சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அத்திவரதர் சிலை வைக்கப்படும் குளத்தை தூர்வார வேண்டும்.. ஹைகோர்ட்டில் வழக்கு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: அத்திவரதர் சிலை வைக்கப்படும் அனந்தசரஸ் குளத்தை பராமரிக்க எடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பாக அறிக்கை அளிக்க இந்து சமய அறநிலைய துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசன உற்சவம் ஜூலை 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

Case seeking to clean Ananda saram kulam

அத்திவரதர் சிலை வைக்கப்பட்டு இருந்ததால் அனந்தசரஸ் குளத்தை தூர்வார முடியவில்லை எனவும், தற்போது அத்திவரதர் தரிசனம் நடைபெறும் நிலையில், குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி மாம்பலத்தைச் சேர்ந்த அசோகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆதிகேசவலு, குளத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கறிஞர்கள் ஆணையர்கள் தாக்கல் செய்த அறிக்கையில், குளத்தில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், குளத்துக்கு யாரும் அனுமதிக்கப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்திவரதர் சிலை வைக்கப்படுவதால் அனந்தசரஸ் குளத்தை இயந்திரங்களை பயன்படுத்தாமல் சுத்தப்படுத்தப்படுவதாகவும், குளத்தில் மீன்கள் வளர்க்கப்பட்டு, இயற்கையான முறையில் தண்ணீர் சுத்தப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை குளத்தை ஆய்வு செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுமதியளிக்க அறநிலையத் துறைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டது.

இதையடுத்து, எதிர்காலத்தில் குளத்தை முறையாக பராமரிக்க எடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பாக வரும் 14 ம் தேதி அறிக்கை அளிக்க இந்து சமய அறநிலைய துறைக்கு நீதிபதி ஆதிகேசவலு, உத்தரவிட்டார்.

English summary
A Case has been filed seeking to clean Ananda saram kulam wher Athi Varadar statue will be placed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X