சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பக்கிங்ஹாம் கால்வாய் வழக்கு.. ஜூன் 10க்குள் ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற சென்னை ஹைகோர்ட் உத்தரவு!

சென்னை பக்கிங்ஹாம் கால்வாயிலிருந்து ஜூன் 10க்குள் ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை பக்கிங்ஹாம் கால்வாயிலிருந்து ஜூன் 10க்குள் ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை ஆர்.ஏ புரம் பக்கிங்காம் கால்வாயிலும் ஏராளமான வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால் மழை காலங்களில் வெள்ள நீர் வீதிகளுக்கு வந்து விடுவது வழக்கம். மழைக்காலங்களில் அதிக அளவில் பாதிப்பை சந்திப்பது இந்த ஆக்கிரமிப்பு வீடுகளில் வசிப்பவர்களே.

Buckingham Canal Case: Land Occupiers should move to government quarters order MHC

இதனால் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும், தொழிற்சாலை கழிவுகளை கொட்டுவதை தடுக்க கோரியும் சென்னை ஹைகோர்ட்டிலும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நிறைய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்த நிலையில் இந்த தீர்ப்பை மறுசீராய்வு செய்ய கோரி சென்னை ஹைகோர்ட்டில் 100க்கும் மேற்பட்ட நபர்கள் மனுதாக்கல் செய்தனர். இவர்கள் எல்லோரும் ஆர்.ஏ புரம் பக்கிங்காம் கால்வாய் பகுதியில் வசித்து வருகிறார்கள்.

இந்த மறுசீராய்வு மனுக்கள் மீதான வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி சென்னை பக்கிங்ஹாம் கால்வாயிலிருந்து ஜூன் 10க்குள் ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உடனடியாக இவர்கள் அரசு வழங்கி இருக்கும் குடிசை மாற்று வாரியத்திற்கு செல்ல வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இவர்கள் ஆக்கிரமிப்புகளை காலி செய்யவில்லை என்றால் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

English summary
Buckingham Canal Case: Land Occupiers should move to government quarters order Madras High Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X