வேற வழியில்லை.. சவுத்தில் களமிறங்கும் பாஜக! அதே ‘தலைகளுக்கு’ மீண்டும் வாய்ப்பு? பரபர பாலிடிக்ஸ்!
சென்னை : தேசிய கட்சியாக இருந்தாலும் தமிழகத்தைப் பொறுத்தவரை குறிப்பிடத் தகுந்த வெற்றி பெற முடியாத பாஜக தற்போதும் கடந்த தேர்தல்களைப் போல தென் மாவட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் அதிகபட்சமாக கோவையில் வேண்டுமானால் போட்டியிடலாம் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.
சட்டமன்ற தேர்தலில் கூட்டணி மீண்டும் தொடர வேண்டும் என பாஜக தலைமை விரும்புகிறது. இதற்கு காரணம் பாஜக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆரிய கட்சிகள் உள்ளாட்சி தேர்தல்களில் தனித்து களம் கண்டு தோல்வியடைந்தன.
இதனால் தற்போதுள்ள அதிமுக - பாஜக கூட்டணியில் இரு கட்சிகளையும் சேர்த்து தேமுதிகவுக்கு இருக்கும் ஓரளவு செல்வாக்கையும், வட மாவட்டங்களில் பாமகவுக்கு இருக்கும் செல்வாக்கையும் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது

பாஜக கூட்டணி
டெல்டா மாவட்டங்களில் சசிகலா டிடிவி தினகரனுக்கு இருக்கும் ஆதரவு, தென் மாவட்டங்களில் ஓபிஎஸ்க்கு இருக்கும் ஆதரவு, கொங்கு மண்டலத்தில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு, வடமாவட்டங்களில் இருக்கும் பாமக ஆதரவு ஆகியவற்றை வைத்து வலுவான கூட்டணி மூலம் தமிழகத்தில் குறிப்பிடத் தகுந்த வெற்றியை பெற முடியும் என பாஜக விரும்புகிறது. ஆனால் இதனால் தனக்கான முக்கியத்துவம் வெகுவாகக் குறையும் என்பதால் அதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.

மெகா கூட்டணி
சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆதரவு இல்லாமல் மெகா கூட்டணியை அமைத்து எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுகவின் முகமாக வரவேண்டும் என அவர் நினைக்கிறார். ஆனால் பாஜக தலைமை அதனை விரும்பவில்லை சட்டமன்றத் தேர்தலில் இருந்தது போல கூட்டணி அமைக்கும் போது கூடவே டிடிவி தினகரன் வந்தால் பெரு வெற்றி பெறலாம் என பாஜக தலைமை விரும்புகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் நிறைய கால இடைவெளி இருந்தாலும் தற்போது தேர்தல் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் இதற்காக தொகுதி பங்கீடு பட்டியலும் தயாராக இருக்கிறது.

தென் மாவட்டங்களில் கவனம்
அந்த வகையில் 13 தொகுதிகளை பாஜக தலைமை தேர்ந்தெடுத்து அதில் பத்தில் போட்டியிட முடிவு செய்திருக்கிறது என கூறுகின்றனர். ஆனால் தேசிய கட்சியாக இருந்தாலும் தமிழகத்தை பொறுத்தவரை தனக்கான இடத்தை பிடிக்க போராடிவரும் பாஜக தென் மாவட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாக அந்த கட்சியினரே புலம்பி வருகின்றனர். கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாஜகவுக்கு கோவை ராமநாதபுரம் சிவகங்கை தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

கடந்த தேர்தல்கள்
அதற்கு முந்தைய மக்களவைத் தேர்தல்களில் திருச்சி, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் அதிமுக திமுக கூட்டணியில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. தற்போது கிடைத்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட தென் மாவட்டங்களில் இருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். விதிவிலக்காக படப்பகுதியில் உள்ள சென்னையில் வடசென்னை தொகுதியில் இருந்து பாஜக மூத்த தலைவரான இல கணேசன் ஒருமுறை வெற்றி பெற்றிருக்கிறார். இந்த நிலையில் இந்த பட்டியலை கருத்தில் கொண்டு கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக இந்த தொகுதிகளை கேட்டு பெற்றது.

மீண்டும் திட்டம்
ஆனால் கடந்த தேர்தலில் அதிமுக மீது தான எதிர்ப்பு காரணமாகவும் பொதுவாகவே பாஜக எதிர்ப்பு மனநிலை காரணமாக படுதோல்வி அடைந்தது அந்த கூட்டணி. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட பாஜக தற்போதும் தென் மாவட்டங்களிலேயே போட்டியிட திட்டமிட்டு இருக்கிறது அந்த வகையில் தற்போதும் கோவை கன்னியாகுமரி நெல்லை உள்ளிட்ட சில தொகுதிகளை குறி வைத்து பாஜக தலைவர்கள் காய்களை நகர்த்தி வருகின்றனர் என்கின்றனர் பாஜக நிர்வாகிகள். மேலும் நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச் ராஜா உள்ளிட்ட தலைவர்களே மீண்டும் போட்டியிட முயல்வதாகவும் கூறப்படுகிறது.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications