Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"நல்லகண்ணு" பெஸ்ட்.. குறுக்கே திமுக "பிரபலம்".. லட்டு போல முஸ்லிம் ஓட்டு.. அப்ப கமல்.. மலைக்கும் பாஜக

நல்லகண்ணு, கமல், ராஜீவ்காந்தி இவர்களில் ஒருவர் ராமநாதபுரத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் மோடி, வரும் எம்பி தேர்தலில் ராமநாதபுரத்தில் போட்டியிடப்போவதாக சொல்லப்பட்டு வந்தாலும், அதுகுறித்து உண்மை தகவல் இதுவரை வெளியாகவில்லை.. அதேசமயம், ராமநாதபுரத்தில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் யார் என்ற ஆர்வமும், அதையொட்டிய அலசல்களும் கிளம்பி உள்ளன.

பிரதமர் மோடி 2024 மக்களவை தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுவது குறித்தும் பரிசீலித்து வருவதாக தெரிகிறது.. அந்தவகையில், ராமநாதபுரத்தில் மோடி போட்டியிடக்கூடும் என்ற தகவல்கள் 2 மாத காலமாக பரபரத்து வருகிறது.

பிரதமர் மோடியை பொறுத்தவரை 2 தொகுதிகளில் போட்டியிட்டே ஆக வேண்டு என்பது கட்டாயம் கிடையாது.. வழக்கமாக, காந்தி நகரில் போட்டியிட்டு கொண்டிருந்தவர் திடீரென வாரணாசியில் போட்டியிட நேர்ந்தது, முழுக்க முழுக்க இந்துத்துவா அரசியலை மையப்படுத்தியே என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்..

பிரம்மாஸ்திரம்

பிரம்மாஸ்திரம்

கடந்த முறை வாரணாசியில் மோடி போட்டியிடுவதற்கு முன்பேயே, அங்கு ஏகப்பட்ட களப்பணிகள் நடந்தன. இன்னும் சொல்லப்போனால், கிட்டத்தட்ட ஒன்றரை வருடம், வாரணசாயிலேயே தங்கியிருந்து அதற்கான வேலைகளை பார்த்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. நிறைய அறிவிப்புகளையும், நலத்திட்டங்களையும் வெளியிட்டும் வந்தார். இதற்கு பிறகுதான், பிரதமர் மோடி அங்கு போட்டியிடபோவதாக அறிவிப்பு வெளியானது. அந்தவகையில், இந்த முறையும், ராமநாதபுரத்தை குறி வைப்பதாக தெரிகிறது.. ஆன்மீகத் தலங்களான காசியையும் ராமேஸ்வரத்தையும் இணைத்து வளர்ச்சி அடைய செய்யும் பாஜகவின் நோக்கத்துக்கு ஏற்பவே, வாரணாசியிலும், ராமநாதபுரம் தொகுதியிலும் மோடி போட்டியிட இருப்பதாக தெரிகிறது..

சென்ட்டிமென்ட்

சென்ட்டிமென்ட்

அதற்காகத்தான், கடந்த எம்பி தேர்தலின்போதே, அதிமுக கூட்டணியில் இருந்தபோது, இந்த ராமநாதபுர தொகுதியை பாஜக கேட்டு வாங்கியது... இந்த முறை சென்ட்டிமென்ட்டாக ஸ்ரீபெரும்புதூரில் ராகுல் போட்டியிட சான்ஸ் இருப்பதாகவும் கூறப்படுகிறது.. ராகுல் தமிழகத்தை குறி வைத்து நகர்வதாலேயே, மேலிட பாஜகவும் தமிழகத்தை குறி வைத்துள்ளதாக சொல்கிறார்கள். தமிழகத்தின் ராமநாதபுரம் தொகுதியை திட்டமிட்டதால்தான், காசியில் தமிழ் சங்கமம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதும், இதற்கான அச்சாரம் போடுவதற்காகதான் என்று பாஜவினர் சொன்னதாக, "தி சண்டே கார்டியன் "இதழ் செய்தியை வெளியிட்டிருந்தது.

கமல்ஹாசன்

கமல்ஹாசன்


ஒருவேளை மோடி போட்டியிட்டால், அவரை எதிர்த்து போட்டியிட போவது யாராக இருக்கும் என்ற அடுத்த கேள்வியும் எழுந்துள்ளது.. இது தொடர்பாக 2 விதமான அலசல்கள் எழுந்து வருகின்றன.. திமுக கூட்டணி சார்பில் பொதுவேட்பாளர் நிறுத்தப்படலாம் என்கிறார்கள்.. அந்த பொதுவேட்பாளர் மூத்த தலைவர் நல்லகண்ணுவாக இருக்க வாய்ப்பிருக்கும் என்றார்கள்.. நல்லகண்ணுவை முன்னிறுத்தினால், நாம் தமிழர் உட்பட பல்வேறு தரப்பினர் ஆதரவு தருவார்கள் என்றாலும், நல்லகண்ணு உடல்நலனை கருத்தில்கொண்டு, அவர் போட்டியிடுவது சாத்தியமா? என்றும் சந்தேகங்கள் எழுந்தன.

நல்லகண்ணு

நல்லகண்ணு

அதனால், மற்றொரு ஆப்ஷனாக கமலை சொன்னார்கள்.. திமுக கூட்டணியில் கமல் இருக்கிறாரா? இல்லையா? என்பது உறுதியாக தெரியாவிட்டாலும், காங்கிரசுடன் நெருங்கி உள்ளார் என்பது மட்டும் உறுதியாகி உள்ளது.. அந்தவகையில், ராமநாதபுரத்தை கமலுக்கு ஒதுக்க போவதாகவும் ஒரு பேச்சு நிலவியது.. இப்போது இந்த ஆப்ஷனும் இல்லாமல் புது ஆப்ஷன் ஒன்று பரவி வருகிறது.. அநேகமாக ராமநாதபுரத்தில் திமுகவே போட்டியிடக்கூடும் என்கிறார்கள்.. அந்தவகையில் சில பெயர்களும் அடிபட்டு வருகிறது.. முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, முன்னாள் எம்பி-யான பவானி ராஜேந்திரன் ஆகியோர், எம்பி பதவியை பெறும் முயற்சியில் இறங்கி உள்ளதாக தெரிகிறது.

ராஜீவ் காந்தி

ராஜீவ் காந்தி

ஆனால், திமுக செய்தித் தொடர்பு இணைச்செயலாளரான ராஜீவ் காந்தியும் இதே தொகுதியை குறி வைத்துள்ளதாக சொல்கிறார்கள்.. காரணம், திருவாடானை அருகிலுள்ள தேர்போகி என்பதுதான், ராஜிவ் காந்தியின் சொந்த ஊர் ஆகும்.. கடந்த 2014-ல் சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரத்தை எதிர்த்து போட்டியிட்டவர் ராஜீவ்காந்தி.. சமீப காலமாகவே தன் ஊருக்கு வந்துசெல்வதுடன், திமுக பிரமுகர்களுடன் ஆலோசித்து வருகிறாராம்.. எனவே, ராஜீவ்காந்திக்கு இந்த தொகுதியை ஒதுக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.

நல்லக்கண்ணு

நல்லக்கண்ணு

இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. இந்துத்துவா ஆதரவு மண் என்று ராமநாதபுரத்தை முழுமையாக சொல்லிவிட முடியாது.. இங்கு பெருவாரியான முஸ்லிம்களின் வாக்குகளும் உள்ளன.. இந்த முஸ்லிம்களின் வாக்குகள், பாஜகவுக்கு எந்த அளவுக்கு வாக்குகளை அள்ளித்தரும் என்ற கேள்வியும் உள்ளது.. எனவே, முஸ்லிம்களின் வாக்குகள் உட்பட, பாஜகவின் அதிருப்தி ஓட்டுகளையும் சேர்த்து அள்ளவே திமுக யோசிக்கும் என்பதால், இந்த தொகுதியில் நேரடியாகவே களமிறங்கி போட்டியிடும் என்கிறார்கள். ஆக, ராமநாதபுரத்தில் மோடி நிறுத்தப்பட்டால், அவரை எதிர்த்து களமிறங்குவது நல்லகண்ணுவா? கமல்ஹாசனா? ராஜீவ்காந்தியா? தெரியவில்லை.. பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+