"அவ்வளவு முயற்சி பண்ணுனாரே".. கடைசி வரை கண்டுகொள்ளாத மோடி.. அன்புமணிக்கு "நோ".. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் இருந்து பாஜக தலைவர் எல் முருகனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருக்கும் அன்புமணிக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை.

மத்திய அமைச்சரவை தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 12 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். 43 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளனர். இதில் சில இணை அமைச்சர்களாக பதவி ஏற்க இருக்கிறார்கள்.

புதிதாக பதவி ஏற்க உள்ள 43 அமைச்சர்களின் பெயர் பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் தமிழ்நாட்டில் இருந்து எல். முருகன் மட்டும் அமைச்சரவைக்கு தேர்வாகி உள்ளார்.

என்ன?

என்ன?

பாமக ராஜ்யசபா எம்பி அன்புமணிக்கு அமைச்சரவையில் பதவி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் நிலவி வந்தது. ஆனால் இவருக்கு அமைச்சரவை பதவி கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியை வலுப்படுத்தியதில் அன்புமணி முக்கிய பங்கு இருந்தது. பாமகவின் வாக்கு வங்கி பாஜகவிற்கு இந்த தேர்தலில் பெரிய அளவில் உதவியது. முக்கியமாக வன்னியர் இடஒதுக்கீடு பாஜகவிற்கு ஆதரவாக இருந்தது.

நட்பு

நட்பு

அதேபோல் அதிமுக, பாஜக கூட்டணியில் பாமக மிக முக்கியமான கட்சியாக திகழ்ந்து வருகிறது. தென் மாநிலங்களில் பாஜகவிற்கு நெருங்கிய நட்பாக இருக்கும் கட்சிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதில் பாமகதான் முன்னிலை வகிக்கிறது. பாஜகவிற்கு ஆதரவாக தொடர்ந்து பல்வேறு நிலைப்பாடுகளை எடுத்து வந்தவர் அன்புமணி ராமதாஸ்.

கிடைக்கவில்லை

கிடைக்கவில்லை

இவருக்கு எப்படியும் அமைச்சரையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. முக்கியமாக கொரோனா வைரஸ் காலம் என்பதால் டாக்டர் அன்புமணிக்கு சுகாதாரத்துறை கிடைக்குமா என்றும் எதிர்பார்ப்பு இருந்தது. ராஜ்ய சபா எம்பியாக இருப்பதால் அமைச்சர் பதவி இவருக்கு கிடைக்குமா என்று கேள்விகள் எழுந்தன. ஆனால் அன்புமணி எவ்வளவு முயன்றும், அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. சில பாஜக தலைவர்கள், சீனியர்கள் மூலம் இவர் அமைச்சர் பதவிக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

முயற்சி

முயற்சி

ஆனால் இவரின் முயற்சி பலன் அளிக்கவில்லை. பாமகவிற்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கும் திட்டம் பாஜகவிற்கு தொடக்கத்தில் இருந்தே இல்லை என்று கூறப்படுகிறது. தொடக்கத்தில் அமைச்சரவை கூட்டத்திற்கான ஆலோசனை நடத்த போது கூட பாமக குறித்து ஆலோசனை செய்யப்படவே இல்லை. பாமக பெயர் போகஸிலேயே இல்லை என்கிறார்கள்.

காரணம்

காரணம்

பல்வேறு முக்கிய கூட்டணி கட்சிகள் அமைச்சர் பதவி கேட்டதால் பாமக குறித்து பாஜக ஆலோசனை எதையும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. அதோடு மத்திய அரசுக்கு எதிராக சில நாட்களாக ராமதாஸ் வெளியிட்ட இந்தி எதிர்ப்பு, வேக்சின் விநியோகம் தொடர்பான சில கருத்துக்கள் பாஜக மேலிடத்தை அப்செட் செய்ய வைத்ததால், அன்புமணிக்கு அமைச்சர் பதவி எதுவும் கிடைக்கவில்லை என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+