30 தான் லிமிட்! உங்கள் வீட்டில் குடிநீர் கேன்களை பயன்படுத்துகிறீர்களா? உணவு பாதுகாப்பு துறை வார்னிங்
சென்னை: வீட்டில் 30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பாக உத்தரவிடப்பட்டு உள்ளது.
குடிநீர் கேன்களை 30 முறை மட்டுமே மறுசுழற்சி மூலம் குடிநீர் நிரப்பி பயன்படுத்த வேண்டும் அதற்கு மேல் செய்ய கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. பயன்படுத்த பயன்படுத்த கேன்களின் நிறம் மாறும். அப்படி மாறினால் உடனே அதை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
நீங்கள் பயன்படுத்தும் கேன் குடிநீர் மோசமான நிலையில் இருந்தால், உடனே அதை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், என்று தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பாக உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஏற்கனவே நாம் வீட்டு பயன்பாட்டிற்காக கேன்களில் வாங்கி குடிக்கும் தண்ணீர்களில் கூட பாக்ட்ரீயா கலப்படம் இருப்பதாக புகார்கள் எழுந்து உள்ளன. சமீபத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் மற்றும் மினரல் வாட்டரை 'அதிக ஆபத்துள்ள உணவு வகையாக' வகைப்படுத்த முடிவு செய்துள்ளது. அதாவது, பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் இனிமேல் கட்டாய ஆய்வுகள் மற்றும் மூன்றாம் தரப்பு தணிக்கைகளுக்கு உட்படுத்தப்படும்.

இந்த நிலையில்தான் senti.bee என்ற இன்ஸ்டாகிராம் நெட்டிசன் ஒருவர் நாம் வீட்டு பயன்பாட்டிற்காக கேன்களில் வாங்கி குடிக்கும் தண்ணீர்களில் கூட பாக்ட்ரீயா இருந்ததாக புகார் வைத்துள்ளார்
விழிப்புணர்வுக்காகவே இதை இடுகிறேன் நண்பர்களே! கடந்த சில நாட்களாக நான் தினமும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன். இதையடுத்து நான் இரண்டு தண்ணீர் மாதிரிகளை பரிசோதித்தேன. ஒன்று எனது வீட்டு தண்ணீர்.மற்றொன்று கடையில் வாங்கிய அக்வா தண்ணீர். நான் வழக்கமாக பயன்படுத்தும் வீட்டின் CAN தண்ணீரில் பாக்டீரியா மாசு இருப்பது ஆய்வு முடிவில் தெரிய வந்தது. என் குடும்பம் மற்றும் நண்பர்கள் வட்டாரத்தில் வாட்டர் கேன் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் இந்த முடிவுகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.
பரமா.. நாம் குடிக்கும் தண்ணீர் அசுத்தமானது.. அது குடிப்பதற்கு ஏற்றதல்ல. நீங்கள் இந்த தண்ணீரை குடித்தால், உங்களுக்கு எதுவும் நடக்கவில்லை, அதனால் நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர் என்று அர்த்தமல்ல, உங்களுக்கோ அல்லது உங்கள் பெற்றோருக்கோ அல்லது குழந்தைகளுக்கோ எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்படலாம். உங்களின் உடல் பிரச்சனைகளுக்கு இதுவே கூட காரணமாக இருக்கலாம், என்று எச்சரித்து உள்ளார். கடந்த சில நாட்களாக அவருக்கு அடிக்கடி உடல்நலப்பிரச்சனை ஏற்பட்ட நிலையில், தண்ணீரில் செய்த சோதனையில் இதை கண்டுபிடித்துள்ளார்.
எச்சரிக்கை:
சமீபத்தில்தான் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் மற்றும் மினரல் வாட்டரை 'அதிக ஆபத்துள்ள உணவு வகையாக' வகைப்படுத்த முடிவு செய்துள்ளது. அதாவது, பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் இனிமேல் கட்டாய ஆய்வுகள் மற்றும் மூன்றாம் தரப்பு தணிக்கைகளுக்கு உட்படுத்தப்படும்.
அதிக ஆபத்துள்ள உணவு வகைகளுக்கு கட்டாய ஆய்வு அவசியம்: புதிய விதியின் கீழ், அனைத்து பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் மற்றும் மினரல் வாட்டர் உற்பத்தியாளர்களும் இனி வருடாந்திர ஆய்விற்கு உட்படுத்தப்படுவார்கள். புகார்கள் மற்றும் ஆபத்து அடிப்படையிலான ஆய்வுகளை ஆய்விற்கு உட்படுத்தப்படுவார்கள். .
உரிமம் அல்லது பதிவு வழங்கப்படுவதற்கு முன்பு இந்த ஆய்வுகள் நடைபெறும்.இந்த நடவடிக்கையானது அதிக ஆபத்துள்ள வகையின் கீழ் வரும் தயாரிப்புகள் அனைத்திற்கும் மேற்கொள்ளப்படும். அந்த வகையில் இனி தண்ணீர் கேன்களுக்கு வருடா வருடம் இந்த சோதனை நடக்கும்.
3ம் பார்ட்டி நிறுவனங்களின் வருடாந்திர தணிக்கைகள்:
FSSAI ஆல் அங்கீகரிக்கப்பட்ட 3ம் பார்ட்டி உணவுப் பாதுகாப்பு நிறுவனங்களால் வருடாந்திர தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். தண்ணீர் பாதுகாப்பாக இருக்கிறதா? அதில் தவறு இருக்கிறதா? தண்ணீர் எப்படி பேக்கேஜ் செய்யப்பட்டு உள்ளது என்பதெல்லாம் இந்த சோதனையில் மேற்கொள்ளப்படும். இத்தனை காலம் ஒரு முறை FSSAI சான்று வாங்கினால் அந்த குடிநீர் நிறுவனம் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்டப்படாது. இனி வருடம் ஒருமுறை பாட்டில் நிறுவனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications