சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஷர்மிளாவுக்கு வந்துச்சே ஆத்திரம்.. "ஒன்னு கேட்கட்டுமா.. அந்த தீட்சிதர்கள்".. பொங்கிய சிதம்பரம்.. ஏன்

குழந்தை திருமணங்களுக்கு எதிராக திமுக அரசு நடவடிக்கை தேவை என டாக்டர் ஷர்மிளா தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பெருகிவரும் குழந்தை திருமணத்துக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த திருமணங்களை ஆதரிப்பவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் டாக்டர் ஷர்மிளா ஆதங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலை நிர்வகித்துவரும் தீட்சிதர்கள் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் அடிக்கடி எழுந்த வண்ணம் உள்ளன... இப்போது புது பிரச்சனை கிளம்பி உள்ளது..

தங்களுடைய குழந்தைகள், திருமண வயதை அடைவதற்கு முன்பாகவே, இந்த தீட்சிதர்கள் சட்டத்துக்குப் புறம்பாக திருமணம் செய்து வைப்பதாக புகார்கள் எழுந்துவந்தது.

4 குழந்தைகள் திருமணம்.. சிறுமியை மறைத்து வைத்து நாடகம்.. போலீசிடம் தீட்சிதர்கள் சிக்கியது எப்படி? 4 குழந்தைகள் திருமணம்.. சிறுமியை மறைத்து வைத்து நாடகம்.. போலீசிடம் தீட்சிதர்கள் சிக்கியது எப்படி?

 சிறுமி + திருமணம்

சிறுமி + திருமணம்

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக குழந்தை திருமணப் புகாரில் அடுத்தடுத்து கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அந்த வகையில், மறுபடியும் ஒரு குழந்தைத் திருமணச் சம்பவத்தில் 2 தீட்சிதர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.. அதாவது, கடந்த 2021-ம் ஆண்டு, ஜனவரி மாதம், சிதம்பரம் தீட்சிதர்களின் 2 குடும்பத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கும், 17 வயது சிறுவனுக்கும் திருமணம் நடத்தப்பட்டதாம். இதற்குதான் தற்போது கைதாகி உள்ளனர். இப்படி சர்ச்சைகள் வெடித்து வரும்நிலையில், இந்த நிகழ்வுகள்குறித்து, சமூக செயற்பாட்டாளர் டாக்டர் ஷர்மிளாவிடம் நாம் கருத்து கேட்டோம்.

ஷர்மிளா

ஷர்மிளா

நம் ஒன் இந்தியாவுக்காக டாக்டர் ஷர்மிளா தந்த பேட்டிதான் இது: இதில்,பல பிரச்சனைகள் இருக்கிறது.. குழந்தை திருமணம் என்ற பிரச்சனை மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களிலும் உள்ளது.. குறிப்பாக வடமாநிலங்களில் அதிகம் இருக்கிறது.. கடலூர் மாவட்டத்தை மட்டும் எடுத்துக் கொண்டால், இந்த வருடம் கிட்டத்தட்ட 2 கேஸ்கள் பதிவாகி இருக்கின்றன.. அதில் தீட்சிதர்கள் சம்பந்தப்பட்டது மட்டும் 4 கேஸ் இருக்கிறது என்கிறார்கள்.. இதற்கான பொதுவான காரணத்தை எடுத்துக் கொண்டால், வறுமை அதிகம் நிலவுகிறது..

பூச்சடங்கு

பூச்சடங்கு

அதிலும், கொரோனாவுக்கு பிறகு பார்த்தால் மக்களின் பொருளாதாரமே பாதிக்கப்பட்டுவிட்டது என்று சொல்லலாம்.. மற்றொருபுறம் பார்த்தால், இவர்களின் சமூக சூழலை சொல்லலாம்.. பெண் பிள்ளைகளை அதிக நாள் வீட்டில் வைத்திருந்தால், திருமணம் செய்வது கடினம் என்பதாலும், நல்ல வரன் ஏதாவது கிடைத்தால் உடனே திருமணம் செய்து தந்துவிடலாம் என்பதாலும், வீட்டிலேயே பெண்பிள்ளைகளை வைத்திருந்தால், காதல் போன்ற விவகாரங்களில் சிக்கி கொள்ள நேரிடும் என்பதாலும், பெற்றோர்கள் பயப்படுகிறார்கள்.

 பூப்பெய்தல்

பூப்பெய்தல்

மேலும், மதரீதியான கோட்பாடுகளும் காலம் காலமாக இருந்து வருகிறது. பெண்கள் பூப்பெய்தவுடனேயே திருமணம் செய்து தந்துவிடவேண்டும் அல்லது சொந்த குலத்தை தாண்டி, வேறு இனத்தை சேர்ந்தவர்களை பெண்பிள்ளைகள் திருமணம் செய்துவிடுவார்களோ என்ற பயமும் சேர்ந்துவிடுகிறது. இதனால்தான் குழந்தை திருமணம் பெருகி வருகிறது.. என் வருத்தம் என்னவென்றால், சிதம்பரம் கோயில் சர்ச்சைகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.. இது முதல் முறை கிடையாது... சமீபத்தில்தான் கனகசபை பிரச்சாரம், அடுத்து, ஒரு பட்டியல் இனத்தை பெண்ணை இழிவாக பேசி தாக்கி விமர்சித்தார்கள்..

அயோக்கியத்தனம்

அயோக்கியத்தனம்

பிறகு, திமுக அரசின் அறநிலையத்துறையினர் ஆய்வுக்கு சென்றபோதும் பிரச்சனை செய்தார்கள்.. இப்போது இந்த பிரச்சனை கிளம்பி உள்ளது. குழந்தைகளை திருமணம் செய்தால், சட்டப்படி குற்றம் என்றும், மீறி குழந்தைகளை திருமணம் செய்தால், உடல்ரீதியாக, மன ரீதியாக அந்த பெண்ணை பாதிக்கக்கூடும் என்பதை அறிந்திருந்தே செய்கிறார்கள்.. சமூக ரீதியான பிரச்சனை இது.. இதை களைய முதல்வர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.. அமைச்சர் கீதா ஜீவனும் இதுபோன்ற நடவடிக்கைக்கு எதிராகவே களமாடி வருகிறார். ஆனாலும், சட்டத்தை மதிக்காத போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது.

 Dr ஷர்மிளா

Dr ஷர்மிளா

இந்த விஷயத்தில் தீட்சிதர்கள் தவறு செய்ததால்தானே, போலீசார் கைது செய்துள்ளனர்.. ஆனால், அவர்களை ஏன் கைது செய்தீர்கள் என்று கேட்டு 10 பேர் ரோட்டிலேயே உட்காருகிறார்களே? இப்படி சாலையில் உட்கார்ந்து போராடுவதுதான் உச்சக்கட்ட அயோக்கியத்தனம் என்பேன்.. மாநில சட்டத்திட்டங்களுக்கு யாராக இருந்தாலும் கட்டுப்பட வேண்டும்.. மதத்தில் சொல்லியியிருக்க வேண்டிய கட்டுப்பாடுகளை மூட்டை கட்டி வைக்க வேண்டும்.. சிறுமி கல்யாணம் என்பது, பழங்குடி வகுப்பில் அதிகமாகவே நடக்கிறது.. அதிலும் பின்தங்கிய மாவட்டங்களிலும் நடக்கிறது..

 கேட்கட்டுமா

கேட்கட்டுமா

நான் ஒன்று கேட்கட்டுமா? சமூகநலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு என்னைக்காவது தெருவுக்கு வந்து போராடியிருக்கிறார்களா இந்த தீட்சிதர்கள்? எந்த ஒரு சமூக ரீதியான பிரச்சனைக்காகவும், மக்கள் சார்ந்த பிரச்சனைக்கும் போராடியதே கிடையாது.. ஆனால், இன்று அவர் வகுப்பை சார்ந்த ஒருவர், தெரிந்தே தப்பு செய்துள்ளார்.. அதுமட்டுமல்ல, அந்த கல்யாணத்தில் நிறைய பேர் ஆசீர்வாதம் செய்திருக்கிறார்கள்.. நியாயமாக பார்த்தால் இவர்கள மீதும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.. திருமணத்துக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டவிதி உள்ளபோது, தமிழக அரசு இதை பரிசீலிக்க வேண்டும்" என்றார்.

English summary
Can child marriage be completely eradicated and DMK gov should take action against it, asks Dr Sharmila: Specials
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X