சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜகவுக்கு எதிராக.. திமுக தீர்மானம் போடும் என்று தெரிந்தும்.. வானதி சீனிவாசன் சொன்ன பதிலை பாருங்க..!

கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு பாஜக வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: "தமிழக அரசு கிராம சபை கூட்டங்களை ரத்து செய்து இருப்பது தேவையற்றது... கிராமங்களில் கொரோனா பாதிப்பு குறைவு என்ற நிலையில் சமூக இடைவெளியுடன் கூட்டத்தை நடத்தி இருக்கலாம்" என்று பாஜகவின் வானதி சீனிவாசனே கருத்து தெரிவித்துள்ளது உற்று நோக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளில் குடியரசு தினமான ஜனவரி 26, தொழிலாளர் தினமான மே 1, சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 மற்றும் காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2 ஆகிய 4 சிறப்பு நாட்களின்போது கிராம சபை நடத்தப்படும்.

BJP Vanathi Srinivasan says about Village council meeting canceled

ஆனால், மே 1, ஆகஸ்ட் 15 ஆகிய தேதிகளில் நடக்கவிருந்த கூட்டம் கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது.. அதுபோலவே, லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதன் அடிப்படையில்தான், கிராம சபை கூட்டத்துக்கான ஏற்பாடுகள் அந்தந்த ஊராட்சி தலைவர்களால் செய்யப்பட்டு வந்தன.. ஆனால், திடீரென இந்த கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அந்தந்த மாவட்ட நிர்வாகங்களால் அறிவிக்கப்பட்டுள்ளன. இது திமுக, மநீம உள்ளிட்ட கட்சிகளுக்கு பெருத்த அதிர்ச்சியை தந்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த வாரம் முழுவதும் வலியுறுத்தியபடியே வந்தார்.. அதுபோலவே, கொரோனா கால செலவு கணக்கை கமல் கேட்டு கொண்டிருந்தார்.. எனவே இரு கட்சிகளும் மாநில அரசுக்கு எதிர்ப்பு சொல்லி வரும் நிலையில், பாஜகவும் இதனை கண்டித்துள்ளது ஆச்சரியமாக உள்ளது.

அக்.7-ல் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு உறுதி? சென்னைக்கு வர அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு திடீர் உத்தரவு அக்.7-ல் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு உறுதி? சென்னைக்கு வர அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு திடீர் உத்தரவு

பாஜக துணை தலைவர் வானதி சீனிவாசன் இதை பற்றி சொல்லும்போது, "தமிழக அரசு கிராம சபை கூட்டங்களை ரத்து செய்து இருப்பது தேவையற்றது... கிராமங்களில் கொரோனா பாதிப்பு குறைவு என்ற நிலையில் சமூக இடைவெளியுடன் கூட்டத்தை நடத்தி இருக்கலாம்... மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக கிராம சபைகளில் தீர்மானம் போட்டால் அது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது.

கிராம சபை கூட்டம் நடத்தி இருந்தால் வேளாண் சட்டங்களை மக்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டு இருக்கும். தமிழகத்தில் வேளாண் சட்டங்களுக்கு பெரிய எதிர்ப்பு இல்லை" என்று தெரிவித்துள்ளார். பாஜக அரசுக்கு எதிராக தீர்மானங்களை திமுக போடும் என்று தெரிந்தும், வானதி இவ்வாறு சொல்லி உள்ளது வியப்பை தந்து வருகிறது.

English summary
BJP Vanathi Srinivasan says about Village council meeting canceled
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X