கூகுள் மேப் விவரங்களை பயன்படுத்தி பத்திர பதிவு செய்யலாமா? பதிவுத்துறை விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பத்திரப்பதிவின்போது நிலத்தின் நான்கு புற எல்லைகளைக் குறிப்பிடாமல், 'கூகுள் மேப்' அல்லது 'ஜி.பி.எஸ்.' விவரங்களை மட்டும் பயன்படுத்திப் பத்திரப்பதிவு செய்யலாமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இதற்கு பதிவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.

புதுச்சேரியில் வசிக்கும் ஜெயகாந்தன் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், 'சொத்துப் பத்திரப்பதிவின்போது நிலத்தின் நான்கு புற எல்லைகளைக் குறிப்பிடாமல், 'கூகுள் மேப்' அல்லது 'ஜி.பி.எஸ்.' விவரங்களை மட்டும் பயன்படுத்திப் பத்திரப்பதிவு செய்யலாமா?' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

property registration

அத்துடன், நான்கு புற எல்லைகளை குறிப்பிடுவது தொடர்பான பதிவு விதிகள் மற்றும் சட்டப்பிரிவுகளின் நகல்களையும் ஜெயகாந்தன் கேட்டிருந்தார். அதோடு, பதிவுத்துறையின் 'ஸ்டார் 3.0' திட்டத்தில் ஜி.ஜி.எஸ். வரைபடம் நான்கு புற எல்லைகளுக்கு மாற்றாக பயன்படுத்தப்படுமா அல்லது கூடுதல் ஆவணமாக இணைக்கப்படுமா என்றும் அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிவுத்துறை அளித்த பதிலில், 'கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் 26-ந்தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் நகல் வழங்கப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையின்படி, பத்திரப்பதிவு ஆவணத்தில் குறிப்பிடப்படும் சொத்தின் புவியியல் ஆயத்தொலைவுகளுடன் (நிலம் அமைந்துள்ள இடத்தைக் காட்டும் அட்சரேகை, தீர்க்க ரேகை எண்கள்) புகைப்படத்தையும் இணைக்க வேண்டும்.

அந்த புகைப்படத்தை ஏ4 தாளில் அச்சிட்டு, ஆவணத்தின் ஒரு பகுதியாக இணைத்து, பக்க எண்ணை குறிப்பிட வேண்டும். புகைப்படத்தில் ஆவணம் எழுதுபவர் மற்றும் எழுதி வாங்குபவர் கையொப்பமிட வேண்டும். இந்த நடைமுறை 2023-ம் ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி முதல் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பின்பற்றப்பட வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற கேள்விகளுக்கு தேவையான தகவல்கள் பதிவுத்துறையின் பதிவேடுகளில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் 2026-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ந்தேதி வரை, நான்கு புற எல்லைகள் சரியாகக் குறிப்பிடப்படாமல் அல்லது 'கூகுள் மேப்' பயன்படுத்தி பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக பெறப்பட்ட புகார்கள் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களும் கேட்கப்பட்டிருந்தன. ஆனால், நான்கு புற எல்லைகளுக்கு பதிலாகக் கூகுள் மேப் அல்லது ஜி.பி.எஸ். விவரங்களை மட்டும் பயன்படுத்திப் பத்திரப்பதிவு செய்யலாமா என்பது குறித்து பதிவுத்துறை நேரடியான பதில் தரவில்லை.

ஏனெனில் GPS மூலம் நிலத்தின் இருப்பிடத்தைக் கண்டறிய முடியும். ஆனால் அதனால் மட்டுமே நிலத்தின் சட்டப்பூர்வ எல்லைகள், பரப்பளவு, உரிமை ஆகியவை உறுதியாகிவிடாது.

தமிழ்நாட்டில் 2023 அக்டோபர் முதல், சொத்தின் புகைப்படத்துடன் அதன் புவியியல் இருப்பிட விவரங்களையும் (Geo-coordinates) இணைக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இது நிலத்தின் நான்கு புற எல்லைகளுக்குப் பதிலாக GPS விவரங்களை மட்டும் பயன்படுத்த அனுமதியாக கருத முடியாது என்பதே உண்மை.

நிலத்தின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு எல்லைகளைப் பத்திரத்தில் குறிப்பிடாமல், சர்வே எண், உட்பிரிவு எண், பரப்பளவு மற்றும் GPS இருப்பிடத்தை மட்டும் குறிப்பிட்டுப் பத்திரப்பதிவு செய்வது குறித்து அரசு எந்த பதிலும் வரவில்லை. எனவே அப்படி யாராவது கூறினால் நம்ப வேண்டாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+