அச்சமூட்டும் பிளாக் பங்கஸ்.. இந்தியாவில் அதிகரிக்கும் கேஸ்கள்.. 5500 பேர் பாதிப்பு.. 126 பேர் பலி!
சென்னை; இந்தியாவில் பிளாக் பங்கஸ் அல்லது மியூகோமைக்கோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை தாக்குதல் காரணமாக பலர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
Recommended Video
பொதுவாக ஒரு நோய் குறிப்பிட்ட பகுதிக்குள் பல பேருக்கு பரவினால் அது எபிடமிக் என்று அழைக்கப்படும். இதுவே பல நாடுகளுக்கு சென்றால் அதை பேண்டமிக் என்று கூறுவார்கள். எபிடமிக் என்றால் தொற்று, பேண்டமிக் என்றால் பெருந்தொற்று.
முதலில் சீனாவில் மட்டுமே பரவிய கொரோனா எபிடமிக் என்று இருந்து பின் பல நாடுகளுக்கு பரவியதும் பேண்டமிக் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது இந்தியாவில் பரவி வரும் பிளாக் பங்கஸ் நோய் தாக்குதல் எபிடமிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மக்களிடையே பரவும் தொற்றுநோய்.

எப்படி
இந்தியாவில் பலருக்கு இந்த பிளாக் பங்கஸ் பரவியதை அடுத்து பல்வேறு மாநில அரசுகள் இதை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவித்தது. இந்த நிலையில் நேற்று மதியம் இதை தொற்று நோய் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்தியாவில் வேகமாக கேஸ்கள் பரவுவதாலும், இதனால் பலர் அடுத்தடுத்து பாதிக்கப்படுவதாலும், பலியாவதாலும் தற்போது பிளாக் பங்கஸ் எபிடமிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மரணம்
இந்தியாவில் இதுவரை 5500 பேர் பிளாக் பங்கஸ் மூலம் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் உண்மையான கணக்கு இதைவிட அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை பிளாக் பங்கஸ் காரணமாக 126 பேர் நாடு முழுக்க பலியாகி இருப்பதாக அதிகாரபூர்வ கணக்கு தெரிவிக்கிறது.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் மட்டும் 90 பேர் இதுவரை பிளாக் பங்கஸ் காரணமாக பலியாகி உள்ளனர். இதற்கு அடுத்து ஹரியானாவில் 14 பேர் பிளாக் பங்கஸ் காரணமாக பலியாகி உள்ளனர். உத்தர பிரதேசத்தில் 8 பேர் பிளாக் பங்கஸ் காரணமாக பலியாகி உள்ளனர். எல்லோரும் லக்னோவை சேர்ந்தவர்கள்.

மரணம்
ஜார்கண்டில் 4 பேர் பலியாகி உள்ளனர். சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், உத்தரகாண்டில் தலா 2 பேர் இந்த பிளாக் பங்கஸ் மூலம் பலியாகி உள்ளனர். பீகார், அசாம், ஒடிசா, கோவா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் பிளாக் பங்கஸ் மூலம் பலியாகி உள்ளனர். கேரளாவில் ஒருவர் பார்வையை இழந்துள்ளார்.

மோசம்
மொத்தத்தில் இந்தியா முழுக்க இந்த பூஞ்சை வேகமாக பரவி வருகிறது. மாநில வாரியாக முழுமையான விவரம் வெளியாகவில்லை என்றாலும் கூட கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலும் பிளாக் பங்கஸ் கேஸ்கள் பதிவாகி உள்ளனர். தமிழகத்தில் 10 பேரும், கேரளாவில் 15 பேரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சை
தமிழகத்தில் பாதிக்கப்பட்ட எல்லோரும் இப்போது சீரான உடனிலையுடன் உள்ளனர். இவர்களுக்கு தீவிரமாக சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. பிளாக் பங்கஸ் கேஸ்கள் அதிகரித்து வருவதால் இதற்கு மருந்தாக வழங்கப்படும் liposomal amphotericin B மருந்துக்கு பல மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்பட தொடங்கி உள்ளது.
-
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
மிக பெரிய ஆபத்தில் சீனா.. இனி என்ன செய்தாலும் ஒன்னுமே மாறாது.. ஆனா இந்தியாவுக்கு பயங்கர லாபம்! -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்!












Click it and Unblock the Notifications