Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Vijay Car: விஜய் காரின் பின்னால் ஜாக்கிங் செய்த புஸ்ஸி ஆனந்த்! ப்ளூசட்டை மாறன் கிண்டல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பனையூர் தவெக அலுவலகத்தில் 3ஆம் ஆண்டு தொடக்கவிழா நிகழ்ச்சிக்கு வந்த விஜய்யின் காரின் பின்னால் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் ஓடி வந்ததை ஜாக்கிங் செய்ததாக ப்ளூசட்டை மாறன் விமர்சித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சி கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி பனையூரில் தொடங்கப்பட்டது. இந்த கட்சியின் தலைமையிடம் பனையூரில் உள்ளது.

Vijay car

இதன் தலைவர் விஜய். இந்த கட்சி தொடங்கி 2 ஆண்டுகள் முடிந்து மூன்றாவது ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது. பனையூரில் நடந்த இந்த விழாவில் விஜய், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் விஜய் கலந்து கொண்டதால் அவருக்கு கரகாட்டம், ஒயிலாட்டம், வாத்தியங்கள் என தவெகவினர் ஏற்பாடு செய்திருந்தனர். விஜய் கட்சி அலுவலகத்திற்குள் வரும் போது எல்லா வாத்தியங்களும் வாசிக்கப்பட்டு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது அந்த இடத்தில் அவர் காரை விட்டு வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் காரை விட்டு வரும் விஜய்யுடன் அப்படியே ஊர்வலமாக வரலாம் என புஸ்ஸி ஆனந்த், நிர்வாகிகள், பாதுகாவலர்கள் நின்றிருந்தனர்.

ஆனால் விஜய் காரை விட்டு இறங்கவே இல்லை. இதனால் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் அலுவலக வாசலில் விஜய்யை வரவேற்க வேண்டும் என்பதற்காக காரின் பின்னால் ஓடி வந்தனர். அப்போது புஸ்ஸி ஆனந்தும் ஓடி வந்தார்.

இதை சினிமா விமர்சகர் ப்ளூசட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது விஜய்யின் காரின் பின்னால் ஜாக்கிங் ஓடி வரும் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் என குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+