மாநகராட்சியில் பெற்ற 7.17% வாக்குகள்.. 3வது பெரிய கட்சி பாஜகதானா? தேர்தல் ஆணைய டேட்டாவை பாருங்க
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சிகளில் 7.17 சதவீத வாக்குகளைப் பெற்று, மூன்றாவது பெரிய கட்சி என்ற இடத்தை பாஜக பிடித்துள்ளது.
சென்னை: நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சிகளில் 7.17 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. இதை வைத்து மூன்றாவது பெரிய கட்சி என்று பாஜக நிர்வாகிகள் பெருமிதமடைந்து வருகிறார்கள்.
கடந்த 19ஆம் தேதியன்று நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சுமார் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. 22ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
21 மாநகராட்சிக்கள், நூற்றுக்கணக்கான நகராட்சிகள், பேரூராட்சிகளில் ஆயிரக்கணக்கான வார்டுகளைக் கைப்பற்றியுள்ளது. பலமுனைப்போட்டி நிலவியதால் வாக்குகள் பிரிந்தன. திமுக முதலிடம் பிடிக்க அதிமுக இரண்டாம் இடத்தில் உள்ளது. கோவை, திருச்சி மாநகராட்சிகளில் அதிமுகவை பின்னுக்குத்தள்ளியது காங்கிரஸ்.
தனித்துப்போட்டியிட்ட பாஜக பல வார்டுகளை வென்றது. பாஜக மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளதாக அக்கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியதற்கு காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் கே.எஸ். அழகிரி எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

திமுக வாக்கு சதவிகிதம்
வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீத விவரங்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 43 சதவீத வாக்குகளைப் பெற்று திமுக முதலிடத்தில் உள்ளது. மாநகராட்சிகளில் 43.59 சதவீத வாக்குகளைப் பெற்று திமுக முதலிடத்தில் உள்ளது. நகராட்சிகளில் 43.49 சதவீத வாக்குகளையும், பேரூராட்சிகளில் 41.91 சதவீத வாக்குகளையும் திமுக பெற்றுள்ளது.

அதிமுக வாக்கு சதவிகிதம்
இதனைத் தொடர்ந்து, மாநகராட்சிகளில் அதிமுக 24 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. நகராட்சிகளில் 26.86 சதவீத வாக்குகளையும், பேரூராட்சிகளில் 25.56 சதவீத வாக்குகளையும் அதிமுக பெற்றுள்ளது.

பாஜக வாக்கு சதவிகிதம்
மாநகராட்சிகளில் 7.17 சதவீத வாக்குகளைப் பெற்று, மூன்றாவது பெரிய கட்சி என்ற இடத்தை பாஜக பிடித்துள்ளது. நகராட்சிகளில் 3.31 சதவீத வாக்குகளும், பேரூராட்சிகளில் 4.30 வாக்குகளும் பாஜக வுக்கு கிடைத்துள்ளன. தமிழகத்தில் நோட்டா உடன் போட்டி போடும் கட்சி என்று கிண்டலடிக்கப்பட்ட பாஜக தனித்துப்போட்டியிட்டு வாக்குகளைப் பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சி
தமிழக காங்கிரஸ் கட்சிக்கு மாநகராட்சிகளில் 3.16 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன. நகராட்சிகளில் 3.04 சதவீத வாக்குகளும், பேரூராட்சிகளில் 3.85 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன.

பாமக நாம் தமிழர் கட்சி
பாமகவுக்கு சராசரியாக ஒன்றரை சதவீத வாக்குகள் கிடைத்த நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு மாநகராட்சிப் பகுதியில் இரண்டரை சதவீத வாக்குகளும், மற்ற பகுதிகளில் சுமார் 0. 8 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு?












Click it and Unblock the Notifications