காங்கிரஸுடன் 70 சீட்டுக்கு டீல் முடித்த தவெக? சட்டென "அவரை" அழைத்த டெல்லி பாஜக? முடிவை மாற்றிய விஜய்
சென்னை: காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என தவெகவுக்கு பாஜக உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தவெக தனித்து போட்டியிடும் என சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் 16-ஆவது சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைந்து ஏப்ரல் மாதத்தில் 17-ஆவது சட்டசபைக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 4 முனை போட்டி நிலவும் சூழல் உள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் களத்தில் உள்ளன.

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி எனற கொள்கையுடன் தமிழகத்தில் அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கிய விஜய், ஆட்சியில் பங்கு என்று முழங்கினார். 1952 ஆம் ஆண்டு முதல் தேர்தல் நடந்து வரும் நிலையில் தமிழகத்தில் இதுவரை ஆட்சியில் பங்கு என்று இருந்ததே இல்லை.
விஜய்யின் ஆஃபரை காங்கிரஸ் கட்சி உற்று பார்த்தது. இதனால் விஜய்யுடன் கூட்டணி சேரவும் முடிவு செய்ததாக சொல்லப்படுகிறது. ராகுல் காந்திக்கு நெருக்கமானவரான பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
அப்போது காங்கிரஸ் கட்சிக்கு 70 தொகுதிகள், 1 துணை முதல்வர் பதவி, 6 அமைச்சர் பதவிகள், 2029 நாடாளுமன்றத் தேர்தலில் 28 தொகுதிகள் என தவெக தரப்பில் இருந்து வாக்குறுதிகள் காங்கிரஸுக்கு கொடுக்கப்பட்டதாம். இத்தனை ஆண்டுகளாக திமுகவுடன் கூட்டணியில் இருந்து ஆட்சியில் பங்கு என்ற காணகிடைக்காத விஷயங்களை விஜய் சொன்னதால் காங்கிரஸ் மகிழ்ச்சி அடைந்ததாம்.
இதனால் எப்படி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி விஜய்யின் ஆஃபர்களை அனுபவிப்பது என யோசித்ததாம். அப்போதுதான் திமுகவிடம் 41 தொகுதிகள், ஆட்சியில் பங்கு, உள்ளாட்சித் தேர்தலில் 20 சதவீத இடங்கள் என காங்கிரஸ் வலியுறுத்தியதாம்.
இந்த நிலையில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவைக் கூட திமுக தலைமை அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதை அறிந்து கொண்ட டெல்லி தலைமை, என்ன நடக்கிறது என வேடிக்கை பார்த்ததாம்.
இந்த நிலையில்தான் விஜய்யின் ஜனநாயகன் படம் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் விஜய்யின் அரசியல் ஆலோசகரான விஷ்ணு ரெட்டி, டெல்லி சென்று பாஜக தலைமையை சந்தித்தாராம். அப்போது அவரிடம் "ஒன்னு எங்க கூட நீங்கள் கூட்டணிக்கு வரணும். இல்லாவிட்டால் தனித்து போட்டியிடுங்கள். காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கக் கூடாது" என உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
மேலும் சென்சார் பிரச்சினையை கிளியர் செய்து ஜனநாயகன் படம் வெளிவர உதவி செய்வதாகவும் உறுதியளிக்கப்பட்டதாம். இதனால் அவர் தவெக தனித்தே போட்டியிடும் என சொல்லப்படுகிறது. மேலும் தவெகவுக்கு வாக்கு சதவீதம் இல்லை என திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூறி வருவதால் தங்களது பலத்தை நிரூபிக்க தனித்து போட்டியிட்டால் நன்றாக இருக்கும் என விஜய் கருதுவதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications