optical illusion: படத்தில் வரிக்குதிரை எங்கே இருக்கு? அதிபுத்திசாலிகளால் மட்டுமே 6 செகண்டில் கண்டுபிடிக்க முடியும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் (optical illusion) படத்தில், புலிகள் பல அங்கும் இங்குமாக கிடப்பது போல் இருக்கிறது. பலருக்கும் பார்த்த உடன் இது தான் கண்களுக்கு தெரிந்து இருக்கும். ஆனால் நன்கு உற்று பார்த்தாலோ அல்லது அதிபுத்திசாலிகளின் கண்களுக்கு மட்டுமே இங்கே ஒரு வரிக்குதிரை இருப்பது கண்களுக்கு தெரியும். நாங்களும் அதிபுத்திசாலிகள் தான் என்பதை, வரிக்குதிரை படத்தில் எங்கே இருக்கிறது என்று 6 செகண்டுக்குள் கண்டுபிடித்து சொல்லுங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் என்ற ஒளியியல் மாயை புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. படத்தில் மறந்திருக்கும் விலங்கையோ அல்லது பொருளையோ கண்டுபிடித்து பதில் கூற பலரும் ஆர்வம் காட்டுவதால் இதுபோன்ற படங்கள் டிரெண்ட் ஆகின்றன.

can-you-find-the-zebra-in-the-optical-illusion-picture-if-you-find-it-within-6-seconds-you-are-a-g

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள்

மேலும் பார்க்கும் நம் கண்களை குழப்பி, நம் மூளைக்கு சவால் விடுக்கும் வகையில் இதுபோன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இருப்பதனால், ஓய்வு நேரத்தில் சமூக வலைத்தளத்தில் உலவும் நெட்டிசன்களுக்கு தீனியாக இந்த படங்கள் அமைந்துவிடுகின்றன. அப்படி ஒரு புகைப்படம் தான் இணையத்தில் இன்று தீயாக பரவி வருகிறது.

இந்த இல்யூஷன் படத்தை முதலில் பார்த்தோம் என்றால், பல புலிகள் இருப்பது தெரியும். மஞ்சள் நிறத்திலும், சில புலிகள் வெள்ளை நிறத்திலும் அமைந்து இருப்பதை பார்க்க முடியும். பலரது பார்வைக்கும் இந்த காட்சி தான் தெரியும். ஆனால் இங்கே வரிக்குதிரை ஒன்று இருக்கின்றது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம் இந்த படத்தில் வரிக்குதிரை ஒன்று இருக்கிறது.

வரிக்குதிரை எங்கே இருக்கிறது?

இந்த வரிக்குதிரை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். அதுவே இன்றைய சவால் ஆகும். அதுவும் 6 செகண்டுக்குள் கண்டுபிடிக்க வேண்டும். அதிபுத்திசாலிகள் என்றால் படத்தை பார்த்தபோதே வரிக்குதிரை இருக்கும் இடத்தை கண்டுபிடித்து இருப்பார்கள். உங்களாலும் முடிகிறதா என்று முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கான நேரம் தொடங்கியது.

படத்தை நன்றாக உற்று கவனியுங்கள். படத்தில் எங்கே வரிக்குதிரை இருக்கிறது.. உங்களுக்கான நேரம் முடிந்தது. குறிப்பிட்ட 6 செகண்டுக்குள் விடையை கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள். நீங்கள் அதிபுத்திசாலிகள் தான். ஆனால் இன்னும் வரிக்குதிரை இருக்கும் இடம் தெரியாமல் தேடிக்கொண்டிருப்பவர்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம்.. உங்களுக்காக ஒரு டிப்ஸ் தருகிறோம்.

குதிரையின் முகத்தை வைத்து தேடினால்

அதாவது படத்தின் அடிப்பகுதியில் தான் இருக்கிறது. இப்போது அங்கு மட்டும் தேடினாலே ஈசியாக கண்டுபிடித்துவிடலாம். அப்படி இல்லையெனில் குதிரையின் முகத்தை வைத்து தேடவேண்டும். அப்படி தேடினாலும் எளிதில் கண்டுபிடித்து விடலாம். அதாவது புலியின் முகத்திற்கும் குதிரையின் முகத்திற்கும் உள்ள வேறுபாட்டைக்கொண்டு நீங்கள் பார்க்க வேண்டும்.

can-you-find-the-zebra-in-the-optical-illusion-picture-if-you-find-it-within-6-seconds-you-are-a-g

வரிக்குதிரையின் உடலை வைத்து தேடினால், இங்கு உள்ள புலிகள் பெரும்பாலும் அப்படியே தெரிவதனால் கொஞ்ச சிரமமாக இருக்கும். இப்போது 100க்கு 99 சதவீதம் பேர் விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். அப்படியும் விடை தெரியாதவர்கள் இங்கே மேலே உள்ள படத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம். படத்திற்கான விடையை 6 செகண்டில் கண்டுபிடித்தவர்கள் கமெண்ட் செய்யுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+