பஞ்சமி நிலத்தை வாங்கலாமா வேண்டாமா? DC நிலங்களை அடையாளம் காண்பது எப்படி?
சென்னை: பஞ்சமி நிலம் அதாவது டி.சி நிலம் (Depressed Class Land ) என்று அழைக்கப்படுகிறது. நிலமற்ற ஏழைகளுக்கு ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட நிலங்களை எந்த காரணம் கொண்டு வாங்கிவிடாதீர்கள். டிசி நிலம் அல்லது ஏடி பட்டா நிலம் என்று எப்படி அடையாளம் காண்பது என்பதை பார்ப்போம்.
நிலமற்ற ஏழை பட்டியல் பிரிவு மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக 1892-ம் ஆண்டில் ஆங்கிலேய அரசால் வழங்கப்பட்ட விளை நிலங்ளைத்தான் பஞ்சமி நிலம் அதாவது டி.சி நிலம் 0 (Depressed Class Land) என்று அழைக்கிறோம். A.D.Patta - Adi Dravidar Patta இந்த நிலங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும்.

ஆங்கிலேயர் இந்திய அரசின் வருவாய்த்துறை பதிவேடுகளில் உள்ள விளை நிலங்களில் பஞ்சமி நிலம் என்பதை தனியாகவும், மற்ற நில வகைகளை நத்தம் புறம்போக்கு, புறம்போக்கு, மானாவாரி, தரிசு, நீர்ப்பாசன சாகுபடி நிலம் என்றும் வகைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தன. பட்டியலினம் மற்றும் பழங்குடியினரின் சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்த தமிழகத்தில், 12 லட்சம் ஏக்கர் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது.
அண்மையில் நெல்லையைச் சேர்ந்த முதுகலை பொறியியல் பட்டதாரி கருப்பசாமி என்பவர் பஞ்சமி நிலம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பட்டியல் சமூக மக்களுக்குத் தமிழ்நாட்டில் ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தின் மொத்த பரப்பளவு சுமார் 12 லட்சம் ஏக்கர் ஆகும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி தமிழகத்தில் தற்போது பஞ்சமி நிலங்கள் மொத்தம் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 133 ஏக்கர் மட்டுமே கண்டறியப்பட்டிருக்கின்றன.
பட்டியல் சமூக மக்களுக்கு ஒதுக்கப்பட்டுக் கண்டறிய முடியாமல் காணாமல் போன பஞ்சமி நிலங்கள் சுமார் 10 லட்சம் ஏக்கர்கள் என்பது அரசு வெளியிட்ட பதிலில் தெரிய வந்துள்ளது. இதிலும் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 113 ஏக்கர் பஞ்சமி நிலத்தில் 11 ஆயிரத்து 556 ஏக்கர் பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பில் இருக்கிறது. மாற்று சமூகத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட பஞ்சமி நிலத்தின் பரப்பளவு சுமார் 11, 556 ஏக்கர் என்று ஆர்டிஐ தகவலில் தெரியவந்துள்ளது. இதில் சுமார் 933 ஏக்கர் நிலங்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 4431 ஏக்கர் பஞ்சமி நிலம் மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சொல்கிறார்கள்.
இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், விருதுநகர், ராமநாதபுரம், நாமக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பஞ்சமி நிலம் இல்லை என்பது தான். பஞ்சமி நிலங்களை பொறுத்தவரை, பயிர் செய்தோ அல்லது வீடு கட்டிக் கொண்டோ பட்டியல் சமூக மக்கள் அனுபவிக்க முடியும். பஞ்சமி நிலங்களைப் பிற சமூகத்தினர் வாங்க இயலாது. அப்படியே மாற்று சமூகத்தினர் ஆக்கிரமித்தாலும் வாங்கினாலும் அது செல்லாது என்பது சட்டமாகும்.
நீங்கள் வாங்க போகும் நிலாம் பஞ்சமி நிலம் என்பதை எப்படி அறிய முடியும்: எப்போதுமே இடம் வாங்க போகிறீர்கள் என்றால், முதலில் போக வேண்டிய இடம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம். அங்கு தான் சம்பந்தப்பட்ட மனை அல்லது இடம் பதிவேடுகளை புத்தகங்களில் பதிவேற்றி வைத்திருப்பார்கள். அங்கு போய் நீங்கள் வாங்க போகும் நிலத்தின் சர்வே நம்பரை சொன்னால் போதும், அந்த நிலம் கண்டிசன் நிலமா, கிரயம் தடை செய்யப்பட்ட நிலமா, டி.சி நிலமா (பஞ்சமி), கள்ளர் நிலமா, ஆதிதிராவிடர் நிலமா அல்லது எந்த மாதிரியான நிலம் என்ற குறிப்புகள் இருக்கும். இப்படி குறிப்புகள் இருந்தால் எச்சரிக்கையாக செயல்படமுடியும்.
நிலம் யாருக்கு சொந்தம், வில்லங்கம் உள்ளதா என்பதை பார்க்க போகிறீர்கள் என்றால், அதற்கு முன்பு பார்க்க வேண்டியது நிலம் என்ன வகை என்பதை தான். அதேநேரம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பதில் சம்பந்தப்பட்ட மனை உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று ஆர்.எஸ்.எல்.ஆர் (ReSettlement Land Record - RSLR) ஆவணத்தை பெற்றும் கவனிக்க முடியும்.
அதில் டி.சி நிலம் (Depressed Class Land) என்ற குறிப்பு இருக்கும் பட்சத்தில் அது பஞ்சமி நிலம் என்பதை அறிந்து எச்சரிக்கையாக வாங்காமல் தப்பிக்க முடியும். ரீ-செட்டில்மெண்டு லேண்டு ரிக்கார்டு' (RSLR) என்றால், இப்போது பயன்பாட்டில் உள்ள அ-பதிவேடான யு.டி.ஆர்-க்கு (Updating Registry Scheme UDR) முந்தைய பழைய கிராம கணக்கு ஆகும். இதில் தான் டிசி நிலமா இல்லையா என்பதை அறிய முடியும்
நகர்ப்பகுதிகள் மற்றும் புறநகர்ப்பகுதிகளில் வாங்கிய அல்லது வாங்க விரும்பும் குறிப்பிட்ட மனை அல்லது நிலம் குறித்து சந்தேகம் எழும் நிலையில் பட்டா, சிட்டா, அடங்கல் அ-பதிவேடு மற்றும் RSLR ஆகிய ஆவணங்களை கண்டிப்பாக பார்க்க வேண்டும். இதை பார்ரக்காமல் வாங்கினால் பின்னாளில் விற்க முடியாமல் வேதனைப்படும் நிலை உருவாகும். அதே நேரம் பஞ்சமி நிலங்களை ஆதிதிராவிடர்கள் மட்டும் வாங்கி கொள்ள முடியும் என்கிற நிலையும் உள்ளது..
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications