சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"இடிக்குதே".. 3 சீட்டா.. "அச்சாரம்" போட்டாச்சா.. முட்டி வலி வேற.. பாஜக கவனத்தை திருப்பும் கமல்ஹாசன்

திமுக கூட்டணியிடம், 3 சீட்டுகளை கேட்டு காய் நகர்த்தலை துவங்கி உள்ளாராம் கமல்

Google Oneindia Tamil News

சென்னை: ராகுல் காந்தி மேற்கொள்ளும் யாத்திரையில் இன்றைய தினம் கமல்ஹாசன் கலந்து கொள்ள உள்ள நிலையில், அதுகுறித்த எதிர்பார்ப்புகள் எகிறி வருகிறது.. அத்துடன் காங்கிரசுடன் ஏன் கமல் நெருங்கி செல்கிறார் என்பதற்கான காரணமும் தற்போது வெளியாகி வருகிறது.

திமுக கூட்டணி வலுவாகவே இருந்தாலும்கூட, வலிமை பொருந்திய பாஜகவை எதிர்க்க, மெகா எதிர்ப்பு கூட்டணி ஒன்று இங்கு தேவையாக இருக்கிறது..

அந்தவகையில், மநீம எப்படியாவது திமுக கூட்டணிக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்றும், கமலுக்கு களத்தில் இருக்கும், இரண்டரை சதம் வாக்குவீதத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் திமுகவுக்கு உள்ளதாக தெரிகிறது..

கணக்கு

கணக்கு

அதற்கேற்றவாறு, கூட்டணி தொடர்பாக சீட் விவகாரமும், தொகுதி உடன்பாடும் மறைமுகமாக நடந்து கொண்டிருக்கின்றன.. 1+1 சீட்களை மய்யத்துக்கு ஒதுக்கீடு செய்ய திமுக நினைக்கிறது.. அல்லது 2 மக்களவை தொகுதிகளை மய்யத்துக்கு ஒதுக்கீடு செய்ய நினைக்கிறது போலும்.. அதேபோல, பாஜக போட்டியிடும் தென் சென்னை அல்லது கோவையிலேயே கமலையும் களமிறக்கவும் பிளான் உள்ளதாக தெரிகிறது.. ஆனால் கமலின் கணக்கு வேறு மாதிரியாக இருக்கிறது.

 3 சீட்

3 சீட்

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் 3 தொகுதிகளை பெற கமல் விரும்புகிறாராம்.. ஆனால் ஒரே ஒரு தொகுதி மட்டுமே தரப்படும் என்று திமுக தரப்பில் சொல்லப்பட்டதாக தெரிகிறது.. ராமநாதபுரம் தொகுதியை மய்யத்துக்கு ஒதுக்க திமுக கூட்டணி விரும்புகிறது.. ஆனால் தென்சென்னை மற்றும் கோவை தொகுதிகளையே பெற கமல் விருப்பம் காட்டுகிறார்.. இந்த தொகுதிகளில் ஒன்றில் கமலும், இன்னொரு தொகுதியில், கட்சியின் துணை தலைவர் மவுரியாவும் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளார்களாம்.. 3 சீட் என்றால் திமுக கூட்டணியில் ஒதுக்கப்படுமா? என்று தெரியவில்லை.. அநேகமாக வைகோ ரூட்டில், 1+1 என்ற முடிவுக்கே கடைசியில் வந்து நிற்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

மூவ்ஸ்

மூவ்ஸ்

சீட் விவகாரங்கள் எல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், இன்றைய தினம் கமல் மேற்கொள்ளப்போகும் மூவ்கள்தான் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.. இன்றைய தினம் ராகுல்காந்தியுடன் யாத்திரையில் மட்டும் கலந்து கொள்ளாமல், கூட்டணி தொடர்பாகவும் கமல் பேச வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.. நாடாளுமன்ற தேர்தலாக இருப்பதால், தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்து கொள்ள கமல் விரும்புகிறாராம்..

இடிக்குதே

இடிக்குதே

அதுவும் காங்கிரஸ் இருக்கும் அணி பலமான அணியாகவும், பாஜகவுக்கு மாற்றாகவும் இருக்கும் என்றும் கமல் நம்புகிறாராம்.. அதனாலேயே காங்கிரசுடன் கைகோர்க்க கமல் விரும்புவதாக மய்யத்தினர் சொல்கிறார்கள்.. கொள்கை ரீதியாக பாஜகவுடன் கூட்டு வைக்க முடியாது என்பதால்தான் காங்கிரசுடன் கை கோர்க்க கமல் முடிவு செய்துள்ளாராம்.. அதேபோல, கமலின் வருகை, காங்கிரசுக்கு பலம் தரும் என்று கதர் தலைவர்களும் எதிர்பார்க்கிறார்களாம்.. ஒருவேளை இன்றைய தினம் இந்த கூட்டணி ஓரளவு உறுதியாகிவிட்டால், கூட்டணி அமைத்து அடுத்தடுத்த தேர்தலை சந்திக்கவும் மநீம தயாராக உள்ளது என்கிறார்கள்.

 முட்டி வலி

முட்டி வலி

அதுமட்டுமல்ல, இதுகுறித்து மய்ய நிர்வாகி ஒருவர் நம்மிடம் சொல்லும்போது, "கமலை பொறுத்தவரை ஜனநாயகத்தை விரும்புபவர்.. மதத்தின் பெயரால் மக்களை பிரிப்பதை எந்த காலத்திலும் ஏற்க மாட்டார்.. இந்துத்துவாவுக்கு எதிரான கருத்துக்களை வலிய விதைத்து வரும்நிலையில், காங்கிரசுடன் கூட்டணியே சரி என்று நினைக்கிறார்.. அவருக்கு கால் முட்டி வலி இன்னும் முழுமையாக குணமாகவில்லை.. சமீபகாலமாகவே வலி அதிகரித்து வந்தாலும், ராகுலின் இந்த சான்ஸை விட்டுவிடக்கூடாது என்று நினைக்கிறார்.. இன்றைய தினம் யாத்திரையில் பங்கேற்கும்போது, அது அகில இந்திய அளவில் கவனத்தை திருப்புவதுடன், தமிழகத்திலும் மய்யத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்று கமல் நம்புகிறார்" என்றார்கள்.

 ஸ்ட்டிரைட் டீல்

ஸ்ட்டிரைட் டீல்

காங்கிரசுடன் கூட்டணி வைக்க இப்படி எத்தனையோ காரணங்கள் சொல்லப்பட்டாலும், கூட்டணி தலைமையான திமுகவை விட்டுவிட்டு, ஸ்ட்டிரைட்டாக கமல் ஏன் காங்கிரஸ் கட்சியுடன்நேரடியாக ஆதரவு தருகிறார் என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.. கூட்டணி தலைமை மய்யத்தின் தேர்தல் செலவை ஏற்றுக் கொள்வதாக ஏற்கனவே உறுதிதந்திருந்தபோதிலும், தொழிலதிபர்களிடம் நன்கொடை பெறவும், அதற்கான வழிகளை ஆராயவும் கட்சியில் தனி குழு மய்யம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.. இதைதவிர கமல், டெல்லி திரும்பியதுமே கட்சியின் உட்கட்சி கட்டமைப்பை மாற்றவும் திட்டமிட்டுள்ளாராம்.. புதிய புதிய ஆட்களை நியமித்து அவர்களுக்கு வாய்ப்புகளை தர போகிறார் என்கிறார்கள்.

அச்சாணி

அச்சாணி

மய்யத்துக்குள்ளேயே நிறைய நிறைய அணிகளை உருவாக்கி, அதில் உத்வேகம் நிறைந்த இளைஞர்களை பொறுப்பில் அமர்த்த உள்ளதாகவும் தெரிகிறது.. அதேபோல பெண்களுக்கு மாநில அளவிலான பதவிகளை வழங்கவும் முடிவு செய்துள்ளாராம்.. வரும் பிப்ரவரி மாதம் மய்யம் ஆரம்பித்து 5ம் ஆண்டு விழா நிறைவு பெறுகிறது என்பதால், அதையொட்டி மிகப்பெரிய மாநாடு ஒன்றை கூட்ட கமல் திட்டமிட்டு வருவதாகவும், அன்றைய தினம் மய்யத்தின் கூட்டணி, உட்பட பல்வேறு விஷயங்களை அறிவிக்கவும் யோசித்து வருகிறாராம்.. இதற்கெல்லாம் அச்சாணியாகத்தான் இன்றைய தினம் டெல்லி நிகழ்வு அமைய போகிறது என்கிறார்கள்..

 தகரும் கோட்டைகள்

தகரும் கோட்டைகள்

இன்னொன்றையும் சொல்கிறார்கள்.. ஆம் ஆத்மி கெஜ்ரிவாலை பொறுத்தவரை கமலின் நெருங்கிய நண்பர் என்பதால், இன்றைய தினம் அவரையும் சந்தித்து பேச வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.. ஆனால், காங்கிரசுக்கு நேர் எதிர் அரசியலில் பயணம் செய்து வருபவர் கெஜ்ரிவால்.. இன்னும் சொல்லப்போனால் காங்கிரஸின் கோட்டைகள் ஒவ்வொன்றையும் தகர்த்து கொண்டு வருபவர்.. அப்படிப்பட்ட காங்கிரசுடன்தான் கமல் கூட்டணி வைக்க முற்படும்போது, கெஜ்ரிவாலை எப்படி எதிர்கொள்வார் என்பதும் மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.. ஆக மொத்தம் இன்றைய தினம் தேசிய அளவில் மொத்த கவனத்தையும் தன்மீது குவித்து வைத்து வருகிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்

English summary
Can Kamalhasan get 3 seats and and What is Congress going to do the next: DMK Alliance
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X