தமிழ் கல்வெட்டுகளை பாதுகாக்கணும்.. “சென்னையில் வசதிகள் தேவை”.. மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்!
சென்னை : மைசூருவில் இருந்து சென்னைக்கு மாற்றப்பட்ட 28 ஆயிரம் தமிழ் கல்வெட்டுகளை பாதுகாக்கும் வகையில் சென்னை மண்டலத்தில் வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என மத்திய கலாச்சார அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
கர்நாடகா மாநிலம் மைசூருவில் உள்ள இந்திய தொல்லியல் ஆய்வகத்தில், தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான கல்வெட்டுகளின் படிகள் பாதுகாக்கப்பட்டன. இங்கு தமிழ் கல்வெட்டுகள் சிதைக்கப்படுவதாக பரவலாக புகார் எழுந்தது. இதனால், அவற்றை தமிழ்நாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வெட்டுப் படிகள் சென்னை கொண்டு வரப்பட்டன. இந்நிலையில், சென்னைக்கு மாற்றப்பட்ட தமிழ் கல்வெட்டுகளை பாதுகாக்கும் வகையில் சென்னை மண்டலத்தில் வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மத்திய கலாச்சார அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், "மைசூருவில் உள்ள தொல்லியல் துறையின் கல்வெட்டு பிரிவில் பாதுகாக்கப்பட்ட 28 ஆயிரம் தமிழ் கல்வெட்டுகள், 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சென்னை மண்டல அலுவலகத்துக்கு மாற்றப்பட்டன. இவற்றைப் பாதுகாக்கும் வசதி சென்னை மண்டல அலுவலகத்தில் இல்லை.

இந்த முக்கியமான கல்வெட்டுகள் வெப்பநிலை மற்றும் பாதகமான வானிலை காரணமாக உடைந்து போகின்றன. இந்த கல்வெட்டுகள் அனைத்தும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவே, சென்னை மண்டலத்தில் கல்வெட்டுகளை பாதுகாக்க வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications