தொக்கா "பிரபலம்" சிக்கிட்டாரே.. வாள் சுழற்றிய எடப்பாடி.. "சீக்கிரமா முடிங்க".. ஸ்டாலின் போட்ட உத்தரவு
சென்னை: செந்தில் பாலாஜியை தொடர்ந்து அடுத்தடுத்த குறி, திமுக மீது விழுந்துள்ளதாகவும், இதில், மொத்தம் 5 திமுக அமைச்சர்கள் லிஸ்ட்டில் உள்ளதாக பரபரக்கப்பட்ட நிலையில், அது தொடர்பான ஒரு செய்தி நமக்கு கசிந்துள்ளது.
சிட்டிங் அமைச்சரையே கைது செய்யும் சூழல் தமிழ்நாட்டுக்கு இன்று வந்துள்ளது.. இதையடுத்து, திமுகவில் ஊழல் புகார்களுக்கு ஆளான சீனியர்களுக்கு, மேலிட தரப்பு இனி நெருக்கடி தரும் என்றும் சொல்கிறார்கள்
அந்தவகையில், சம்பந்தப்பட்ட சீனியர் அமைச்சர்கள், எந்நேரமும் வருமான வரித்துறை, அமலாக்கத் துறையினரின் வளையத்துக்குள் வரக்கூடும் என்று சொல்லப்படுகிறது. இதுபோக பவர்புல் அமைச்சர் ஒருவரிடம் அடுத்த குறி பாயலாம் என்கிறார்கள்.

நடவடிக்கை: எனினும் இப்போதைக்கு அடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டாம், சற்று பொறுமை காக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாம்.. அநேகமாக வரும் அக்டோபர் மாதத்திற்கு முன்பாகவே, அந்த நபர் மீதான நடவடிக்கை என்கிறார்கள்.. இதனால், திமுக தரப்பிலேயே பலருக்கு கிலி சூழ்ந்து வருகிறதாம்.
ஆனால், செந்தில் பாலாஜியை கைது செய்தபோதே, அதிமுக சைலண்ட்டு மோடுக்கு போய்விட்டது. காரணம், அதிமுக அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில்பாலாஜி இருந்தபோதுதான், இந்த ஊழல் நடந்துள்ளதாக சொல்கிறார்கள்.. அதன் தொடர்ச்சிதான், இப்போது அமலாக்கத்துறை வந்து நிற்க வைத்துள்ளது.. அதனால், இந்த கைது நடவடிக்கைகள் அதிமுகவுக்குள்ளேயே புயலை வீசி வருவதாக தகவல்கள் கசிந்தன.
அதிமுகவின் அம்பு: அதுமட்டுமல்ல, திமுக அமைச்சர்களின் ஊழல் லிஸ்ட் வெளியிட்டபோதே, அதிமுகவையும் சீண்டியிருந்தார் அண்ணாமலை.. "அதிமுக ஃபைல்ஸ்" வெளியாகும் என்று செய்தியாளர்களிடமே குறிப்பிட்டிருந்தார்.. இதையெல்லாம் எடப்பாடி தரப்பு கவனிக்காமல் இல்லை. செந்தில் பாலாஜி கைதுக்கு பிறகு, பாஜகவை அவ்வளவாக சீண்டாமல் அதிமுக ஒதுங்கியே இருப்பதாக சொல்கிறார்கள்..
எனினும், அடுத்த "அம்பு" அதிமுக பக்கம் திரும்பி விடக்கூடாது என்பதற்காக, அதிமுகவே அடுத்த நகர்வை திமுகவுக்கு எதிராக கிளப்பி விட்டுள்ளதாம்.. அதுகுறித்த ஒரு முக்கிய தகவல்தான் நமக்கு ஸ்பெஷலாக கிடைத்துள்ளது.
சமீபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான லஞ்ச ஒழிப்புத்துறையில் உள்ள ஊழல் புகார்கள் மீது நீதிமன்ற விசாரணை நடத்த கவர்னர் அனுமதி தராமல் கிடப்பில் வைத்திருக்கும் விவகாரத்தை, கவர்னருக்கு நினைவுப்படுத்தி கடிதம் எழுதியிருந்தார் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி... இந்த விவகாரம் பெரும் பரபரப்பாகவும் பேசப்பட்டது.. சர்ச்சைகளாகவும் வெடித்தது.
பேசுபொருள்: இந்த நிலையில், இதற்கு பதிலடி தரும் வகையில் அதிமுக களமிறங்கியுள்ளதாம்.. அதன்படி, உச்சநீதிமன்றத்தில், ரகுபதி மீதுள்ள ஊழல் வழக்கினைச் சுட்டிக்காட்டி, "வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுங்கள்" என்று ரகுபதிக்கு எதிராக வாள் சுழற்றிய விவகாரம் கடந்த 2 நாட்களாக தமிழக அரசியலில் பேசு பொருளாகியிருக்கிறதாம்.. இந்த நிலையில், அந்த வழக்கு குறித்து ரகுபதியிடம் விசாரித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
அட்வைஸ்: அப்போது, "வழக்கை சீக்கிரம் முடிக்கப் பாருங்கள்" என அட்வைஸ் பண்ணியிருக்கிறாராம் ஸ்டாலின். அது மட்டுமல்லாமல், தனது அமைச்சரவை சகாக்களில் யார் யார் மீதெல்லாம் ஊழல் வழக்குகள் கடந்த காலங்களில் தொடரப்பட்டிருக்கிறது? அதன் தற்போதைய நிலை என்ன ?" என்கிற விபரங்களை கேட்டுள்ளாராம் முதல்வர் ஸ்டாலின்.
ஆலோசனைகள்: இந்த பரபரப்பான சூழலில்தான், 5 நாள் பயணமாக கடந்த ஜூலை 7-ம் தேதி டெல்லிக்கு புறப்பட்டு சென்றார் ஆளுநர்... மறுநாளே, ஜூலை 8ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவிநீக்க விவகாரத்தை எடுத்து சொல்லியிருப்பதாகவும், அதற்கு அமித்ஷா, சில ஆலோசனைகளை ஆளுநருக்கு தந்ததாகவும் சொல்கிறார்கள்..
இதற்கு பிறகு, மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான ஆர்.வெங்கட்ரமணி ஆகியோரையும் சந்தித்து, செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவது தொடர்பாக ஆளுநர் ஆலோசனை நடத்தியிருக்கிறார் என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தினர்.. மத்திய உள்துறை அமைச்சகம் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததாக சொல்கிறார்கள்.. அடுத்து என்ன நடக்க போகிறது தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்.
-
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு!












Click it and Unblock the Notifications