டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய விஜய்க்கு சிபிஐ அதிர்ச்சி – மீண்டும் பறந்த சம்மன்
டெல்லி: கரூர் மாவட்டத்தில் கடந்த 2025 செப்டம்பர் நடைபெற்ற தவெக கூட்டத்தில் சிக்கி 41 மக்கள் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. பல்வேறு தரப்பினருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது. அந்த வகையில் தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். அவரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு பிறகு அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் விரைவில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் பரபரப்பான வியூகங்களுடன் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் முயற்சி செய்கின்றன. அவர்களுடன் தவெக மற்றும் நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் வேகம் காட்டுகிறது.

ஜனநாயகன் படம் பிரச்சனை
தீவிர திமுக எதிர்ப்பை கையில் எடுத்து விஜய் களமிறங்கியுள்ளார். அவரை அதிமுக - பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி பக்கம் இழுப்பதற்கு முயற்சிகள் நடக்கின்றன. ஆனால் பாஜகவை கொள்கை எதிரி என்று அறிவித்திருப்பதால் அவர்களுடன் கூட்டணி இல்லை என்று தவெக அறிவித்துள்ளது. விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிப்பவர்களுடன் தான் கூட்டணி என்றும் கூறியுள்ளனர்.
விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் கடந்த 9 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது. தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்காத காரணத்தால் படம் வெளியாகவில்லை. சென்னை உயர் நீதிமன்றம் படத்திற்கு இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து படக்குழு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தணிக்கை வாரியம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
விஜய்யிடம் சிபிஐ விசாரணை
மறுபக்கம் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணையை சிபிஐ தீவிரப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய்யிடம் நேற்று சுமார் 7 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யை தங்கள் பக்கம் இழுப்பதற்காக பாஜக நெருக்கடி கொடுப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
இதேபோல காவல்துறை அதிகாரிகள் டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்டோரிடமும் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணைக்கு பிறகு விஜய் டெல்லியில் இருந்து இன்று சென்னை திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு விஜய்யிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
மீண்டும் சம்மன்
அதன்படி விஜய்யிடம் வருகிற ஜனவரி 19 ஆம் தேதி விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளனர். இதற்காக சிபிஐ அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தவெக மற்றும் விஜய் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "விஜய்யை சூழ்ந்துள்ள டெல்லி மேகம் இப்போதைக்கு விலக வாய்ப்பில்லை" என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications