சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஆபத்து?".. திருப்பி அடித்த எடப்பாடி.. அப்படின்னா "இலையின் தலை" யார்.. மேலிடத்தை நம்பும் ஓபிஎஸ்

அதிமுகவில் இரட்டை இலைக்கு சிக்கல் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் பஞ்சாயத்து ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, இரட்டை இலை சின்னத்துக்கு ஆபத்து வர வாய்ப்புள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.. எப்படி?

Recommended Video

    DMK-வுடன் இணைந்து செயல்பட்ட OPS உடன் இணைந்து செயல்பட முடியாது - EPS அறிவிப்பு

    அதிமுகவில் உச்சக்கட்டத்தில் பிரச்சனை சென்று கொண்டிருக்கிறது.. நீதிமன்ற தீர்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாகவே வந்தாலும், எடப்பாடி அப்பீலுக்கு சென்றுள்ளார்.

    இந்த விவகாரம் நடந்து கொண்டிருப்பது, அதிமுகவின் பொதுக்குழு தொடர்பானது.. அதேசமயம், இரட்டை இலை இவர்களில் யாருக்கு கிடைக்கும்? 2 பேருக்குமே கிடைக்கு? 2 பேருக்குமே கிடைக்காதா? என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.

    அழைப்பு விடுக்கும் ஓபிஎஸ்! அசர மறுக்கும் எடப்பாடி! ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்! அதிமுகவில் நடப்பது என்னஅழைப்பு விடுக்கும் ஓபிஎஸ்! அசர மறுக்கும் எடப்பாடி! ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்! அதிமுகவில் நடப்பது என்ன

    டவுட்

    டவுட்

    இந்த பிரச்சனை சில மாதங்களுக்கு முன்பும் கிளம்பியது.. அதாவது, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதால் சின்னத்தில் கையொப்பமிட இரு தரப்புக்குமே அதிகாரம் இல்லை என்று கூறப்பட்டது.. அப்போது, இடைக்காலமாக இரட்டை இலையை பயன்படுத்துவார்களா என்ற சந்தேகம் எழுந்தது.. அப்போது இரு விதமாக பேச்சுக்கள் எழுந்தன.. இப்போதைக்கு எடப்பாடி கையே ஓங்குவதால், சின்னம் தொடர்பாக அவரே முடிவெடுக்கலாம் என்றார்கள்..

     சின்னம் என்னாகும்?

    சின்னம் என்னாகும்?

    ஆனால், தேர்தல் ஆணையத்தை அணுகினால் சின்னம் முடங்கிவிடும் என்றும் கலக்கம் ஏற்பட்டது.. அதனால் இரு தரப்பிலுமே, இலை சம்பந்தமாக தேர்தல் ஆணையத்துக்கு செல்லவில்லை.. இருவரில் ஒருவருக்கு இலை சென்றாலும், அதிமுகவில் மிகப்பெரிய சறுக்கல் எழுவதற்கும், பிளவு ஏற்படுவதற்கும் காரணம் உள்ளதாகவும் கூறப்பட்டது.. அதனால், பிறகு, இரட்டை இலை பற்றின பேச்சையே யாரும் எடுக்கவில்லை.

     இலை - தலை

    இலை - தலை

    கடந்த சில நாட்களாக, பொதுக்குழு விவகாரம் கோர்ட்டில் நடந்தபோதுகூட, ஒருவேளை எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துவிட்டால், தேர்தல் ஆணையத்தை ஓபிஎஸ் நாடுவார் என்றும், இலையை முடக்க வைத்து எடப்பாடிக்கு செக் வைக்கக்கூடும் என்றும், இதற்கு பாஜக மேலிடம் உதவி செய்யக்கூடும் என்றும் தகவல்கள் பறந்தன.. ஆனால், நீதிமன்றத்திலேயே ஓபிஎஸ்ஸூக்கு ஆதரவான தீர்ப்புகள் வந்துவிட்டதால், சின்னம் சம்பந்தமான பிரச்சனை எதுவும் இதுவரை எழுப்பப்படவில்லை.

     புட்டு புட்டு வைத்த எடப்பாடி

    புட்டு புட்டு வைத்த எடப்பாடி

    அதேசமயம், இன்றைய தினம் ஓபிஎஸ் - எடப்பாடி இருவரின் அரசியல் அணுகுமுறையை பொறுத்தவரை, இப்போதைக்கு இவர்கள் ஒன்றுசேர்வது போல தெரிகிறது.. ஓபிஎஸ் அழைப்பு விடுத்தாலும், அதை கிண்டல் செய்து மறுத்ததுடன், லிஸ்ட் போட்டு ஓபிஎஸ் மீதான குறைகளை சொல்லி உள்ளார் எடப்பாடி பழனிசாமி.. அப்பீல் செய்திருக்கிறோம், தீர்ப்பு வரட்டும் என்று நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டு எடப்பாடி இருந்தாலும், ஓபிஎஸ் அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற ஆர்வம் எழுந்துள்ளது.. எடப்பாடி இல்லாமல், போதுமான ஆதரவும் தனக்கு இல்லாமல், இவ்வளவு பெரிய கட்சியை எப்படி நடத்த போகிறார் என்ற எதிர்பார்ப்பும் கூடி உள்ளது.

    "ஆபத்து..?"

    இவர்களின் பிரிவு, அதிகமாகி கொண்டே போகும் சூழலில், இரட்டை இலை யாருக்கு போய் சேரும் என்ற இன்னொரு சந்தேகம் எழுந்துள்ளது.. சட்டப்படி, இவர்கள் 2 பேரும் கையெழுத்து போட்டால் மட்டுமே இரட்டை இலை கிடைக்கும்.. கையெழுத்து போடாதபட்சத்தில், அந்த இலை தானாகவே முடங்கிவிடும் என்கிறார்கள்.. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு எவ்வளவு இருந்தாலும்சரி, ஓபிஎஸ்ஸுக்கு முக்கிய நிர்வாகிகள் பலமாக இருந்தாம் சரி, எதையும் தேர்தல் ஆணையம் கணக்கில் கொள்ளாது.. அதாவது, தேர்தல் ஆணையத்துக்கு போகாமலேயே இலை முடங்கிவிட வாய்ப்புள்ளது.. இது அதிமுகவுக்கு ஆபத்து என்கிறார்கள்..

     சுழன்று சுழன்று..

    சுழன்று சுழன்று..

    ஏனென்றால், உயர்நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு வழங்கினால், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உச்சநீதிமன்றத்திற்கு வேண்டுமானால் செல்லலாம்.. ஒரு தீர்ப்பை எதிர்க்க அப்பீல்தான் தீர்வு.. அப்படி இருக்கும்போது, இந்த வழக்கு, தேர்தல் ஆணையத்துக்கு செல்ல வாய்ப்பில்லையாம்.. நீதிமன்ற வழக்கு, அதிலும் சிவில் வழக்கு, நீதிமன்றங்களுக்குள்ளேயேதான் சுழன்று வருமே தவிர, ஆணையம் இதில் தலையிட முடியாது.. ஆணையத்துக்கு இந்த வழக்கை இவர்கள் கொண்டு செல்லவும் முடியாது என்கிறார்கள்..

     ரத்தத்தின் ரத்தங்கள்

    ரத்தத்தின் ரத்தங்கள்

    ஆனால், ஏதாவது ஒரு வகையில் சின்னம் முடக்கப்பட்டு விட்டால், அது ரத்தத்தின் ரத்தங்களுக்கு பெருத்த கொந்தளிப்பை ஏற்படுத்திவிடும்.. அவர்களின் கட்சி அடையாளத்துக்கே ஒரு இழுக்கு, அவமானம் என்பது போல உணர்ச்சிவசப்பட்டு விடுவார்கள் என்பதால், இரட்டை இலையை அவ்வளவு சீக்கிரம் யாராலும் முடக்கவும் முடியாது என்கிறார்கள்.. அதேசமயம், கட்சிக்கு அந்த இலை இருப்பதுதான பலம்.. இன்றுவரை கிராமப்புறங்களில் அதிமுக என்பதைவிட, இரட்டை இலை என்ற பிரம்மாண்டம்தான் பதிந்து உள்ளது. அதிமுகவுக்கு பலமே தொண்டர்கள்தான் என்றால், தொண்டர்களின் பலமே இரட்டை இலைதான்.. எனினும், இந்த இலையின் 'தலை' யார் என்பதுதான் தற்போதைய கேள்வி...!

    English summary
    Can a double leaf cause problem and What will happen next in AIADMK அதிமுகவில் இரட்டை இலைக்கு சிக்கல் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X