சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கால்நடை மருத்துவ படிப்புகள்..ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பம் - செப்.26 ல் கடைசி தேதி

Google Oneindia Tamil News

சென்னை: கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. adm.tanuvas.ac.in என்ற இணையத்தளத்தில் இன்று முதல் 26-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
இவற்றில் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்புப் படிப்பு (பி.வி.எஸ்சி - ஏ.ஹெச்), உணவு, கோழியினம், பால்வள தொழில்நுட்பப் படிப்புகள் உள்ளன. இவற்றுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

BVSc Admission 2022 Online Application from Today - Last Date on 26th Sep

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்புப் படிப்புக்கு 480 இடங்கள் உள்ளன. இவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 72 இடங்கள் போக, மீதமுள்ள 408 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.

வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு மூலம் நல்ல வருமானத்தை ஈட்டலாம். இதன்மூலம் ஆண்டுதோறும் நமக்கு வருமானம் கிடைக்கும். அதனாலேயே இது வேளாண் அமைப்பின் முக்கிய அங்கமாக இருக்கிறது. கால்நடை மருத்துவம் பயில, இன்று அநேகர் விரும்புகிறார்கள்.

 உத்தர பிரதேசத்தில் சிறைக்கைதிகள் 26 பேருக்கு எச்.ஐ.வி.. மருத்துவ பரிசோதனையில் அதிர்ச்சி! உத்தர பிரதேசத்தில் சிறைக்கைதிகள் 26 பேருக்கு எச்.ஐ.வி.. மருத்துவ பரிசோதனையில் அதிர்ச்சி!

கால்நடைப் பராமரிப்புத் துறையில் கால்நடை உதவி மருத்துவர் வேலையில் சேரலாம். இந்திய அளவிலும் கால்நடை மருத்துவருக்கான பல்வேறு பணியிடங்கள் உள்ளன. நிறைய ஆய்வகங்களிலும் அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் உள்ளன. தனியார் துறையைப் பொறுத்தவரை கோழிப்பண்ணை, குதிரைப் பண்ணை, தடுப்பு ஊசி மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், வங்கி, காப்பீட்டு நிறுவனங்கள் போன்ற இடங்களில் வேலைவாய்ப்புகள் உண்டு. சிலர் இந்திய ஆட்சிப் பணியில் இருக்கிறார்கள்.

கால்நடை மருத்துவம் மட்டுமல்ல தொழில்நுட்பம் படிப்பவர்களுக்கும் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உண்டு. பால்வளத் துறை, உணவு பதனிடும் துறை, கோழி இனம் சம்பந்தப்பட்ட துறை என அனைவருக்கும் வேலைவாய்ப்புகள் உள்ளதால் கால்நடை மருத்துவ அறிவியல் படிக்க அதிகம் பேர் ஆர்வம் காட்டுகின்றனர்.

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. adm.tanuvas.ac.in என்ற இணையத்தளத்தில் இன்று முதல் 26-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
BVSC Admission to veterinary courses is based on 12th class marks. It has been informed that you can apply on the website adm.tanuvas.ac.in from today on 26th till 5 pm.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X