைவர் செல்வ அழகப்பன் வெளியிட்ட பேஸ்புக் பதிவில், புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு IAS , முதல்வரின் புதுக்கோட்டை வருகையின் போது வழங்கிய புத்தகம் - 'அறியப்படாத கிருஸ்த்தவம்' இந்த நூலை பரிசாக வழங்கியதன் காரணத்தை மாவட்ட ஆட்சியரது முகநூல் இணைப்பில் காண முடியும். உயர்மட்ட அரசு பொறுப்பில் இருக்கிற, கட்சி மதங்களுக்கு சாராமல் செயல்பட வேண்டிய ஒரு மாவட்டத்தில் ஆட்சியர், கிருத்துவ மதத்தை முன்னிறுத்துகிறார் வழிமொழிகிறார் தூக்கி பிடிப்பதாக அமைகிறது. திராவிடத்தின் பெருமையை, கிருத்துவ மதத்தின் வளர்ச்சியை மாவட்டத்தின் ஆட்சியர் மதம் சார்ந்து பற்று கொண்டிருப்பதாக இருக்கிறது.

பாஜக எதிர்ப்பு

பாஜக எதிர்ப்பு

இது தான் திராவிட அரசியல் கற்பிக்கும் மதசார்பற்ற அரசியலா? என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதோடு ஆட்சியர் கவிதா ராமு அறியப்படாத கிருஸ்துவம் எனும் நூலை பரிசாக வழங்கியது குறித்தும், அதனை மாவட்ட ஆட்சியரது முக நூல் பதிவேட்டில் குறிப்பிட்டது பற்றியும், மத சார்பான முறையில் நடந்துள்ள மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு முதல்வருக்கு புதுக்கோட்டை மாவட்ட பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது, என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

அர்த்தமுள்ள இந்துமதம்

அர்த்தமுள்ள இந்துமதம்

இந்த நிலையில் இன்று கவிதா ராமுவிற்கு பாஜக சார்பாக அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகம் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக பாஜக புதுக்கோட்டை மாவட்ட தலைவர் செல்வ அழகப்பன் செய்துள்ள போஸ்டில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தமிழக முதல்வருக்கு வழங்கிய அறியப்படாத கிருஸ்துவம் எனும் நூல் குறித்த மாவட்ட ஆட்சியரின் முகநூல் பதிவிற்கு, அது ஒரு தனி மதத்தின் சார்பாக உள்ளதால், தனது ஆட்சேபணையை தெரிவித்தது புதுக்கோட்டை மாவட்ட பாஜக. பாஜக ஆட்சேபணை கருத்துக்களுக்கு இணங்க மாவட்ட ஆட்சியர் தமது முகநூல் பதிவை நீக்கியதற்காக, புதுக்கோட்டை மாவட்ட பாஜக, மாவட்ட ஆட்சியருக்கு, எழுத்து சித்தர் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகத்தை வழங்கி நன்றி தெரிவித்தோம், என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
BJP opposes Pudukottai IAS Kavitha Ramu for giving a Christian book CM Stalin. முதல்வர் ஸ்டாலினிடம் புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு IAS கிறிஸ்துவ ரீதியான புத்தகம் ஒன்றை வழங்கியதற்கு பாஜக கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X