வங்கி மேலாளரின் கன்னத்தில் அறைந்த வழக்கு.. அழகிரி மகளுக்கு எதிரான வழக்கில் ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: சென்னைஅடையாறில் உள்ள எஸ்பிஐ வங்கியின் கிளை மேலாளரை கன்னத்தில் அறைந்தது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகள் கயல்விழி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கயல்விழி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் அவர் வாபஸ் பெற்ற நிலையில், தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மேலும், 4 வாரத்தில் இந்த வழக்கு தொடர்பாக இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அடையார் சாஸ்திரி நகர் போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கயல்விழி மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், சென்னை ஐகோர்ட்டில் கயல்விழி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

4 வாரங்கள் டைம்
அந்த மனுவில் வங்கி மேலாளர்தான் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், அதை மறைத்து தனக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, கயல்விழி தரப்பில் மனுவை வாபஸ் பெற அனுமதி கோரப்பட்டது. இதையடுத்து, மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, இந்த வழக்கில் 4 வாரங்களில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சாஸ்திரி நகர் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
கன்னத்தில் அறைந்தது ஏன்?
முன்னதாக கடந்த ஜூலை மாத இறுதியில் மு.க அழகிரி மகள் கயல்விழி, எஸ்பிஐ வங்கியின் மேலாளரை கன்னத்தில் அறைந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்த்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதனையடுத்து எஸ்பிஐ வங்கி மேலாளர் தரப்பில் கடந்த ஜூலை 21 ஆம் தேதி சென்னை சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் வங்கி அதிகாரி மீது தாக்குதல் நடத்திய கயல்விழி மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் கயல்விழி, வங்கி மேலாளரை தாக்கியது ஏன் என்பது பற்றி பரபரப்பு தகவல் வெளியானாது. அதாவது, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகள் கயல்விழிக்குச் சொந்தமான கட்டிடத்தில் எஸ்பிஐ வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் லிப்ட் சரிவர இயங்கவில்லை என்றும் அதனை சீரமைக்கும்படி கட்டிட உரிமையாளரான கயல்விழி தரப்பிடம் வங்கி நிர்வாகம் தரப்பில் பலமுறை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
கயல்விழி கைது
ஆனால் லிப்ட் சரி செய்து கொடுக்கப்படாதால், கயல்விழிக்கே வங்கி மேலாலர் ஹர்ஷீன் சிங் நேரடியாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதையடுத்து, வங்கிக்கு நேரில் வந்த கயல்விழி, வங்கி மேலாளரிடம் இது பற்றி பேசியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே,
வங்கி மேலாளரை கன்னத்தில் கயல்விழி கன்னத்தில் அறைந்துள்ளார். இதையடுத்து கயல்விழி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரை கைது செய்த போலீசார் விசாரணைக்கு பிறகு காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.




Click it and Unblock the Notifications
