வங்கக் கடலில் புஸ்ஸி ஆனந்த்? விஜயுடன் இரவில் பேச கூடாதா? பலம் பெறுகிறது தவெக கட்டமைப்பு: யார் பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: புஸ்ஸி ஆனந்த் கப்பலில் தலைமறைவாகவே உள்ளதாக தகவல்கள் கசிந்தபடியே இருந்தன. இந்நிலையில், கரூர் சம்பவம் முடிந்து 16 நாட்களுக்கு பிறகு, விஜய்யின் நீலாங்கரை வீட்டிற்கு சிவப்பு நிற சென்றதாகவும், விஜய்யுடன் 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் பரபரத்தன.. பிறகு அங்கிருந்து வெளியே வந்த புஸ்ஸி ஆனந்தின் கார், புதுவையை நோக்கி சென்றதாகவும் கூறப்பட்டன. இந்நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு இளைஞர் கட்சி தன்னுடைய கருத்துக்களை கூறியிருக்கிறது.

Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள தமிழ்நாடு இளைஞர் கட்சி நரேஷ், "கரூர் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.. 16 நாட்களாக தவெகவில் எல்லாரும் ஓடிவிட்டார்கள், பயந்துவிட்டார்கள் என்று பலரும் சொல்லி கொண்டிருக்கிறார்கள்..

vijay tvk

துக்க வீட்டில் எதையெல்லாம் செய்யக்கூடாதோ, அதையெல்லாம் ஆளும் கட்சியில் உள்ளவர்கள், ஊடகங்கள் தொடர்ந்து செய்து, துக்கத்தில் உள்ளவர்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தி வருகிறார்கள். இந்த 16 நாட்களும் அவர்களுடன் நாங்கள் இருந்தோம்.. 16வது நாள் கடந்தும்கூட துக்கம் அந்த வீடுகளில் குறையவில்லை..

இப்படிப்பட்ட சூழலில் ரொம்பவும் பக்குவம் நிறைந்த கட்சியாக தவெக மட்டுமே உள்ளது.. இந்த பிரச்சனையில் ஒரே பக்கத்தில் பழியை தூக்கி போடுவோம் என்ற முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் மக்களிடம் அந்த முயற்சி எடுபடவில்லை. மக்களுக்கு உண்மை தெரியும்.. நீதி கண்டிப்பாக வெல்லும்.

இரவில் விஜய்யுடன் சந்திப்பு?

புஸ்ஸி ஆனந்தை காணோம் என்கிறார்கள்.. அவர் மீது ஏதாவது பிடிவாரண்ட் உள்ளதா? குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு, அவர் தலைமறைவாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.. அவர் மீது பிடிவாரண்டும் கிடையாது,. எப்ஐஆரில் பெயர் மட்டுமே உள்ளது.. முன்ஜாமீன் கோரி நீதிமன்றம் சென்றிருக்கிறார்கள்..

அதற்காக அவர் தலைமறைவாக இருக்கிறார் என்று பேசுவது அபத்தம். வன்மத்தின் உச்சம்.. இதையெல்லாம் திமுக செய்யும். தவெகவினர் நிறைய பேர் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் பாதிக்கப்பட்டவர்களுடன் புஸ்ஸி ஆனந்த் இருக்கிறார். எல்லாரிடமும் பேசிட்டுதான் இருக்கார்..

புஸ்ஸி ஆனந்த் எங்கே

ஏன் இரவு நேரத்தில் கட்சி தலைவருடன் புஸ்ஸி ஆனந்த் பேசக்கூடாதா என்ன? நள்ளிரவில் சந்திக்கவே கூடாதா? பகலில் அவர்கள் சந்தித்து பேசிக் கொள்ளவேயில்லை என்று உறுதியாக தெரியுமா? தெரியாத விஷயங்களை பேசுவது சரியா? கட்சி தலைவரை எப்போது எங்கே சந்தித்து நிர்வாகிகள் பேச வேண்டும் என்பதெல்லாம் அக்கட்சியினரின் உரிமை..

ஆரம்பத்திலிருந்து தவெகவினர் அமைதியாக இருக்கிறார்கள் என்பதற்காகவே அவதூறுகளை அள்ளி வீசுவதா? அப்படி அவதூறுகளை அள்ளி வீசித்தான், இன்று அம்பலப்பட்டு போய் நிற்கிறது திமுக அரசு. இதைத்தான் உச்சநீதிமன்றமும் தெளிவாகவே சொல்லி உள்ளது.

மொத்த பழியும் தவெக மீது

சிபிஐ விசாரணைக்கு போயிருப்பதால் உண்மைகள் பல வெளிவரும்.. முக்கியமாக விசாரணை வெளிப்படையாக நடக்கும் என்று நம்பலாம்.. இதில் 2 பேர் சம்பந்தப்பட்டுள்ளார்கள்.. ஒன்று, நிகழ்ச்சியை நடத்திய தவெக.. மற்றொன்று நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு தருவதாக சொன்ன காவல்துறை.. அதாவது காவல்துறையை கையில் வைத்திருக்கக்கூடிய தமிழக அரசு.. இவர்கள் இருவருக்குமே பொறுப்பு உள்ளது..

ஆனால், சம்பவம் நடந்ததுமே மொத்த பழியையும் தூக்கி போடும் வேலையை திமுக மிக சிறப்பாக செய்து கொண்டிருந்தது..

ஓவர்நைட்டில் உத்தரவுகள்

ஓவர்நைட்டிலேயே தனிநபர் ஆணையம் அமைப்பது, நிவாரணம் அறிவிப்பது இதெல்லாம் தேவைதான் ஆனால் அந்த ஆணையம் அமைக்கப்பட்டதே, நீதிமன்ற வழக்கை தேக்க வைப்பதற்கான பிளான்தான். ஏன் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடவில்லை? விசாரணையை அப்படியே அமைத்திருக்கலாமே?

சம்பந்தமேயில்லாமல் ஒருவரை அழைத்து வந்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவைத்து, சம்பந்தமேயில்லாம்ல தீர்ப்பு வரும் அளவுக்கு நிலைமை செல்கிறது என்றால், ஒட்டுமொத்தமாகவே வெளிப்படைத்தன்மையே என்பது இங்கு இல்லையே.

எனவே சிபிஐ விசாரணையில், தவெக, திமுக என யார் தவறு செய்திருந்தாலும் சிக்குவார்கள்.. அதுமட்டுமல்ல, மாத மாதம் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், சிபிஐ விசாரணை தாமதமாகாது என்று மட்டும் தெரிகிறது.

பலம் பெறும் கட்டமைப்பு

தவெக நிர்வாகிகள் மீது ஏதேதோ வழக்குகளை புணைந்து கைது செய்து வருகிறார்கள்.. ஆனால் தொண்டர்கள் துடிப்பாகவே உள்ளார்கள்..

அதேசமயம், பக்குவத்துடன் இந்த விஷயத்தை அணுகி வருகிறார்கள்.. அந்தவகையில், இங்கே கட்டமைப்பு பலமாகவே உள்ளது.. அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. தேர்தல் நெருங்கி வருவதால், கட்சி கட்டமைப்பை வளர்க்கும் வேலையில் தவெக ஈடுபடக்கூடும் என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+