சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காவிரி நீர் மேலாண்மை ஆணையம்.. ஜலசக்தித் துறைக்கு கீழ் கொண்டு வந்த மத்திய அரசு.. பரபரப்பு உத்தரவு!

தன்னிச்சையான அதிகாரம் கொண்ட ஆணையமான காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜலசக்தித் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தன்னிச்சையான அதிகாரம் கொண்ட ஆணையமான காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜலசக்தித் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

26 வருட தமிழகத்தின் தண்ணீர் போராட்டம் மொத்தமாக தோல்வி அடையும் நிலைக்கு சென்று இருக்கிறது. காவிரி நீருக்காக தமிழகத்தின் அதிமுக மற்றும் திமுக அரசுகள் மாறி மாறி சட்ட ரீதியாக போராட்டங்கள் செய்து வந்தது. 26 வருடமாக செய்து வந்த இந்த போராட்டத்தின் முடிவில் காவிரி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.

Cauvery management authority has been brought under central government Jal Shakthi Ministry

காவிரி வாரியம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் கடைசியாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. 26 வருடம் நடந்த இந்த சட்ட போராட்டத்தில் தமிழகம் ஒரு வகையில் வெற்றி பெற்றது என்றுதான் கூற வேண்டும்.

இந்த சட்ட போராட்டத்தின் முடிவில் கடந்த 1.6.2018 அன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. அதே நாள், இது தொடர்பான அறிவிப்பு மத்திய அரசு இதழில் வெளியிடப்பட்டது. உச்ச நீதிமன்ற இறுதி உத்தரவின்படி இந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என்பது சுதந்திரமாக செயல்பட கூடிய தன்னிச்சையான அமைப்பு ஆகும்.

ஆணையத்தின் அதிகாரம் மற்றும் பணிகள் அனைத்தும் காவிரி நடுவர் மன்றம் உத்தரவிட்ட தீர்ப்பின் படியே செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் எடுக்கும் முடிவே இறுதியானது. இதில் மாநில அரசோ, மத்திய அரசோ தலையிட முடியாது.

இரண்டு மாநில உறுப்பினர்களும், இதற்கான குழு தலைவரும் இதில் இடம்பெற்று இருப்பார். அதேபோல் காவிரியில் எவ்வளவு நீரை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று இந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவை வழங்கும்.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக தன்னிச்சையான அதிகாரம் கொண்ட ஆணையமான காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜலசக்தித் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில், மத்திய ஜல் சக்தித் துறையின் கட்டுப்பாட்டுக்குள் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை கொண்டு வந்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆணையம் அமைக்கப்பட்டதன் நோக்கத்தையே சிதைக்கும் வகையில் இந்த உத்தரவு இடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஆணையத்தின் சக்தி பறிக்கப்பட வாய்ப்புள்ளது. அதேபோல் இந்த ஆணையத்தின் சுதந்திர தன்மை , முடிவு எடுக்கும் அதிகாரம் கட்டுப்படுத்த வாய்ப்புள்ளதாக கண்டனங்கள் எதிரொலிக்கின்றன. தமிழ்கத்தின் 26 வருட சட்ட போராட்டம் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

English summary
Cauvery management authority has been brought under central government Jal Shakthi Ministry today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X