"லாஸ்ட் வார்னிங்".. டெல்லிக்கு எடப்பாடி "மெசேஜ்".. அதிர்ந்த பாஜக.. சைக்கிள்கேப்பில் திமுகவுக்கு "இடி"

எடப்பாடி பழனிசாமி மெகா கூட்டணி வைக்க தயாராகி வருகிறாராம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக, பாஜக கூட்டணி மீண்டும் தொடருமா? அல்லது முறியுமா? என்ற எதிர்பார்ப்புகள் ஒருபக்கம் இருந்தாலும், வழக்கம்போல் திமுகவை டேமேஜ் செய்யும் முயற்சியில் இறங்கிவிட்டதாம் தமிழக பாஜக... என்ன அது?

எம்பி தேர்தலுக்கு தமிழக கட்சிகள் வேகம் எடுத்துள்ளன.. அதற்கான அறிகுறிகள் களத்தில் தென்பட துவங்கி விட்டது.. கடந்த 6 மாத காலமாகவே இதற்கான அடித்தளத்தை தமிழக பாஜக முன்னெடுத்து வரும்நிலையில், அதிமுகவும் கோதாவில் குதித்துவிட்டது.

ஒருங்கிணைந்த அதிமுகவை பாஜக மேலிடம் விரும்புவதால், அதற்கான அறிவுரைகளும் சிக்னல்களும் கடந்த 3 மாத காலமாகவே, தொடர்ந்து எடப்பாடிக்கு தரப்பட்டு வந்ததாக கூறப்பட்ட நிலையில், அதை எடப்பாடி கண்டுகொள்ளாமலேயே உள்ளார்..

 லாஸ்ட் டைம்

லாஸ்ட் டைம்

நெடுஞ்சாலை துறை ஊழல், சம்பந்தி ஊழல் விவகாரம், கொடநாடு விவகாரம், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை, என பல்வேறு விவகாரங்களில் எடப்பாடி பழனிசாமியின் பெயர் அடிபட்டு வருகிறது. எனினும், எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கும்விதமாகவே, பாண்டித்துரையிடம் ரெய்டை நடத்தியதாகவும், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில், எடப்பாடி பழனிசாமி தொடர்பான ஆவணங்கள் சில சிக்கியுள்ளதாகவும் செய்திகளும் வந்தன. இதையடுத்து, பாஜகவின் உத்தரவுக்கு எடப்பாடி பழனிசாமி பணிவாரா? ஓபிஎஸ்ஸை ஏற்பாரா? அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற கேள்விகள் வட்டமடித்து வந்தன..

 ஐடியா A

ஐடியா A

ஆனால், திமுகவைவிட, பாஜகவை சமாளிப்பதுதான் எடப்பாடிக்கு பெரிய சிக்கலாக இருக்கிறதாம்... அதனால்தான், சட்டசபையில் இந்தி திணிப்பு விவகாரத்தில்கூட, பட்டும்படாமல் விலகி கொண்டு, உண்ணாவிரதத்தை திடுதிப்பென்று அறிவித்ததாக தெரிகிறது.. ஒருபக்கம் ஓபிஎஸ்ஸிடம் இணங்கி செல்லவும் விரும்பாமல், பாஜகவிடம் பணிந்து செல்லவும் விரும்பாமல் எடப்பாடியின் பிடிவாதம் நீண்டுவந்த நிலையில்தான், நேற்றைய தினம், முக்கிய மெசேஜ்ஜை எடப்பாடி மேலிடத்துக்கு பாஸ் செய்யும் விதமாக, அதிமுக நாமக்கல் கூட்டத்தில் பேசியுள்ளார்.

 ஐடியா B

ஐடியா B

2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைத்து மிக வெற்றி பெறுவோம், அதிமுகவில் ஓபிஎஸ் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை, பொதுக்குழு எடுத்த முடிவு இறுதியானது, நீக்கப்பட்டவர்கள், நீக்கப்பட்டவர்கள் தான் ஆணித்தரமாக கூறியுள்ளார்.. இதன்மூலம் 2 மெசேஜ் பாஜக தரப்புக்கு தரப்பட்டுள்ளது.. ஒன்று, பாஜகவுடன் கூட்டணி அமைப்பது சந்தேகம்தான் என தெரிகிறது.. இரண்டாவதாக, பாஜகவுடனேயே கூட்டணி இல்லை என்றால், பாஜகவின் ஆதரவாளரான ஓபிஎஸ்ஸையும் கட்சிக்குள் சேர்க்க முடியாது என்பதையும் மீண்டும் பகிரங்கப்படுத்திவிட்டார்.

 ஹெச். ராஜா

ஹெச். ராஜா

அதேசமயம், பாஜக எதிர்ப்பு என்ற விஷயத்தில் எடப்பாடி பழனிசாமி எந்த அளவுக்கு மேலிடத்தை சமாளிப்பார் என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக எழுந்துள்ளது.. எம்பி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்றும், இப்போது தேசிய முற்போக்கு கூட்டணியில் அதிமுக உள்ளது என்றும் எச். ராஜா சமீபத்தில்கூட கூறியிருந்தார்.. அதாவது, பாஜக தலைமையில் அதிமுக கூட்டணி இருப்பதை போலவே எச்.ராஜாவின் அந்த பேச்சும் அமைந்திருந்தது.. ஆனால், எடப்பாடி பழனிசாமி, மெகா கூட்டணி என்று திடுதிப்பென்று சொல்லி உள்ளது, பாஜகவை யோசிக்க வைத்து வருகிறது.

 டேமேஜ்ஜா

டேமேஜ்ஜா

அதேசமயம், பாஜகவை பொறுத்தவரை எடப்பாடியின் முடிவை எதிர்பார்த்த ஒன்றுதான்.. அப்படி பாஜகவை எதிர்க்க நேர்ந்தால், எடப்பாடியை கழட்டிவிட்டு, 3வது அணி அமைக்கவும் பாஜக, தயாராகுவதாகவே தெரிகிறது... அப்படி தனியாக கூட்டணி அமைத்து போட்டியிடும் பட்சத்தில், திமுகவை இன்னும் அதிக அளவுக்கு எதிர்க்க வேண்டிய கட்டாயமும் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது. ஒருபக்கம் மோடி அரசின் சாதனைகளை தமிழகம் முழுக்க வெளிப்படுத்தும் முயற்சியில் இறங்கிவரும்நிலையில், மறுபக்கம் திமுகவை டேமேஜ் செய்து வருவதும் மேலும் அதிகரித்துள்ளது.

 ஐடியா 1

ஐடியா 1

இதோ இன்னொரு ஐடியாவையும் கையில் எடுத்துள்ளதாம் தமிழக பாஜக.. சமீபத்தில், திமுக தலைமைக்கழக பேச்சாளர் சைதை சாதிக், குஷ்பு உள்ளிட்டவர்களை, அநாகரிகமாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார் இல்லையா? இந்த விஷயத்தை லேசில் விடக்கூடாது என்று பாஜக நினைக்கிறதாம்.. ஏற்கனவே, சாதிக் மீது ஜாமீனில் வரமுடியாத அளவுக்கு 5 பிரிவுகளில் வழக்கு பதிவாகி உள்ளது.. ஆனாலும், இதுவரை சாதிக்கிடம் போலீஸ் தரப்பு செல்லவில்லை என்பதால், வேறு ஒரு ஐடியாவை பாஜக கையில் எடுத்துள்ளதாம்..

 ஐடியா 2

ஐடியா 2

அதன்படி, தேசிய மகளிர் ஆணையத்தில் இதுகுறித்து புகார் அளித்திருக்கிறார் குஷ்பு.,.. இப்படி ஒரு புகாரை டெல்லியில் குஷ்புவை கொடுக்க சொன்னதே அண்ணாமலைதானாம்.. அதுமட்டுமல்ல, அதே மேடையில் அவரது பேச்சை கேட்டுக்கொண்டிருந்த அமைச்சர் மனோ தங்கராஜையும் விசாரணைக் கூண்டில் நிறுத்த முடியுமா என்றும் பாஜக பிளான் செய்து வருகிறதாம்.. அதற்கான வீடியோ ஆதாரங்களையும் திரட்டிக் கொண்டிருக்கிறாராம் அண்ணாமலை... ஆக, அதிமுகவை எடப்பாடி கழட்டிவிடப்போய், திமுக பக்கம் பாய்ந்து கொண்டிருக்கிறது பாஜக.. அடுத்து என்ன நடக்க போகிறது என தெரியவில்லை.. பார்ப்போம்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+