மார்க்கெட் விலையில் மின்சாரம் வாங்குவது தப்பா.. இதெல்லாம் முறைகேடு இல்லை.. அருண்ராஜ் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக ஆட்சிக்கு வந்து 5 மாதங்களாகிறது. மின் கொள்முதல், விலைவாசி உயர்வு, அதிமுக எம்எல்ஏக்களிடம் பேரம் உள்ளிட்ட ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். குதிரை பேரத்தை மறுத்து வந்தனர். ஆனால் அமைச்சர்களே குதிரை பேரத்தை ஊக்குவிப்பதை வெளிப்படையாக பேசுவது சர்ச்சையாகியுள்ளது. மின் கொள்முதல் முறைகேடு புகார் தொடர்பாக அமைச்சர் அருண்ராஜ் விளக்கமளித்துள்ளார்.

சென்னையில் அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இந்த பருவத்தில் நமக்கு காற்றாலை மின் உற்பத்தி கிடைக்கவில்லை. நமக்கு மழையும் குறைவாக உள்ளது. வெயில் அதிகமாக இருப்பதால் மின் தேவையும் மிகவும் அதிகமாக உள்ளது. தேவைக்கான விநியோகம் இல்லை. தேவை அதிகமாக உள்ளதால் ஓப்பன் மார்க்கெட்டில் கொள்முதல் செய்கிறோம். யார் கொள்முதல் செய்தாலும் இதே நிலை தான்.

buying-electricity-at-market-rates-is-no-wrongdoing-says-minister-arunraj-amid-power-purchase-scam

அண்டை மாநிலங்களை விட

அண்டை மாநிலங்களில் முன்பாகவே மின் கொள்முதலுக்கான ஒப்பந்தம் போட்டுள்ளனர். அதனால் அவர்கள் விலை குறைவாக கொள்முதல் செய்கிறார்கள். நாம் ஓப்பன் மார்க்கெட்டில் வாங்குவதால் இந்த விலை. அவ்வளவுதான். நாம் ஒன்றும் அதிக விலை கொடுத்து வாங்கவில்லை. மார்க்கெட்டில் என்ன விலை இருக்கிறதோ அதற்கு தான் வாங்குகிறோம். மார்க்கெட் விலையை விட அதிக விலை கொடுத்தால் நீங்கள் கேட்கலாம்.

இதில் ஏதாவது முறைகேடு இருந்தால் எங்களை விமர்சிப்பது நியாயம். மார்க்கெட்டில் உள்ள விலையை கொடுத்து வாங்குகிறோம். நிச்சயமாக முறைகேடுக்கு இடம் கொடுக்க மாட்டோம். மக்களுக்கு மின்சார கட்டணம் அதிகரிக்கும் என்கிற அச்சம் தேவையில்லை. இது தற்காலிக சூழ்நிலை தான். விரைவில் இதை கடந்து வருவோம். இந்த நிலைமையை சரி செய்ய அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. கவலைப்பட தேவையில்லை.

குதிரை பேரத்துக்காகவா

குதிரை பேரம் செய்வதற்காக அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதாக அதிமுக சொல்கிறார்கள். எங்களுக்கு குதிரை பேரம் என்றால் என்னவென்றே தெரியாது. அதை தெரிந்து கொள்ளவும் விருப்பம் இல்லை. திமுக, அதிமுக தான் குதிரை பேரம் செய்தனர். நாங்கள் ஆட்சிக்கு வருவதை தடுக்க அவர்கள் இருவரும் செய்தது என்ன. அனைவரின் நியாயமான கோரிக்கையும் அரசு பரிசீலனை செய்யும். கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க காலம் தேவை. மற்றபடி யார் மீதும் நடவடிக்கை எடுப்பதில்லை. போராடுவதற்கு முன்பே கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க முயற்சிபோம் " என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+