சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"நோட்டம்".. தட்டி தூக்கும் போலீஸ்! கோவை கார் வெடிப்பு பற்றி வதந்தி! கிஷோர் கே சாமி மீது பாய்ந்த கேஸ்

Google Oneindia Tamil News

சென்னை: கோயம்புத்தூர் கார் வெடிப்பு பற்றி வதந்தி பரப்பியது தொடர்பாக கிஷோர் கே சாமி மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது.

Recommended Video

    Annamalaiஐ இன்னும் அசிங்கமாக திட்ட வேண்டும்- நாஞ்சில் சம்பத் *Interview

    கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தமிழ்நாடு போலீஸ் மிகவும் சிறப்பாக கையாண்டது. கார் வெடிப்பு தொடர்பாக 10 மணி நேரத்தில் 5 குற்றவாளிகளை கைது செய்தது.

    முக்கியமாக தீபாவளி அன்று எந்த அசம்பாவிதமும் நடக்காமல் போலீஸ் பார்த்துக்கொண்டது. இந்த சம்பவம் கலவரமாக வெடிக்காமல் போலீஸ் கவனமாக செயல்பட்டது.

    மதநல்லிணக்கத்தை வலியுறுத்த.. கோவை உக்கடத்தில் கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு சென்ற ஜமாத் நிர்வாகிகள் மதநல்லிணக்கத்தை வலியுறுத்த.. கோவை உக்கடத்தில் கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு சென்ற ஜமாத் நிர்வாகிகள்

    போலீஸ்

    போலீஸ்

    ஆனால் இந்த விவகாரத்தில் சில வலதுசாரிகள் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வந்தனர். பாஜக ஆதரவாளர்கள் சிலரும், போலீஸ் தெரிவிக்காத சில விஷயங்களை தெரிவித்து வந்தனர். இது சமூக வலைத்தளங்களில் கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இப்படி சமூக வலைத்தளங்களில் கோவை கார் வெடிப்பு பற்றி போஸ்ட் செய்தவர்களை போலீசார் நோட்டமிட்டு வந்தனர். சைபர் கிரைம் போலீஸ் இவர்களை கண்காணித்து வந்தனர்.

     சைபர் கிரைம்

    சைபர் கிரைம்

    இதில் கிஷோர் கே சாமியும் கண்காணிக்கப்பட்டு வந்தார். அவர் இந்த கார் வெடிப்பு தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பல்வேறு கருத்துக்களை போஸ்ட் செய்து வந்தார். இதனால் அவரின் கணக்கு கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கோயம்புத்தூர் கார் வெடிப்பு பற்றி வதந்தி பரப்பியது தொடர்பாக கிஷோர் கே சாமி மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது.கார் வெடிப்பு பற்றி சமூக வலைதளத்தில் அமைதியை குலைக்கும் வகையில் வதந்தி பரப்பியதாக வழக்கு சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் கைது செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளன.

    கைது

    கைது

    இதற்கு முன்பே தலைவர்கள் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பரப்பிய யூ டியூபர் கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டார். பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதல்வர் கருணாநிதி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் தவறான கருத்துகளை பதிவிட்டதாக யூ டியூபர் கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டார். அதேபோல், பெண் பத்திரிகையாளர்களை இழிவாக பேசியதாகவும் இவர் மீது சில வருடங்களுக்கு முன் புகார் வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது புதிய வழக்கு அவர் மீது பதியப்பட்டு உள்ளது.

    தீபாவளி

    தீபாவளி

    கோயம்புத்தூரில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கி உள்ளது. இந்த சம்பவத்தில் முபின் என்ற தீவிரவாதி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர். துரிதமாக செயல்பட்டு இதில் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அதன்பின் வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் அந்த சம்பவம் பற்றி கிஷோர் கே சாமி சர்ச்சையான பதிவுகளை போஸ்ட் செய்து வந்தார்.

    English summary
    Case filed against Kishor K Swamy for peddling fake news in Coimbatore Blast case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X