சென்னை உயர் நீதிமன்ற.. பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி நியமனம்.. மத்திய சட்ட அமைச்சகம் அறிவிப்பு
சென்னை: அலகாபாத் உயர் நீதிமன்றம் நீதிபதி முனிஷவர்நாத் பண்டாரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பொறுப்பேற்கும் வரை தலைமை நீதிபதியாக (பொறுப்பு) துரைசாமி பதவி வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜி கடந்த 2021 ஜனவரி மாதம் 4 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார்.
கடந்த 10 மாதங்களாக அவர் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த காலத்தில் பல வழக்கு விசாரணைகளில் அவர் வேகமாக விசாரணை நடத்தினார்

இடமாற்றம்
இந்தச் சூழலில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜியை இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் கொலிஜியம் கடந்த வாரம் பரிந்துரை செய்தது. சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற கொலிஜியம் பரிந்துரை அளித்திருந்தது. இந்த திடீர் இடமாற்ற பரிந்துரைக்குப் பலரும் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

எதிர்ப்பு
இந்த இடமாற்ற பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி 237 வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றம் கொலிஜியத்திற்கு கடிதம் எழுதினர். மேலும், இந்த பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மெட்ராஸ் பார் அசோசியேஷனில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அதுமட்டுமின்றி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் போராட்டத்தையும் நடத்தினர்.

பொறுப்பு தலைமை நீதிபதி
இருப்பினும், சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயாவுக்கு இடமாற்றம் செய்யக் குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். மேலும், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி முனிஷவர்நாத் பண்டாரி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். இந்தச் சூழலில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வரர் நாத் பண்டாரி பதவியேற்கும் வரை, சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக (பொறுப்பு) மூத்த துரைசாமி பதவி வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உருக்கமான கடிதம்
முன்னதாக பிரிவு உபசரிப்பு விழாவில் கலந்து கொள்ளாமல் கிளம்பிய சஞ்ஜிப் பானர்ஜி, சக நீதிபதிகளுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "இந்தியாவிலேயே சென்னை வழக்கறிஞர்கள் சிறப்பானவர்கள். இதுநாள் வரை ஆதிக்க கலாச்சாரத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். அதை முழுமையாகத் தகர்த்தெரிய என்னால் இயலவில்லை.இந்த அழகான மாநிலத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் கடன்பட்டுள்ளேன் எனது சொந்த மாநிலம் என 11 மாதங்களாகச் சொல்லிக் கொண்டிருந்த மகிழ்ச்சியிலேயே உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்" எனத் தெரிவித்திருந்தார்.
-
போலீஸே உடலை அடக்கம் பண்ணிடும்! ஆகாஷ் வழக்கில் நீதிமன்றம் எச்சரிக்கை! விடாப்பிடியாய் பெற்றோர்! பரபர -
100 நாள் ஆச்சு.. இன்று மாலைக்குள் ஆகாஷ் உடலை வாங்குங்க.. பெற்றோருக்கு கெடு விதித்த ஐகோர்ட்! -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
விவாகரத்து வழக்குகளில் பெயர்களை வெளியிடக் கூடாது - உயர்நீதிமன்ற கிளை போட்ட உத்தரவு! - -
3 மாதங்களாக மார்ச்சுவரியில் ஆகாஷ் உடல்..நீதிமன்ற உத்தரவால் 102வது நாளில் தகனம்! உறவினர்கள் அஞ்சலி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை












Click it and Unblock the Notifications