’ஒன்றிய’ அரசு ‘இந்திய’ பிரதமர்! பாஜக-திமுக கூட்டணி? கிளம்பிய யூகங்கள்! முற்றுப்புள்ள வைத்த அண்ணாமலை!
சென்னை : சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி மற்றும் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட நிலையில் கடந்த காலங்களைப் போல பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுகவினர் விமர்சிக்காத நிலையில் பாஜக திமுகவுடன் கூட்டணி அமைக்க போகிறதா என்ற யூகங்கள் எழுந்த நிலையில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
தமிழகம் இதுவரை இப்படி ஒரு விழாவை பார்த்திருக்குமா என்ற அளவில் மிக பிரம்மாண்டமாக 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று முடிந்திருக்கிறது. நான்கே மாதங்களில் இவ்வளவு விரைவாக திட்டமிட்டு செயல்பட்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு முடித்திருப்பது உலக அளவில் பாராட்டுகளை பெற்றிருக்கிறது.
கடந்த ஒரு ஒரு வார காலமாகவே இறுதி கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் உலகெங்கிலும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள் தமிழகம் வந்தனர். அவர்களுக்கான உபசரிப்பும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி
குறிப்பாக செஸ் ஒலிம்பியாட் போட்டியினை பிரதமர் நரேந்திர மோடி நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் துவக்கி வைத்தார். கடந்த சில மாதங்களாகவே திமுக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நீட் தேர்வு ஜிஎஸ்டி வரிவிதிப்பு உள்ளிட்ட விவகாரங்களை மோதல் போக்கு நீடித்து வருகிறது கடந்த முறை பிரதமர் சென்னை வருகையின் போது கூட பல்வேறு விமர்சனங்களை அவர் அமர்ந்திருந்த மேடையிலேயே முதல்வர் கூறியிருந்தார். சென்னை வந்திருந்த பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் விமர்சனங்களை முன் வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

விமர்சனம் இல்லை
ஆனால் எதிர்பார்த்தது போல இல்லாமல் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஸ்டாலினும் முதல்வர் ஸ்டாலினை பிரதமர் நரேந்திர மோடியும் புகழ்ந்துள்ளனர். வழக்கமாக ஒன்றிய அரசின் பிரதமர் என குறிப்பிடும் நிலையில் இந்திய பிரதமர் என்று முதல்வர் ஸ்டாலின் அழைத்தார். மேலும் விமர்சனங்கள் எதுவும் முன் வைக்கப்படவில்லை. அதேபோல இன்று நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் பிரதமர் மோடி குறித்தும் மத்திய அரசு குறித்தும் எந்தவித விமர்சனங்களும் இல்லாமலேயே முதல்வர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் உரை இடம் பெற்றது.

பலத்த விவாதங்கள்
நேற்று முதல்வர் வரவேற்பு மற்றும் பிரதமரின் வருகையை எதிர்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட செய்திகளால் திமுகவினர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் நேற்று பிரதமர் குறித்த விமர்சனங்கள் முதல்வரின் உடைய இடம்பெறாதது பலத்த விவாதத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் சர்வதேச நிகழ்ச்சி என்பதால் பிரதமர் குறித்த விமர்சனங்கள் வைக்கப்படவில்லை என திமுகவினர் கூறினர். இந்நிலையில் இன்று நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் பிரதமர் மோடி குறித்து விமர்சனங்கள் ஏன் இடம் பெறவில்லை என சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் பாஜகவுடன் திமுக கூட்டணி அமைக்குமா எனவும் பலர் கேள்வி எழுப்பி வந்தனர்.

கூட்டணி
இதனிடையே பாஜகவுடன் திமுக கூட்டணி சேர்ப்பது குறித்த பேச்சுக்கள் எழவில்லை என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார் இது தொடர்பாக பிரதமருடனான ஆலோசனைக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசி அவர்," தமிழக முதல்வர் முதல்வராக நடந்து கொண்டார். நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியதற்காகவே முதல்வரை பாராட்டுகிறோம் அதற்காக திமுக பாஜக கூட்டணியா என கேட்டால் அது இல்லை" என வதந்திகள் மற்றும் விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications