காரணமே வேற.. தெற்கை அசால்ட்டா "வளைத்த" ஸ்டாலின்.. அதிமுக ஷாக்.. ஓட்டை பிரித்த சசிகலாவின் வெற்றிடம்
திமுகவானது, தெற்கு மண்டலத்தை கைப்பற்றும் என்கிறார்கள்
சென்னை: திமுக, அதிமுகவுக்கு இடையேயான கடும் போட்டியாக இந்தத் தேர்தல் முடிவுகள் வெளியாகி போகின்றன என்றே எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், தென்மண்டலங்களை பெரும்பான்மையாக திமுக வளைத்து போட்டுள்ளது.. இது அதிமுகவுக்கு மட்டுமல்ல, அமமுகவுக்கும் பெரும் சிக்கலை அரசியல் களத்தில் ஏற்படுத்தி உள்ளது.
திமுகவுக்கு எப்போதும் வடக்கு மண்டலம், மத்திய மண்டலம், தென் மண்டலங்களில் கணிசமான பகுதிகள் கைகொடுக்கும்... அதே நேரம் மேற்கு மண்டலம் எப்போதுமே திமுகவுக்கு கை கொடுக்காது..
அதாவது, அதிமுகவுக்கே பெரிதும் உதவும் என்பதே இதன் பொருள்.. இன்னும் ஓபனாக சொல்லப்போனால், இங்கு சாதி பெரும்பான்மையை முன்வைத்தே அரசியல் பிரதானமாக நடந்து கொண்டிருக்கிறது.

காய் நகர்த்திய சசிகலா
ஜெயலலிதா இருந்தவரை தென்மண்டல ஓட்டு சதவீதம் கணிசமான அளவிலேயே வைத்திருந்தார்.. இதற்கு காரணம், ஜெயலலிதாவைவிட சசிகலாவின் ஆளுமைதான் முக்கிய பங்காக வகித்து வந்தது.. 30 வருடம் ஜெயலலிதாவுடன் சசிகலா லாபி செய்தது எல்லாமே இதே தென்மண்டலத்தில் தனக்குள்ள செல்வாக்கை, சாதி ஆதரவை முன்வைத்துதான் காரியங்களை சாதித்து வந்தார்.. கச்சிதமாக அரசியல் காய்களை நகர்த்தி வந்தார்.

திருப்பங்கள்
ஆனால், ஜெ,.மறைவுக்கு பிறகு எத்தனையோ பகீர் திருப்பங்கள் ஏற்பட்டுவிட்டன.. இந்த திருப்பத்துக்கெல்லாம் காரணம் ஓபிஎஸ் என்பதை மறுக்க முடியாது.. சசிகலாவை நேரடியாக அன்று குற்றம் சொன்னவர்.. சமாதியில் அவருக்கு எதிரான புகார்களை புட்டு புட்டு வைத்தவர்.. சசிகலா அரசியலில் ஆக்டிவ்வாக இருந்தவரை ஓபிஎஸ் 2ம் பட்சமாகவே கருதப்பட்டார்.. ஆனால், சசிகலா சிறை சென்ற பிறகும் சரி, அவர் வெளிவந்த பிறகும் சரி, தெற்கை தன் கன்ட்ரோலில் வைத்து கொள்ள பல முயற்சிகளை மறைமுகமாகவே ஓபிஎஸ் மேற்கொண்டதாக செய்திகள் கசிந்தன.

இடஒதுக்கீடு
கடந்த சட்டசபை தேர்தலின்போதே ஓபிஎஸ் மீது தென்மாவட்ட மக்கள் சற்று அதிருப்தியில் இருந்தனர்.. இதற்கு காரணம் வன்னியர் இடஒதுக்கீட்டு விஷயத்தில் ஏன் ஓபிஎஸ் ஏற்று கொண்டார்? வன்னியர்களுக்கு காட்டும் சலுகையை சொந்த சமுதாயத்தின் மீது காட்டக்கூடாதா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.. இரண்டாவது காரணம், தென் மாவட்டத்தில் அதிமுகவுக்கு முக்குலத்தோர் வாக்குகள் கணிசமாக உள்ளது..

டிடிவி தினகரன்
தினகரனுக்கென்று தனியாக அங்கு செல்வாக்கு உள்ளது வேறு விஷயம்.. ஆனால், சசிகலா இல்லாத பட்சத்தில் தெற்கை கைக்குள் வளைத்து போட திமுகவும் ஒரு பக்கம் முயன்றது.. ஆனால், ஓபிஎஸ் முந்தி கொண்டு வந்தார்.. தனக்குரிய 50 சதவீத ஆதரவாளர்களில் ஓபிஎஸ், பெரும்பாலும் தன் சமுதாயம் சார்ந்தவரையே வேட்பாளராக தென்மண்டலங்களில் நிறுத்தினார்.. அவ்வளவு ஏன்? கூட்டணியில் இணைந்தவர்களும் இதேபோல தென் மண்டலங்களை சேர்ந்தவர்களே இடம் பெற்றிருந்தனர்.

சைலண்ட்
இந்த முறை தேர்தலை பொறுத்தவரை, திமுகவே பெரும்பான்மை பெற்றுள்ளது.. இதற்கு முக்கிய காரணம், ஓபிஎஸ்ஸே சைலண்ட்டாகிவிட்டார் என்கிறார்கள்.. சட்டசபை தேர்தலுக்கும், இந்த முறை தேர்தலுக்கும் அதிமுகவுக்குள் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உள்ளன.. நிறைய குழப்பங்கள், உட்கட்சி பூசல், கோர்ட், வழக்கு, சோதனைகளில் மாஜிக்கள் கடந்த 6 மாத காலமாகவே சிக்கி கொண்டுள்ளனர்.. தேர்தல் களத்தில் முழுவீச்சில் இறங்கி அவர்களால் பிரச்சாரம் செய்ய முடியவில்லை.. எடப்பாடி பழனிசாமி மட்டுமே தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டார்.

சசிகலா
அதேபோல முந்தைய தேர்தலை விட இந்த தேர்தலில் சசிகலாவின் எழுச்சி சற்று அதிகம் காணப்பட்டு வருகிறது. பொதுச்செயலாளர் என்ற பெயரில் வெளிவந்த அவரது அறிக்கைகள், அதிமுக மேலிடத்தை அசைக்கவில்லை என்றாலும், தென்மண்டலத்தில் உள்ள அவரது ஆதரவாளர்களிடம் குஷியை தந்துள்ளது.. சசிகலாவின் வருகையை அவர்கள் எதிர்நோக்கியும் உள்ளனர்.. இதெல்லாம் தெரிந்துதான், முக்குலத்தோர் வாக்குகளை மொத்தமாக அள்ள ஓபிஎஸ் பெரிதாக கவனம் செலுத்தவில்லை என்றே கூறப்படுகிறது...

அறிக்கை
இதெல்லாம் சேர்ந்துதான், திமுகவுக்கு இப்போது பிளஸ் ஆக அமைந்துள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. கடந்த சட்டசபை தேர்தல் சமயத்திலாவது, சசிகலா கோயில்களில் தரிசனம் என்ற பெயரில் தென்மண்டலங்களில் 10 மாவட்டங்களுக்கு சென்று வந்தார்.. இது ஓரளவு நிர்வாகிகளுக்கு தெம்பை தந்தது.. ஆனால், இந்த பிரச்சாரத்துக்கு சசிகலா செய்யவில்லை.. இது தொடர்பாக அறிக்கையும் விடவில்லை.. தினகரனும் கடைசிவரை நேரடி பிரச்சாரம் மேற்கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தார்.. இதெல்லாம்கூட திமுகவுக்குதான் சாதகமாக அமைந்துள்ளதாக தெரிகிறது. இந்த தேர்தலில் சொந்த சமுதாய மக்களின் அதிருப்தியை அதிமுகவோ, சம்பாதித்துவிட்ட நிலையில், அதைதான் திமுக அறுவடை செய்துள்ளது.

தென்மண்டலங்கள்
ஆனால், இனிமேல்தான் சசிகலா களத்தில் இறங்க வேண்டும் என்றும், அப்படி களமிறங்கினால், நிலைமையே அப்படியே தலைகீழாக மாறக்கூடும் என்பதையும் அரசியல் நோக்கர்கள் கணித்து சொல்கிறார்கள்.. சசிகலாவின் தனிப்பட்ட செல்வாக்கை தென்மண்டலங்களில் பொருத்தி பார்க்கும்போது, மதுரை, உசிலம்பட்டி, ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் அவரது சமூகம் பரவலாக உள்ளது... இந்த ஆதரவானது ஓபிஎஸ்ஸுக்கே சற்று சிக்கல் தரக்கூடியதுதான்.. சசிகலா இல்லாமலேயே இனி தெற்கை அதிமுக சமாளிக்குமா? என்பதுதான் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஓபிஎஸ்
ஒருவேளை சசிகலா தலைமையில் இனிமேல் அதிமுக ஒன்றிணைந்தால், இப்போதுள்ள மாற்றங்கள் அவ்வளவும் அக்கட்சிக்கு பலத்தை சேர்த்துவிடும்.. அத்துடன் தென்மண்டலங்களில் திமுகவுக்கு ஒரு செக் வைக்கவும் முயலலாம்.. மேலும், அது வரப்போகும் எம்பி தேர்தலுக்கும் அடித்தளமிட்டது போல இருக்கும்.. ஆனால், சசிகலா இப்போது போல எப்போதும் ஒதுங்கியே அரசியல் செய்து கொண்டிருந்தால், தெற்கு மண்டலத்தில் அவருக்கான சாதி பலம் மட்டும் இருக்குமே தவிர, மற்றபடி, அதுவே அரசியலை தீர்மானிக்கும் விஷயமாக மாறிவிடாது.. பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று..!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications