கைவிரித்த டெல்லி? அதிமுக ‘மாஜி’ தலைநகர் சென்ற நேரத்தில் வேலையைக் காட்டிய சிபிஐ! பெரிய சிக்கல்!?
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், டெல்லி சென்று முக்கிய அமைச்சர்களைச் சந்தித்த நிலையில், அவர் மீது குட்கா வழக்கில் சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குட்கா ஊழல் வழக்கில், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மற்றும் முன்னாள் டிஜிபி-க்கள் ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட 21 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தன் மீதான வழக்குகளில் இருந்து விடுவித்துக் கொள்வதற்காக மத்திய பாஜக அரசின் உதவியை நாடி வருவதாகக் கூறப்படும் நிலையில், இரண்டாவது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு லஞ்சம்
கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை செங்குன்றத்தில் உள்ள பான் மசாலா நிறுவனம் ஒன்றில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில், 250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட டைரியில், தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்காவை சட்டவிரோதமாக விற்பனை செய்ய அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வணிக வரித்துறை அமைச்சர் பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் மற்றும் காவல்துறை, உணவு பாதுகாப்புத் துறை, வணிகவரித் துறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

முதல் சார்ஜ் ஷீட்
வருமான வரித்துறையின் அறிக்கையைத் தொடர்ந்து, அப்போதைய அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்த சிபிஐ, அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த 2017ஆம் ஆண்டு சோதனையும் நடத்தியது. அதன்பின்னர், சென்னை சிபிஐ கூடுதல் நீதிமன்றத்தில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 பேர் மீது கடந்த 2018ஆம் ஆண்டு முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகும், விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் மீண்டும் சோதனை நடைபெற்றது.

இரண்டாவது குற்றப் பத்திரிக்கை
இந்நிலையில், தற்போது அந்த வழக்கில் 21 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபிக்கள் ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் வணிக வரித்துறை, காவல்துறை மற்றும் கலால்துறை அதிகாரிகளான குறிஞ்சி செல்வன், கணேசன், லட்சுமி நாராயணன், மன்னர் மன்னன் ஆகியோர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி சென்ற விஜயபாஸ்கர்
இதற்கிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லி சென்று, பாஜகவைச் சேர்ந்த முக்கிய அமைச்சர்களைச் சந்தித்தார். குட்கா வழக்கு நெருக்கி வரும் நிலையில், விஜயபாஸ்கர் டெல்லி பயணம் மேற்கொண்டு மத்திய அமைச்சர்களைச் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே பாஜக தேசிய தலைவர் நட்டா தமிழகம் வந்தபோது விஜயபாஸ்கர் அவரைச் சந்தித்திருந்தார். இந்நிலையில் அவர் எதற்காக டெல்லி சென்றார் என்ற கேள்விகள் எழுந்தன.

என்ன காரணம்?
விஜயபாஸ்கரின் டெல்லி விசிட் பல்வேறு யூகங்களைக் கிளப்பிய நிலையில் தான் அமைச்சர் எல்.முருகனை சந்தித்தது ஏன் என விஜயபாஸ்கர் ட்விட்டரில் தெரிவித்தார். ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெறவிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி சார்பில்மத்திய இணை அமைச்சர் முருகனை டெல்லியில் சந்தித்தேன். நம் உரிமையை நிலைநாட்ட மத்திய அரசு சார்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், முன்வைக்கப்பட வேண்டிய வாதங்கள் குறித்து வலியுறுத்தினேன் எனத் தெரிவித்தார். விஜயபாஸ்கரின் இந்த சந்திப்பின்போது ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பி.ராஜசேகரனும் உடன் இருந்தார்.

இன்னொரு புள்ளியையும்
அதிமுக மாஜி விஜயபாஸ்கர், தனது டெல்லி விசிட்டின்போது பாஜகவைச் சேர்ந்த வேறொரு முக்கிய அமைச்சரையும் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. அந்தச் சந்திப்பின்போது, தன் மீதான குட்கா முறைகேடு வழக்கு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. விஜயபாஸ்கர் டெல்லியில் மூவ் செய்த அதே நாளில், சிபிஐ இரண்டாவது குற்றப் பத்திரிக்கையை செய்துள்ளது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications