நிலத்தடி நீருக்கு ரூ10,000 கட்டணமா? மத்திய அரசின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது.. நீர்வளத்துறை!
சென்னை: நிலத்தடி நீருக்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் என்ற மத்திய அரசின் உத்தரவு தமிழ்நாட்டிற்கு பொருந்தாது என்று தமிழ்நாடு நீர்வளத்துறை விளக்கமளித்துள்ளது.
மத்திய நிலத்தடி நீர் ஆணையம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட அறிவிப்பால் மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது. அதில், நீச்சல் குளம், சுரங்கத் திட்டங்கள், தொழிற்சாலைகள், தண்ணீர் விநியோகிப்பாளர்கள், குடியிருப்பாளர் நலச் சங்கங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் உட்பட அனைத்து நிலத்தடி நீர் பயன்பாட்டாளர்களும், ஜூன் 30ம் தேதிக்குள் மத்திய நிலத்தடி நீர் ஆணையத்திடம், நிலத்தடி நீர் எடுக்க அனுமதி பெற வேண்டும்.

அதற்கான விண்ணப்பம் அளிக்கும்போது ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். ஒருவேளை, மத்திய நிலத்தடி நீர் ஆணையத்திடம் தடையில்லா சான்று பெறாமல் தொடர்ந்து நிலத்தடி நீர் எடுக்கும் பயன்பாட்டாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த சில நாட்களாக இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், தனி வீடு வைத்திருப்போர், குடியிருப்புதாரர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதனிடையே இதுகுறித்து தமிழக நீர் வளத்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். அதில், தமிழகத்தை சேர்ந்த பல நிறுவனங்கள் வெளிமாநிங்களில் தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களை நிர்வகித்து வரும் நிலையில், பொதுவான விளம்பரமாகவே இது கொடுக்கப்பட்டுள்ளது. 20 மாநிலங்களில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் ஆணையங்கள் இல்லாத நிலையில், அந்த மாநிலங்களில் மத்திய நிலத்தடி நீர் ஆணையம் அப்பணியினை செய்து வருகிறது.
தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் உள்ள நிலத்தடி நீர் ஆணையங்கள் நிலத்தடி நீர் குறித்த விவகாரங்களை கவனித்து கொள்ளும். மேலும், தமிழகத்தில் நிலத்தடி நீர் மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டு விதிமுறைகள் தமிழக அரசினால் கையாளப்பட்டு வருகின்றன.
மத்திய அரசின் வழிகாட்டுதலோடு முறையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதனால் மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் பொது அறிவிப்பு தமிழகத்திற்கு பொருந்தாது எனவும், மறு அறிவிப்பு வரும் வரை தற்போது உள்ள விதிமுறைகளே தொடர்ந்து அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications